நான் ஒரு ஆயனைக் கண்டேன்
அவன் வாசல் வழியாக நுழைகிறான்
கையில் ஒரு தடி, அதைக் கொண்டே ஆடுகளைக் காக்கிறான்
அவன் முன் செல்ல, பின்னே அனேகம் ஆடுகள்
புல்லுள்ள இடங்களில் ஆட்டை மேய்க்கிறான்
நல்ல தண்ணீரை அளிக்கிறான்
காணமற் போன ஆட்டை சிரத்தையோடு தேடுகிறான்
ஆடு அவன் சத்தத்தை அறிந்திருக்கிறது
கண்டுபிடித்தபோது மகிழ்வடைகிறான்
நான் ஒரு நல் ஆயனைக் கண்டேன்
நானே நல் ஆயன் என்றான் ஒருவன்
பின்வாசல் வழியாக நுளைந்தபடியே
அவனோடு ஒருசில கைத்தடிகள், அதைக்கண்டே ஆடுகள் நடுங்குகின்றன
அவன் முன்னேறியபடி இருக்க, ஆடுகள் பின்தங்குகின்றன
உணவற்ற இடங்களில் அவை ‘பலியாக்கப்படுகின்றன’
‘தண்ணியே’ அவைகளுக்கு ‘காட்டப்படுகின்றன’
குழப்பமான அறிக்கைகள் வடிவில் மெய்ப்பனின் குரல்.
திக்கற்றுத் திரியும் ஆடுகள்,
வழிதெரியாமல் தொலைந்து போகின்றன,
கண்டும் காணாமலும் மகிழுகிறான்,
கிடைத்ததைச் சுருட்டும் திருடனாக!
காட்சன் சாமுவேல்
குறிச்சொற்கள்: கவிதை