பிரார்த்தனாஞ்சலி- இறைவேண்டல்களின் தொகுப்பு


பிரார்த்தனாஞ்சலி எனும் இறைவேண்டல்களின் தொகுப்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் மற்றும் அவர் மனைவி லில்லி அமிர்தம் ஆகியோரின் நெடும் இறைபணியின் தொடர்ச்சி ஆகும். உலக திருச்சபை மாமன்றத்தின் ஒருங்கிணைப்பு கற்பிப்பாளராகவும் தென் கேரள சி எஸ் ஐ அத்தியட்சராகவும் தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் விரிவுரையாளரகவும் முதல்வரகவும் தன் கூர் திறமைகளை இறைவல்லுனர்களுக்கும் இறைபற்றாளர்களுக்கும் ஏன் பனைதொழிலாளர்களுக்கும் எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தவர் அறிவர் சாமுவேல் அமிர்தம்.  இயெசு தனது சீடர்களுக்கு கற்பித்த இறைவேண்டலயே மையமாகக் கொண்டு தனது இறைபணியில் சேகரித்த அரிய பல மன்றாட்டுக்களை தனது மனைவியோடு சேர்ந்து இந்த வேன்டுதல் மாலையைத் தொகுத்தளிக்கின்றார். பேராசிரியர் லில்லி அமிர்தம் சிறந்த ஓவியர் மற்றும் சமயற்கலை நிபுணர். பாரசாலையை அடுத்துள்ள கிராம மற்றும் வறிய பெண்களுக்காக சேவை புரிந்துவருகிறார். தனது பேரக்குழந்தைகளுக்காக அன்பும் இறைபற்றும் நிறைந்த தாத்தக் பாட்டி தேடி சேகரித்து கொடுத்த இறையியல் பொக்கிஷம் இது.

தனது முகவுரையில் இறைவேண்டல் குறித்த தன் தரப்பை அவர் தேர்ந்த இறையியல் வல்லுனராக மட்டுமல்லது பொறுப்புள்ள போதகராகவும் தெளிவுபடுத்துவது இப்புத்தகத்தின் ஆழ்ந்த இறைத்தேடலை உறுதிப்படுத்துகின்றது. ‘இறைவேண்டல் என்பது விண்ணப்பம்  ஆயினும் அது பிறருக்காக அதிகமாகவும் நமக்காக சொற்பமாகவும் இருப்பதுவே’ என்கிறார். அதுபோலவே ‘இறைவேண்டல் இறையோடுகூடிய உரையடல் எனினும் இறைவார்த்தயை அதிகமாக நிதானிக்கவும் சொற்பமாக பேசுவதுமே’ என உறுதிபடக்கூறுகின்றார். இன்று சில கிறிஸ்தவ மத போதகர்கள் தொலைபேசியில் கடவுளோடு பேசுவது போன்ற பிம்பத்தை ஆசிரியர் குறுநகையோடு மறுக்கிறார்.

பல புராதன இலக்கியங்களிலிருந்தும், இதிகாசன்களிலிருந்தும், பின்நவீன நூல்களிலும் இருந்து ஆசிரியர் பல வேண்டல்களை சரளமாக எடுத்தாழ்கிறார். கிறிஸ்தவ இறையியலாளர்கள், பற்றாளர்கள், புனிதர்களோடு கூடவே பிற மத சான்றோர்கள், சாமானியர்கள் மற்றும் புனிதர்களின் இறைவேண்டல்களை இழையோடவிட்டிருப்பது வேண்டல் செய்யுமிடம் ஒன்றே என அறுதியிட்டுக்கூறுகிறது. வேண்டல் செய்யும் காலம் சூழல் நபர்கள் என வகைவகையாக வேண்டல்கள் காணக்கிடைக்கின்றன. மனிதன் இறைவேண்டல் செய்வது நாமறிந்த்தே. இங்கோ எருது, சேவல், ஆமை, எறும்பு மட்டுமா கேரள யானை கூட நகைசுவை வேண்டல் உகுப்பது அருமை. கருத்தாழமிக்க சூழலியல் வேண்டல் துவங்கி, காதலாகி     கசிந்துருகும் வேண்டல் வரைக்கும் அவர் பயணிக்கும் ஆன்மீகம் விரிவானது. இறைவனை பற்றிக்கொள்ளும் சீடத்துவ வேண்டல்கள், நெஞ்சை ஊடுருவும் ஓரிருவரி அம்பு வேண்டல்கள், தேசத்திற்கான மன்றாட்டுக்கள் என சுமார் 377 வேண்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன. துயருற்றோருக்கான வேண்டல்கள் புடமிடப்பட்ட ஆறுதலின் வார்த்தைகள்.

இதன் நெறியாளர் மதுரையைச் சார்ந்த நந்தினி முரளி. இவர் ஆங்கில பத்திரிகைகளிலே தொடர்ந்து எழுதுகிறவர். தனது வாழ்வில் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். பெண்ணிய கருத்தியல் கொண்டவர். முன்னுரை அளித்துள்ள அறிவர் தயான்சந்த் கார், அமிர்தம் அவர்களின் தலைச்சிறந்த மாணவர். பிற்பாடு  தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காட்சன் சாமுவேல்

மொழி ஆங்கிலம்      விலை ரூ 150     பக்கங்கள் 288     முதற் பதிப்பு 2004

கிடைக்குமிடம்
தமிழ்நாடு இறையியற் கல்லூரி
அரசரடி, மதுரை- 625010
தொலை பேசி: 0452 260 2352

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: