Archive for பிப்ரவரி, 2010

அருட்பொழிவு

பிப்ரவரி 15, 2010

ஒவ்வொரு போதகரும் தங்கள் வாழ்வின் மிக முக்கிய தினமாக கருதுவது அருட்பொழிவு தினத்தைதான். அருட்பொழிவானது ஒரு போதகரின் வாழ்வில் அவர் செய்யவேண்டிய கடமைகளுக்கான முழுஅனுமதி வழங்கும் நிகழ்வு ஆகும். அதாவது போதகப் பணியில் அவர் அமர்த்தப்படுவதே. இந்நிகழ்வில் பேராயர் அருட்பொழிவு பெறும் நபரை மூத்த போதகர்கள் புடைச்சூழ திருச்சபையினர் முன்னிலையில் கடவுளுக்கென்று அர்ப்பணிப்பார். போதக பணி செய்யாமல் அருட்பொழிவு பெறுவது கடினம்.

ஒரு சிலர் இறையியல் கல்லூரிகளில் பயின்றும், இறையியல் கல்லூரியில் விரிவுரையாளர்களாக இருந்தும், பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிசெய்தும் அருட்பொழிவு பெறாமையல் முழுமை அடையாததை உணர்ந்து வருந்துவதுண்டு. சில நேரங்களில் சிலர் “எவ்விதமாகவாவது” அருட்பொழிவு பெற முயற்சிப்பதும் உண்டு. காத்திருந்து அருட்பொழிவு பெறுவதே சிறந்தது என்பதே பொதுவான கருத்து.

எனது அருட்பொழிவானது நேற்று (14:02.2010) காலை 9 மணிக்கு பேராயர் அறிவர் எலியா பிரதீப் சாமுவேல் அவர்களின் திருக்கரங்களால் சுமார் 100 மூத்த போதகர்கள் மற்றும் 200 திருச்சபை அங்கத்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுவாக அருட்பொழிவு ஆராதனையானது ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்ற போதிலும் நாங்கள் குழுமியிருந்த பூனே பட்டணத்தில் 13ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பால் எங்கள் அருட்பொழிவு ஆராதனை “ஹட்சின்ஸ் ஹைஸ்கூல்” அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. நங்கள் மொத்தம் 12 பேர் போதகர்களாக அருட்பொழிவு பெற்றோம். எங்களில் ஒருவர் பெண். மெதடிஸ்ட் திருச்சபைதான் முதன் முதலாக பெண்திருப்பணுயாளரை 1956ல் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

எனது பணி இன்னும் சிறப்பாக நடைபெறவும், கடவுளின் திருப்பெயர் பாரெங்கும் சிறந்து விளங்கவும், அவர்தம் அன்பு அனைவருக்கும் சென்றடையவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள

palmyra_project@yahoo.com, malargodson@gmail.com

09702567603


%d bloggers like this: