செவ்வாய் கொளுப்பு


கிறிஸ்தவர்களின் பண்டிகைகள் பலவும் ஒரு விசித்திர முரணையே கொண்டிருக்கின்றன. கிறிஸ்மஸை எடுத்துக்கொள்வோம், நட்சத்திரம் வழி காட்டியதால் விண்மீன்கள் தோற்றுபோகுமளவுக்கு மின் விளக்குகள், மாட்டுகுடிலோ மாளிகையை ஒத்திருக்கும் கிறிஸ்மஸ் குடில்கள், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்லச் சொன்ன ஏரோது இன்று கசாப்பு கடைக்காரனாக நம்மிடையே.

ஏன் கிறிஸ்மஸ் குறித்து துவக்க வேண்டும்? அதுவும் லெந்து காலத்தில்? கிறிஸ்மஸ் காலங்களில் தான் சபை கர்த்தரின் “வருகை”யைக் கொண்டாடப்படுகிறது. திருச்சபையின் காலண்டர் துவங்கும் நாட்கள் இவை. இதற்கு அடுத்தபடியாக காணப்படும் நாள் சாம்பற் புதன் ஆகும்.

திருச்சபையில் நான் கேள்விபடாத ஒரு வார்த்தையை நான் இணையத்தில் கண்டு கொன்டேன். அது “கொழுத்த செவ்வாய்” என்ற ஆங்கில வார்த்தை. அதாவது கிறிஸ்மஸ் துவங்கி உண்டு வந்த கொழுத்த புலாலை விலக்கும் காலமாக லெந்து காலம் நடைபெற்று வருவதால், அதன்பின்  மீதமுள்ள அனைத்து புலாலையும் சேர்த்து ஆசைதீர உண்டு களிக்கும் நாளே “கொழுத்த செவ்வாய்” என பெயர் பெற்றது.

இதில் முரண் எங்கே என்றால் நாம் இந்த வார்த்தையைக் கேள்விப்படாவிட்டாலும் திருச்சபையின் போதகர்கள் இந்த வார்த்தையை அறிமுகம் செய்யாவிட்டாலும், திருச்சபையினர் இதை மனமார புரிந்து வைத்துள்ளனர்.

திருச்சபையின் அங்கத்தினர்கள் தங்களை பலவாக ஒடுக்குவதற்கு ஆயத்தமாகும் சூழ்நிலையில் சில காரியங்களை லெந்து நாட்களில் தவிர்ப்பது வழக்கம். திருமணம் போன்ற விசேஷித்த வைபவங்கள், விருந்துகள், மதுபானம், ஒரு சிலர் சிகரட் மற்றும் இன்னபிற. லெந்து நாட்களில் பெண் பார்ப்பது தவறு என்று கூறுகிறவர்கள் உண்டு. இது போன்ற பல கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் நம்மிடையே உலவிவருகின்றன.

இவ்விதமான சூழ்நிலையில் தான் “கொளுத்த செவ்வாய்” நம்முன் முரணாக நிற்கிறது. மதுபானம், புலால், விசேஷித்த வைபவங்கள் அனைத்தும் அவசர அவசரமாக நடைபெறுகின்ற ஒரு தருணமாக காட்சியளிக்கின்றது. “கொழுத்த செவ்வாய்” இரவு 12 மணிவரைக் குடித்தால் அதன் பின்விளைவு சாம்பற் புதன் வரை இருக்கும் என்பதை இவர்கள் அறிவதில்லை.

லெந்து காலத்தில் நுழைய இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும், கர்த்தர் சிலுவைப் பாடுகளை ஏற்கும் நாட்களை நினைவுக்கூற கடமைப்பட்டவர்கள். நமது வாழ்வில் நமது பாவங்களில் நின்று அவர் நம்மை விடுதலைச் செய்ய தம்மை பணயம் வைத்த சிலுவையை நோக்கிப்பார்க்கும் உன்னத தருணங்கள்.  நாம் சீர்பட வேண்டி, நம்மை தயாரிக்கும் ஒரு முக்கியமான காலகட்டமாக திருச்சபை நிறுவியுள்ள லெந்து நாட்களை அற்பணிப்புடன் கடைபிடிப்போம்.

இயேசு கிறிஸ்து தமது நோன்பிற்கு முன்னதாக திருமுழுக்கு பெற்று ஆயத்தமானார். நாம் எப்படி ஆயத்தமாகிறோம் என்பதே நம்முன் நிற்கும் கேள்வி!

Rev. Godson Samuel

Contact:  palmyra_project@yahoo.com, malargodson@gmail.com

mobile: 09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “செவ்வாய் கொளுப்பு”

  1. இயேசு ஆசீர்வதிக்கிறார் ஊழியங்கள் Says:

    அன்பு நண்பரே! கிறிஸ்தவர்களின் பண்டிகைகள் பலவும் ஒரு விசித்திர முரணையே கொண்டிருக்கின்றன. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்லச் சொன்ன ஏரோது இன்று கசாப்பு கடைக்காரனாக நம்மிடையே.என எடுத்த எடுப்பிலேயே கிறிஸ்தவ பண்டிகைகளையே மொத்தமாக அது முரணானது என எழுதியுள்ளீர்களே!
    நீங்கள் கிறிஸ்தவரா அல்லது நாத்திகரா அல்லது வேறு மர்க்கத்தை சார்ந்தவரா என்பதை அறிய விரும்புகிறேன். காரணம் கிறிஸ்தவர் அல்லாதவர் என்றால் உமது எழுத்துக்களைப் பற்றி எமக்கு கவலையே இல்லை ஆனால் கிறிஸ்தவராக இருந்தால் நீர் யூதாஸின் வேலை பர்க்க வேண்டாம் எனவும் அதன் விளைவு சாபம் எனவும் அன்போடு எச்சரிக்கிறேன். உண்மையைபுரிந்து வேதாகம அடிப்படையில் தவறுகளை சுட்டிக் காட்டுவது நல்லது. அல்லாமல் மனம்போல கருத்துக்களை எழுதுவது உண்மை கிறிஸ்தவனுக்கு அழகல்ல எனவே இனி இதுபோல மொட்டையாக, கிறிஸ்தவத்திற்கு விரோதமாக எழுதாதீாகள் என மீண்டும் கேட்டு முடிக்கிறேன்.by danielptr3@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: