தூயராம் எங்கள் கடவுளே
துயில் எழுந்த நாங்கள்
துதிக்கிறோம் உமயே
கடந்த இரவிலே
கண்ணயராது
கருத்தாய் காத்தவரே – இந்த
அதிகாலை நேரத்தில் உம்மை
தியானித்திருப்போம்
இந்த நாளினை
இனிதாக்கியவரே
இன்றைய பணிகளிலே – உமது
சொற்படி வாழவும் வாழ்த்தவும்
இறையாசியருளும்
நாளைய பொழுதின்
நாய(கனே)கியே
நிதமும் நன்றியுடன் – நின்னையே
நினைத்துருகும் என் நெஞ்சிலே
மாறா நின் கருணைப்பொழியும்- ஆமேன்
காட்சன் சாமுவேல்
குறிச்சொற்கள்: இறைவேண்டல்