அன்பின் திருவுருவாம் கடவுளே
உமது அன்பின் ஒளியை
பிறரிடம் கண்டு கொள்ள
எங்கள் கண்களை திறவும்
கிருபை நிறை இயேசுவே
உமது கிருபைக் கடலை
தோழமையோடு பகர
எங்கள் இதயத்தை திறவும்
ஒருமை பகரும் தூய ஆவியே
உமது ஒப்பிலா ஒருமையை
பாரிலே பறைசாற்ற
பகரும் நெஞ்சைத் தாரும்- ஆமேன்
காட்சன் சாமுவேல்
குறிச்சொற்கள்: இறைவேண்டல்