எங்கள் இனிய இயேசுவே!
இன்று
உமது கரங்களால் மீட்கப்பட்டேன்
உமது அன்பை அனுபவித்தேன்
உமது இருத்தலை உணர்ந்தேன்
உமது கற்பனைகளை பாவித்தேன்
உமது கருணையில் கட்டுண்டேன்
உமது ஆசியை பெற்றேன்
இப்போதே
எனது கரங்கள் வீழ்ந்தோரை மீட்க வழிகாட்டட்டும்
எனது அன்பு பிறர் உம்மை அனுபவிக்க அறைகூவட்டும்
எனது வாழ்வு வாழ்விழந்தோரை வாழ்விக்க பயன்படட்டும்
எனது தகவுகளால் எளியவர் உமது நீதியை உணரட்டும்
எனது கருணை பெலவீனரை திடப்படுத்தட்டும்
எனது ஆசி அனைவருக்கும் உரித்தாகும் வாழ்த்தாகட்டும்- ஆமேன்
காட்சன் சாமுவேல்
குறிச்சொற்கள்: இறைவேண்டல்