அத்திமரத்தை சபித்தல் – ஒரு விவசாயியின் பார்வை


மரங்கள் வெட்டப்படுவது ஒரு மிகப்பெரிய இயற்கை சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்ததை அறிந்து, இருபதாம் நூற்றண்டின் இறுதியில் தொண்டு நிறுவனங்களும் பல மக்கள் அமைப்புகளுமாக இணந்து நின்று பலவித முயற்சிகளைக் கையாண்டு மரங்களைப் பாதுகாத்தனர். “சிப்கோ(கட்டிபுடி) அந்தோலன்” எனும் ஒரு இயக்கம் எழுபதுகளில் தங்களை மரத்திற்கும் கோடாலிக்கும் நடுவே நிறுத்தி மரங்களை காப்பற்றிய பெண்களால் இந்தப் பெயரைப் பெற்றது.

மரரங்களை பாதுகாக்க வேண்டும் என அனைவரும் அறிந்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில் இயேசு அத்திமரத்தை சபித்தார் என்பது சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிறிஸ்தவ பின்னணியத்தில் நாம் மாற்கு 11: 12 – 14 வரை வாசிக்கும் போது, நமது எண்ணமெல்லம் “ஏன் அவர் ஒரு எளிய அத்திமரத்தை சபித்துவிட்டார்? என்பதே. நமக்குத் தெரியும், “ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல” என்பதால் எந்த ஒரு மரமும் தன் கனியைத் தர இயலாது.

சூழலியலாளர்களைப் பொறுத்தவரை, பழங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல, மரம் இருப்பதே முக்கியம். ஓரு மரம் தன்னை ஒரு சூழலோடு பிணைத்துள்ளது, அதைப் பிரிப்பது அந்த சூழலில் அதைச் சார்ந்து வாழுகின்றவற்றிற்கு இழைக்கும் தீங்காகும். இவ்விதமாக நாம் காணும் போது இயேசு இருபத்தியோராம் நூற்றாண்டிலே “விசாரணைக் கைதியாக” நிற்கிறார்.

மாற்கு நற்செய்தி நூல் இந்த நிகழ்வை குருத்தோலை ஞயிறுக்கு முன்பதாகவும் மத்தேயு அதன் பின்பதாகவும் குறிப்பிட்டிருப்பது பதிவின் முரண்பாட்டுத் தோற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருத்தியலை இன்றய அவசர பிரச்சனையோடு நேரடியாக தொடர்பு படுத்துவது நமக்குத் தெளிவைத் தராது.

தனது கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக கொடுத்த அன்பின் ஆண்டவர் எப்படி ஒருவேளை உணவுக்காக ஒரு மரத்தை சபித்திருப்பார்?அனேகரர், நூற்றாண்டுகளாக இந்த வேதபகுதியுடன் முட்டி மோதி விளங்கிக்கொள்ள பிரயத்தனப் பட்டது உண்டு. பலவித வியாக்கியானங்கள் வந்தபடியே உள்ளன. மேலும் வந்து கோண்டிருக்கும். இக்கட்டுரை ஒரூ விவசாயியின் பார்வையில் இந்த பகுதி எதை விளக்க முற்படுகிறது என்பதே!

இயேசு ஒரு விவசாயி

 இயேசுவுக்கு தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்தவைகளைப் பற்றிய அவதானிப்பும் கூர்ந்த பார்வையும் நாம் உணர்ந்துகொள்ளாதது. தனது தந்தையின் தச்சுப் பட்டரையில் மட்டுமல்லாது அவரது விரிந்த பார்வை விவசாயம், மீன்பிடித்தல் போன்றவற்றில் கூட இருந்திருப்பதை நாம் திருவிவிலியத்தில் காண முடிகிறது. தனது உவமைகளில் அவர் விவசாயம் சம்பத்தமான உவமைகளைக் குறிப்பிடுவது அவரை ஒரு முழு விவசாயியாகவே நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஓரு சிறந்த விவசாயிக்கு தனது தோட்டத்திலுள்ள மரம் செடி கொடி என்ன “பேசுகின்றன” என்பது புரியாதா என்ன?

மரம் செடி கொடிகளாலே “கேட்க” முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணமிருக்கின்றன. எங்களுரைப் பொறுத்தவரை “ ரோட்டு சைடுல முருங்கைய வெச்சா ஆளரவெம் கேட்டு நல்லா காய்க்கும்” என்று சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன் கண்டுமிருக்கிறேன். ஓரு விவசாயியாக இயேசு அத்திமரத்தை பார்வையிட்ட போது, அது இனி அதிக காலம் நீடிக்காது என அறிந்து அது பயன் தரும் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை உறுதி செய்தபின் “இனி உன் கனியை யாரும் உண்ணவேக் கூடாது” என்றர்.

எனது பசி அல்ல

இயேசுவின் திருப்பணிகளை முழுவதுமாக புரிந்து கொள்ளத்தவறினோமானால் நாம் இந்த வேத பகுதியின் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ள இயலாது. தான் பசியோடிருக்கும்போதே அவர் தனது பசியை இரண்டாம் பட்சமாக்கி கடவுளின் திருப்பணி செய்வதே எனது ஆகாரம் எனக் கூறி மகிழ்ந்தவர். ஏனெனில் அவருக்கு “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார்” என்பது தெரிந்திருந்தது.

 பல்லயிரக்கணக்கானவர்களின் பசியைப் போக்கியிருந்தாலும், தான் பசியினைக் கடந்து வந்தாலும், அவர் தனது பசியினை முன்னிறுத்தி எதையும் செய்ததில்லை என்பது கண்கூடு. ஒருமுறை அவர் சமாரியப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கென்று உணவு வாங்கச்சென்ற சீடர்கள் உணவோடு வருகின்றனர், எனினும் தான் உண்டு திருப்தியடைந்தத்தாகக் கூறி அவர் அதை மறுத்துவிடுவதைக் காண்கிறோம். உணவுக்கு அவ்ர் தனது ஊழியத்தில் முக்கியத்துவம் கொடுக்காததை வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதி ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது?

அழிப்பதற்கு அல்ல

இயேசு இந்த உலகத்திர்கு உயிரளிப்பவராக வந்தார். வாழ்வா சாவா எனும் கேள்வி எழும்போது நம்மால் பதில் கூற முடியாதவர்களாகிவிடுகிறோம். இயேசு இரண்டு விதமான கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று விதையானது நிலத்தில் விழுந்து மரிக்கவேண்டும். இங்கே மரணம் என்பது பெரு வாழ்வாக மாறுகிறது. இரண்டாவதாக ஒரு மரம் கனிகள் தருவதற்காக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அது தன் கடமையிலிருந்து தவறினால் அந்த மரம் பலரது வாழ்வையே கெள்விக்குள்ளாக்கிவிடுகிறது. ஆதாவது ஒன்றின் வாழ்வு பலதின் வாழ்வை நாசம் செய்கின்றது.

“நானே திராட்சை செடி; நீங்கள் அதன் கொடிகள். ஓருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” எனும் கூற்று நாம் அவரில் நிலைகொண்டாலே கனி தர இயலுமென்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. நாம் அவைகளை மீறும் போது அந்தக் கொடிகளை நெருப்பிலே சுட்டெரிக்கும் நிலை வரும். அது தண்டனையாக அல்ல மாறாக தேவை நிறைந்த கொடிகள் பற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் பொருட்டே.

மேலும் இந்தப் பகுதியை நாம் புரிந்து கொள்ள இரண்டு முக்கிய காரணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

1. இந்தப் பகுதி அத்தி மர உவமையின் ஒரு கலவை

2. இந்தப் பகுதி கனி தரா வழ்வையுடைய மறை நூல் அறிஞர்களைச் சுட்டுவது

மேற்கூறிய இரண்டு காரணிகளை வைத்துப் பார்க்கும் போது இயேசு ஒரு ஏழை விவசாயியாக தனது நியாயத்தை வெளிப்படுத்தியிருப்பதைக் காண இயலும்.

 மக்களின் மனங்களை உழுதும், நற்குல பயிர்களை இட்டும், உரமிட்டு வெலியடைத்து காவல் காத்தும் பயனேதும் இல்லை என்றால் ஏழை விவசாயி உடனடியாக சுதாரித்துக் கொள்ளவேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டுகின்றார். ஓரு ஏழை விவசாயியைப் பொறுத்தவரை இன்னுமொரு சாகுபடி என்பது அவனது வாழ்வா சாவா போராட்டமே. 

விவசாயிகளின் தற்கொலையின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்தப் பகுதியை சுழலியலாளர்களோடு ஒப்பிடாமல் ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டிய கட்டயம் உண்டு.  இன்று இயேசு நம் மத்தியில் வந்து நமது விவசாய சகோதர சகோதரிகளின் மரணத்தைக் கண்டிருப்பாரேயாகில், அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சபித்திருப்பர்.

பட்டுப்போன அத்திமரம் தரும் பாடமாக இயேசு குறிப்பிடுவது ஒப்புறவாதலே

“நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்பொழுது உங்கள் விண்ணகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்”

தன் இருப்பை அகம்பாவத்துடன் பிணைத்து, முற்சந்தியில் பகட்டுடன் நின்ற மறை நூல் அறிஞர்களையும் தலைமை குருக்களையும் இயேசு வேரோடு சாய்ப்பது, அவர்களின் பின்னால் செல்பவர்களுக்கு வேண்டுமானால் தவறாகத் தென்படலாம். அன்றன்றுள்ள அப்பத்தை பிட்கும் எளியவர்களுக்கு அது ஒரு மாபெரும் விடுதலையே!

மும்பையிலுள்ள  Church Auxilary for Social Action எனும் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களது வாராந்திர கூடுகையில் நான் கொடுத்த ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone 09870765181

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: