இரயில் பயணத்தில்


காக்கும் கடவுளே!
எங்கள் அலுவலகத்துக்கு புறப்படுகின்றோம்.
நெரிசலான இரயில்தான்
தினமும் பழகிய ஒன்று தான்
என்றும் போல் இன்றும் உடன் வாரும்

மூவர் இருக்கையில் நால்வர் அமர்வது
பகிர்வின் பண்பல்லவா?
சுமைகளை வாங்கி தாங்கியில் வைப்பது
ஊதியமற்ற உதவியல்லவா?

வயோதிபர் மற்றும் பெண்களுக்காக இடமளிப்பது
அன்புகூறுதலின் செயலல்லவா?
வறியவர் விற்கும் பொருட்களை வாங்குதல்
பொருளுள்ள வாழ்வல்லவா?

இறங்குமிடம் அறியா புதிய பயணிகட்கு
திசைக்காட்டும் கருவியல்லவா?
உறவினர்கள் தவறி கதறியழும் பாலகர்க்கு
பாசம் காட்டும் தாயுள்ளமல்லவா?

மயங்கி விழுந்த எந்த அன்னியருக்கும்
நல்ல சமாரியர்களல்லவா?
நெருக்கத்திற்குள்ளும் பஜன் பாடிடுவது
துதிக்கும் உள்ளமல்லவா?

ஆம் கடவுளே!
குறைகள் பலவிருந்தாலும்
ஒற்றுமையின் சின்னமாம்  இரயில் பயணத்தில்
உமது காக்கும் கரம்
எங்களோடிருப்பதை முழுவதுமாக உணருகிறோம் – ஆமேன்

Advertisements

குறிச்சொற்கள்:

3 பதில்கள் to “இரயில் பயணத்தில்”

 1. sankar60 Says:

  I came to this site due to Jeyamohan’s recommendation… It is a wonderful experience to go thru your words… I could see the sincerity and deep understandings in your words…

  Sankar

 2. pastorgodson Says:

  அன்பு சங்கர்!

  வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி.
  எனது இணயதளத்தை அறிமுகம் செய்தது ஜெயமோகன், பதிவிடுவோர் அனைவரும் பிற மத நண்பர்கள். கடவுள் தமது ஆசியை நம்மனைவர் மீதும் பொழிவாராக.

  காட்சன்

 3. இரயில் பயணத்தில் « Rammalar’s Weblog Says:

  […] நவம்பர் 12, 2008 இல் 6:42 மு.பகல் (ஆன்மீகம்) இரயில் பயணத்தில் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: