கள்ளன் போலீஸ்


போலீசாரோடு கூடிய அனுபவம் யாவும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. அனைத்து போலீஸ் நகைச்சுவை துணுக்குகளையும் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அவை என்னை ‘இக்கிலு’ காட்டும். பெரும் புண்ணியவான்கள், பெரிய (மீசைவைத்த) அய்யாமார், காவல் தெய்வங்கள், என்னை தயை கூர்ந்து, பொறுத்து, காத்து, மன்னித்து அருளவேண்டும். அடிவாண்டும் மின்னாலே சென்னா விட்டிருவினும், கேட்டியளா!

சத்தியமா மக்கா க்யாட்டுக்க, நான் வெட்டூர்ணிமடத்துல உள்ள எனக்க அக்காளுக்க வீட்டுக்காக்கும் போனது. அஞ்ச ராத்திரி நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு கதையளந்துட்டு இருந்தா ந்யாரம் போனதே தெரியல்ல. அக்காட்ட செல்லிண்டு வந்தா மெயின் ரோட்டுல ஆளு ஒருத்தரையும் காணல. கடயெல்லம் பூட்டியாச்சி. மருந்து வாண்டுதவிய மட்டும் ஒண்ணு ரெண்டு பேரு அஞ்சோட்டும் இஞ்சோட்டுமாட்டு பென்சாம் ஆஸுபத்திரிக்க கிட்ட நடக்கினும்.

என்னல செய்யது? மணி பதினொண்ணர ஆயிப்போச்சுல்லா? லெவன் எல் தக்கல வண்டியும் போயிருக்கும். ரோடு பாலீஸ் இட்டதுபோல கிடக்கு. பின்னால கொஞ்சம் ஆமணக்கு எண்ண தடவீட்டு இருந்து நரங்கினா ந்யேரா பார்வதிபுரம் வருகது மாரிதான் எறக்கமும். நடக்க முடியாதுடெ! வண்டி யாதெங்கிலும் கிட்டினா கொள்ளாம்னு நானும் நிக்கிதேன்.

ஆண்டவரே ஏசுவே என்ன கைவிடாதேயும் அப்பாண்ணு ஒரே ஜெபம். கடவுள் எனக்க விளியக்கேட்டது போல தூரத்துல ஒரு வெளிச்சம். வடசேரி சந்தயிலேண்டு டக்கர்ல சாதனம் கொண்டு வரினும். ஏசுவே இவனுவ நெறுத்தணுமே. “என் விசுவாசம் என்னை இரட்சித்தது”. வண்டி நின்னப்போ தான் பாக்கியேன்…… மக்கா லேய் போலீசுல.

சார் தெரியாம நெறுத்திட்டேன், நீங்க போங்க…

அது எப்படி முடியும்! சார் நெறுத்தினதுக்க பின்னாடி நாங்க நிக்காம போகலாமா?

 ஜீப்புக்க பின்னால குகையிலேண்டு வெளிவந்த மொத போலீஸு அன்பாதான் விளிச்சான். ஆகா போலீஸ் எனது நண்பன் எண்ணு செல்லியது செரிதான். போவுலாமா போப்பிடாதா என்ன செய்யுததுண்ணு தெரியேல கேட்டியா. கமுக்கூட்டுக்குள்ள வெச்சி சந்தக்கி எடுத்திட்டு போற கோளி போல நான் முளிக்குதேன்.

இல்ல அண்ணா நான் நடக்குதேன் ….

அய்யோ கொகைகுள்ளேண்டு இன்னொரு ஆத்மாவும் எறங்குதே? ஏசப்பா…

 எஞ்சல போற….

மக்கா லெய்! நமக்குள்ள எதுவும் விளிப்போம்! இன்னொருத்தன் நம்மள பிலேண்ணு விளிச்சதுண்டா? தேச்சியமா வருது ஆனா ஒண்ணும் செய்யப்பற்றாது. ஓடீரப்பிடாதுண்ணுதான் ரெண்டுபேரும் சுத்தி நிக்கினும். என்ன கேஸுல இட்டு பிளிவினுமோண்ணு எல்லாம் கலங்கிப்போச்சு.

பார்வதிபுரம்….

ஒரு ஸ்டாப்புலேயும் நெறுத்தாத்த கேரளா பஸ் ரைவர் கூட நெறுத்திய இடமாக்கும். இவிய என்னப்பபாத்து என்ன க்யாட்டினும் தெரியுமா? “அது எஞ்சல இருக்கு” ண்ணாக்கும்.

அடுத்த ஸ்டாப்புல….

எவா நிக்குதா? …

சத்தியமா மக்கா சொல்லுதேன், எனக்கு அப்பம் மனசிலாவேல. பின்ன, யப்பா என்னத்த க்யாக்குதான்ணு பயங்கரமாயீற்று.  லே, நம்ம எஞ்சயெல்லம் போயிறுப்போம், கன்னியாமாரி, கொளச்ச, பப்பனாவுரம், ப்யாச்சிப்பாற…. எண்ணெங்கிலும் டதி ஸ்கூலுக்கோ, பெண்ணுவ காலேஜுக்கோ போய் நின்னிருப்போமால… எளவுடுப்பான் என்னத்த க்யாக்குயதுண்ணு இல்லியா?

இல்ல வீட்டுக்கு…

அதான் எவளுக்க வீட்டுக்குல போற? நாங்க கொண்டு விடுதோம்…

இல்ல… எங்க வீட்டுக்கு….

ஏறுல வண்டீல….

மரியாத மானமெல்லாம் போச்சு. போலீசுக்க வண்டீல ஏறவேண்டியவனா நான்? சத்தியமா நான் யாரேல. என்ன தூக்கி உள்ள வச்சினும். கொகைக்குள்ள இன்னும் ரெண்டு போலீஸு கையில தடியோட. உள்ள இட்டே இடிப்பினும். எக்கப்போ… ஏசுவே…

எங்கல களவாணப்போன?

 நமக்க கள்ள முளியப்பாத்து களவாணிபயண்ணு நெனச்சிட்டினுமோ. வண்டி உருளத்தொடங்கியாச்சி, எனக்க தலயிம் கெறங்க தொடங்கியாச்சி.

சார், நான் ஸ்டூடண்டு…

என்னலே படிச்சுத? …பாத்தா அப்பிடி தெரியேலிய…

பி டி படிக்குதென் சார்….

என்னல பீடி குடிச்சிதியா? என்னபடிப்பாக்கும்பலே அது?

கடவுளே! இவன்மாருக்கு நான் என்னத்த செல்லுவேன்? பேச்சிலர் ஆப் டிவினிட்டிண்ணு சென்னா, பேச்சிலரா தெண்டி நடக்குதவண்ணுல்லா செல்லுவினும்? கடவுள் தான் காப்பத்தணும்னு நெனச்சி, அந்த நரகத்துக்க உள்ள நடுங்கிட்டே இருக்குதேன்.கடவுள் பெரியவரு தான் இல்லியா? ஒரு போலீசுக்கு பி டிண்ணா என்னாண்ணு தெரிஞ்சிருக்கு.

என்ன பாஸ்டருக்க படிப்பா?

ஆமா…..

பின்ன ஒருத்தரும் எனக்கிட்டே பேசேல. அவியளுக்குள்ள வியாக்கியானம் செய்திட்டிருந்தினும். பார்வதிபுரம் வந்தவுடனெ…. “செரி நாட்டேர எரக்கி விடுங்கா”ணு ஒரு சத்தம்.

ஒரே குளும. என்ன ஒரு சந்தோஸம். “உள்ள” போயிட்டு வந்த மாரி ஒரு பீலிங்.

கர்த்தர் உன் போக்கயும் வரத்தயும் இது முதலா எண்ணைக்கும் காப்பருண்ணாக்கும் சங்கீதம் சொல்லுது.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: