பிறப்பின் இரகசியம்


கிறிஸ்மஸ் அன்று சிறுவர்களுக்காக ஒரு குறு நாடகம் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். மண்டையை குழப்பிக்கொள்ளாதபடி நெட்டிலிருந்து ‘சுட’த்தக்கதாக ஒன்று கிடைத்தது. மொழி “பெயர்ப்பு” செய்து சிறுவர்களிடம் கொடுத்தபோது அசத்திவிட்டார்கள்.
உங்களுக்காக இதொ….
போதகர்: மாற்கு
மாற்கு: உங்களுக்கு சமாதானம்
போதகர்: மத்தேயு
மத்தேயு: கிறிஸ்து ராஜாவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்
போதகர்: லூக்கா

லூக்கா: பாரம்பரியத்தின்படி வணக்கம்

போதகர்: யோவான்

யோவான்: பிதாவை ஏக புத்திரன் அறிந்திருக்கிறார்.பிதாவும் அவரை அறிவார்.

போதகர்: தங்களது வருகைக்கு நன்றி.இயேசுவின் பிறப்பை குறித்து உங்கள் கருத்துக்களை கேட்க அழைத்திருக்கிறோம். உங்களில் இருவர் இரண்டு விதமான பிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறீர்கள், மற்றும் இருவர் பதிவு செய்யாமலேயே விட்டு விட்டீர்கள். புரியும்படியாக கூற வேண்டுமென்றால், பல வருடங்களாக நாங்கள் கிறிஸ்து பிறந்த நிகழ்வை இவ்விதமாக கோர்த்து ஒரு சித்திரமாக வைத்திருக்கிறோம். அதாவது ஞானிகள், பெத்லகேம் நோக்கி நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டார்கள், நட்சத்திரம் நின்ற இடத்தின் கீழே பாலனை அவர்கள் முன்னணையிலே கிடக்கக் கண்டார்கள் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தையோடு வந்திருந்தனர், ஞானியர் பரிசுகளை கொடுத்தனர்.

மத்தேயு: ஒரு நிமிடம்! நான் உங்கள் கருத்தை சற்று நேர் செய்ய வேண்டும். இயேசு ராஜா முன்னணையிலே பிறந்தாரா?மேய்ப்பர்கள் அவரை சுற்றி நின்றனரா? விளையாடுகிறீர்களா?இல்லை இல்லவே இல்லை. இயேசு ஒரு இல்லத்திலே பிறந்தார், ஒருவேளை அது மாளிகையாக இல்லாமல் இருக்கலாம், அனால் கண்டிப்பாக ஒரு மாட்டு தொழுவத்திலல்ல. ஆமாம் மேய்ப்பர்கள் எங்கிருந்து வந்தார்கள்?…ஞானியரே விலையுயர்ந்த பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். அது தான் ஒரு ராஜா பெறவேண்டிய உயரிய பரிசு.

லூக்கா:  மத்தேயு,  உனக்கு தான் எல்லாம் தெரியும் என நினைக்க வேண்டாம். இயேசு ஒரு தீர்க்கதரிசி, அவர் எளியோருக்கு நற்செய்தி கொண்டுவந்தவர்.  ராஜாக்களை குறித்த கவலைகள் ஒன்றும் அவருக்கு இல்லை. எளிய மேய்ப்பர்களே அவரை கண்டு வணங்கினர். இது என்ன ஜோசியமா…. அந்த நட்சத்திரம் எங்கேயிருந்து வந்தது.  மேய்ப்பர்களுக்கு தோன்றிய தூதர்கள் அல்லவா இயேசுவை துதித்து பாடினார்கள்?

மத்தேயு: லூக்கா நீ ஒழுங்காய் போய் உன் வீட்டுப்பாடத்தை செய். ஒரு ராஜா பிறந்தாரென்றால், ஒரு நட்சத்திரம் கண்டிப்பாக உதிக்க வேண்டும் என்பது ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே!

லூக்கா: நான் அவரை அரசன் என்று கூறவில்லையே. அவர் ஒரு தீர்க்கன் என்றல்லவா கூறுகிறேன்.

மத்தேயு: அப்படியானால் அவருடைய பாரம்பரியம் என்ன? யோசேப்பு தாவீதின் வழித் தோன்றல் இல்லையா? சாலோமோன் மற்றும் யோசியா அரசர் வழி வந்தவரல்லவா? ராஜ பரம்பரை தானே.

லூக்கா:  நீ எதையோ குழப்புகிறாய். அவர் தாவீதோடு உறவுள்ளவர் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் சாலோமோனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தாவீதின் இன்னொரு மகனான நாத்தானின் வழித்தோன்றல்

போதகர்: ம்ம்ம்…எனக்கு ஒன்று தோன்றுகிறது….. ஒருவேளை யோசேப்பு இயேசுவுடைய தந்தை இல்லையோ?

மாற்கு: அவர் எங்கே எப்படி பிறந்தால் உங்களுக்கு என்ன? யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பதில் தான் என்ன பயன்? எது முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் சொன்ன கருத்து தான் முக்கியம்.

மத்தேயு: உண்மை தான், ஆனாலும் அவர் பிறந்திருக்க வேண்டுமல்லவா. இயேசுவின் வாழ்வின் முக்கிய பகுதியல்லவா அது?

லூக்க: நானும் ஒத்து கொள்ளுகிறேன். ஒருவனின் பிறப்பே அவன் எவ்வளவு பெரியவனாவான் என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வு, இல்லையா?

மாற்கு:   இருக்கலாம்! நமக்கு தெரிந்திருந்தால் நாம் அதை எழுதலாம். நமக்கு தான் தெரியாதே!

யோவான்: நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்…..

போதகர்: என்ன?… ஓ… யோவான் நீங்கள் ஏதேனும் கூற முற்படுகிறீர்களா

யோவான்: கிறிஸ்துவே வார்த்தை. ‘அந்த வார்த்தை’

போதகர்: “அந்த வார்த்தை”?

யோவான்: ஆம். அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று… ஒருவேளை நீங்கள் அனைவரும் இயேசுவின் பிறப்பை சுற்றி சுற்றி வந்தாலும் மையக் கருத்தை விட்டு விடுகிறீர்கள். கிறிஸ்து ஆதி அந்தம் இல்லாதவர். அவர் சுயம்பு. அவரது உலக தோற்றம் உங்களை போன்றோரின் குழப்பங்களை தீர்ப்பதற்க்காகவே

மாற்கு: நீ பிதற்றுகிறாய்…

யோவான்: இறுதி நாட்களில் நான் சொன்னவைகளின் உண்மை புரியும். அன்று நீங்கள் யாவரும் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள்.

ஆங்கிலத்தில் இன்னும் அருமையாக முன்னுரையோடு உள்ளது. சுவைத்து மகிழ http://www.transmissioning.org/2007/12/12/nativity-mystery-5-minute-skit-for-5-actors-by-jsnodgrass/

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: