குருத்தோலை கொளுக்கட்டை


ஜெயமோகன் அண்ணன் அவர்களின் தெரளி பதிவைப் பார்த்த்வுடனே இதைப் பதிவு செய்யவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

நான் சிறுவனாக இருக்கும் போது பெருவிளையில் கார்த்திகை பஜனை நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன். பெருவிளை சி எஸ் ஐ தேவாலயத்தில் உள்ளவர்கள் கூடி ஒன்றாக சென்று ஊறைச் சுற்றி பாடி வருவார்கள். எனது அப்பா அருட்திரு சி சாமுவேல் அவர்கள் தனது வாலிப பிராயத்திலே ஆரம்பித்த ஒன்று இது என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். காலரா பரவியிருந்த சமயம் அது என்றும் குறிப்பிடுவதை நினைவு கூறுகிறேன்.

இந்த பஜனை நேரத்தில் நாங்கள் ஊர் முழுவதும் சுற்றியபடி வரும்போது இந்துக்களுடைய வீட்டில் எல்லாம் விளக்கு கொழுத்தி வைத்திருப்பார்கள். நம்மை வரவேற்கத்தான் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

மார்த்தாண்டத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஒருநாள் கூடப் படிக்கும் மாணவன் கொளுக்கட்டை கொண்டுவந்து கொடுத்தான். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் இது போன்ற ஒன்று செய்தது இல்லையே என்று எண்ணினேன். வீட்டில் விசாரித்த போது அது இந்துக்களுடைய பண்டம் என்றார்கள். செய்து தர மாட்டோம் என்பதை சொல்லும் வழி அது.

இந்த நேரத்தில் தான் தெரளி இலை கண்ணில் பட்டது. புதிதாக முளைத்த வியாபாரிகள் பலர் இளைக்களை கொத்து கொத்தாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கூட வந்த நண்பன் அத்துதான் தெரளி இலை எனக் குறிப்பிட்டான். பொதுவாக ஸ்கூல் ஆரம்பிக்கும் நாட்களில் இதுபோலவே சொடக்கு செடியையும் கொத்து கொத்தாக வைத்து வித்துக்கொண்டிருப்பார்கள்.

கொளுக்கட்டை எனது வாழ்வில் மறுபடியும் வந்தது நான் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தான். பனையும் அதன் பொருளாதாரமும் என்ற ஒரு சிறிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தபோது, பனை ஓலையில் பிசைந்த மாவை வைத்து அவித்து எடுக்கும் கொளுக்கட்டை மிகவும் சுவையுடனும் நறுமணத்துடனும் இருக்கும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இலக்காக அதன் ஈர்க்கில் பிரியாமல் எடுத்து அதனை V வடிவத்தில் பிரித்து மாவை நிரப்பி ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வேக வைப்பார்கள்.

குருத்தோலையில் இருந்து எழும்பும் மணம் மிகவும் மெல்லியது. யாவரையும் கவரும் தன்மையுடையது. நான் ஒருமுறை மும்பையில் பனையோலை சேகரித்து நான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் காயவிட்டேன். இரவான பொழுது அதை எடுத்து மாடிப்படியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். மறுநாள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த ஒரு பாட்டி, “நல்ல ஒரு நறு மணம் வீசுதே என்று இன்கே வந்து பார்த்தால் ஓலைகள் கிடக்கிறது, இது இவ்வளவு அருமையான வாசம் வீசும் என்று எனக்கு தெரியாது” என்றார்கள். ஓலையை எடுத்து வீசுவார்களோ என்ற பயம் நீங்கியதுதான் அப்போதைக்கு எனக்கு பெரிதாக இருந்தது.

நேற்று தாராவி சென்றிருந்த போது வழியெங்கும் பனையோலைகளை விற்றுக்கொண்டிருந்தனர். என்ன ஒரு ஓலை 20 ரூபாய் இருக்குமா என்று விசாரிக்கப்போனால் அரண்டுவிட்டேன். அதிகமில்லை வெறும் 160 ரூபாய் மட்டுமே. கொஞ்சம் பச்சையடித்தது 100 ரூபாய்.  பச்சை ஓலை 60 ரூபாய். தெரளி இலையையே காண முடியவில்லை. அப்பொழுது தான் ஒன்று உறைத்தது தாராவியில் பெரும்பாலும் திருனெல்வேலி மாவட்ட மக்கள் தான் வசிக்கிறார்கள். பனையோடு நெருங்கிய உறவு கொண்ட மக்கள். பனையோலையின் மணமும் ருசியும் அவர்களுக்குத்தான் தெரியும்.

மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பனை அதிகமாக இருக்கிறது. பனை ஏறுபவர்கள் திருநெல்வேலியிலிருந்து வந்து தங்கி கள்ளெடுக்கிறார்கள். மலாட் எனும் இடத்தின் அருகிலுள்ள மட் என்ற பகுதியில் பனை அதிகமாக காணப்படுகிறது.  இங்குள்ள ரிசார்ட்களில் பனைமரம் ஒரு முக்கிய மரமாக கருதப்பட்டு பேணப்பட்டு வருகிறது. யாரும் முறிப்பதில்லை.

இலைகளின் பயன்கள் அளப்பரியது. மருத்துவத்தை தவிர்த்தால் கூட குமரி மாவட்டத்தில் இலைகள் பயன்படும் விதம் குறித்த தனி பதிவே போடுமளவு அவை மாற்று பொருளாதார சக்தியாக அங்கே மறைந்து கிடக்கின்றது.

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

mobile: 09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: