மனிதர்களைப் பிடித்தல்


பொதுவாக திறந்த கல்லறை, மகதலேனா மரியாள், கல்லறைக்குச் சென்ற சீஷர்கள் மற்றும் தேவதூதர்கள் போன்றவற்றையே மையமாகக் கொண்டு ஈஸ்டர் செய்தி அளிக்கப்படும். எனினும்  உயித்தெழுந்த ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது மூன்றாம் தரிசனத்தை மையப்படுத்தி எனது ஈஸ்டர் செய்தியை ஆயத்தப்படுத்தியபோது திருச்சபையின் சிறுவர்கள் ஈஸ்டருக்கு ஒரு ஸ்கிட் சொல்லித்தாங்க பாஸ்டர் என கேட்டார்கள். எனது திருச்சபை சிறுவர்கள் வாலிபர்களைவிட ஒருபடி மேல். சும்மா புகுந்து விளையாடுவார்கள். எனக்கும் அவர்கள் ஒரு குறு நாடகமிட்டால் எனது செய்திக்கு வசதியாக இருக்கும் என எண்ணி நெட்டில் பார்த்த ஒரு நாடகத்தை உள்வாங்கி எனக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தேன்.

இதை உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. சீஷர்களின் பெயர்கள்  பயிற்சிக்கு வேண்டி மட்டுமே. எந்த முன்னுரையும் அற்று நாம் இதைத் துவங்கும்போது க்ளைமாக்ஸ் பெருத்த வரவேற்பைப் பெறும்.

தண்டு வலித்தல்…

நாத்தான்வேல்: ஏலேலோ……

 இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நின்றபின் பேதுரு: சரி! வலையப் போடுவோமா?

தோமா: இரு! இரு! இரு! பேதுரு என்ன அவசரப்படுற? மொதல நாம வந்திருக்க இடத்ததப் பார்!

ஆழ்ந்த அமைதி,

ஆழமான கடல்

அசைந்தாடும் படகு

அழகிய நட்சத்திரம்….

பேதுரு: வாய வச்சிட்டு சும்மா இருப்பியா? மீனு பிடிக்க வந்தா மீன பிடி…. உனக்கெல்லாம் மீன் பிடிக்கிறதப்பத்தி என்ன தெரியும்? நான் பிறவியிலேயே ஒரு மீனவன். எங்க… எப்படி… எப்போ… யாரோட… அது ஒரு கலை…. சரி வாங்க!

வலையை எடுத்து வீசுதல்

பேதுரு: எப்படி இருக்கு?

 தோமா: (முதுகைப் பிடித்துக்கொண்டு) முடியல…

 வலையை இழுக்குதல்

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

யாக்கோபு: என்ன தண்ணிய தான் இவ்வளவு நேரம் இழுத்துட்டு இருந்தோமா?

யோவான்: சே! காத்து கூட வருது

சீஷன் 1: என்ன சொல்றீங்க? மீன் முள்ளு கூட கெடக்குது!

சீஷன் 2: அப்போ… இண்ணைக்கு சூப்பு மாத்திரம் தானா?

தோமா: சே ஒண்ணுமில்லயே…

பேதுரு: உன்னயெல்லாம் குட்டீட்டு வந்தேன் பாரு, என்னயெல்லாம் பிஞ்சுபோன செருப்பால அடிக்கணும்?

தோமா: (சீஷர்களுக்குளாக)பிஞ்சுபோன வல, இத்துப்போன போட்டு, இவனெல்லாம் மீன் பிடிக்கிறவன்?

பேதுரு: என்ன சொல்லுற?

தோமா: ஒண்ணுமில்ல…உங்க தெறமைய சொன்னேன்

சீஷன் 1: ஆமண்ணே! உங்கள புகழ்ந்து தள்ளுறாரு.

பேதுரு: அது கெடக்கட்டும்! இப்போ நாம வலைய போடணும்னா, எல்லாருமே ஒரேமாதிரி வீசணும். அப்போதான் மீன் கிடைக்கும்.

தோமா: ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்….

பேதுரு: நீந்தத்தெரியுமாண்ணா … தண்ணீல பிடிச்சி தள்ளீருவேன்…. எல்லாரும் வாங்க…

வலையை வீசுதல்

பேதுரு: ஹ ஹ ஹ ஹா. இப்படி போடணும்! இப்போ பார்

தோமா: என்னவோ மீன் முள்ளாவது கெடச்சா சரி

பேதுரு: நீ ஒரு சந்தேக புத்திக்காரன். உன்னையும் கூட்டீற்று வந்தேனே சரி இழு.

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

வலையை இழுத்துப் பார்த்து ஒன்றுமில்லை என அறிந்துகொள்ளுதல்.

நாத்தான்வேல்: ( உடனிருப்பவர்களிடம்) சரி வாங்க சாய குடிப்போம்…

தோமா: நான் சந்தேகப்பட்டது செரியாத்தான் இருக்கு….

பேதுரு: அமைதியாயிரு தோமா… கரையில ஏதோ சத்தம் கேட்குது.

தோமா: ஆமா இல்ல?

பேதுரு: ஆமாவா இல்லியா?

தோமா: இல்ல… கேட்குது யாரோ நம்மகிட்ட ஏதோ சொல்லுராங்க….

பேதுருவும் தோமாவும் : (சத்தமாக எதிரொலியைக் கருத்தில் கொண்டு) என்ன… சொல்றீங்கா….

 தோமா: மீனு… கெடச்சுதா….

பேதுரு : அது எப்படி உன்னைப்போலவே ஒருத்தர் சந்தேகத்தோட அங்க இருக்கிறார்?

பேதுருவும் தோமாவும்:  இல்ல…..

பேதுருவும் தோமாவும்: (சத்தமாக எதிரொலியைக் கருத்தில் கொண்டு) என்னா?…

 தோமா: வாலை …தூக்கி. பின்ன…. போடுங்க…என்ன சொல்றாரு இவரு? உனக்கு வால் இருக்கா என்ன?

பேதுரு: இரு கவனமா கேட்போம்….

பேதுருவும் தோமாவும்: (ஒருவரை ஒருவர் பார்த்து) ஒகே… வலது ….புறமாக.. போடுங்க…

தோமா: இப்ப சரி, வலது புறமா போடுங்கண்ணு சொல்றார்.

பேதுரு: எனக்கு ஒரு யோசனை….

தோமா: என்னது?

பேதுரு: நாம வலதுபுறமா வலைய போட்டா என்ன?

தோமா: இது உன்னுடைய யோசனை இல்லை. அவருடையது

பேதுரு:  எல்லாரும் வாங்க இப்படி… சரி வீசுங்க 

 வலையை வீசுதல்

அனைவருமாக விழுவது, கஷ்டப்பட்டு இழுப்பது…

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள் : ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள் : ஐலசா….

மீன்களைப் பார்த்தவுடனே….

யாக்கோபு: ஓஓஓ மீனு மீனு

யோவான்: சுறுமா, பாம்பிலேட்டு, ஜிங்கா எல்லாம் இருக்கே!

சீஷன் 1: இண்ணைக்கு ஃபிஷ் தந்தூரியே அடிக்கலாம்

சீஷன் 2: மீன பிடிக்குமுன்னாலசெவுள சுடுகதுக்கு நிக்காத கேட்டியா?

பேதுரு: ஆமா… யாரு நமக்கு வலைய வலதுபுறமாப் போடச் சொன்னது:

தோமா: ஒரே புகையா இருக்கு… ஒருவேளை ஆவி கீவி வந்திருக்குமோ…

யோவான்: பொகை மாத்திரம் இல்ல… தீ எரியுது பாருங்க…

யாக்கோபு: ஆமா மீன சுடுற வாசன் வருதுல்லா….

சீஷன்1: யாரோ ஒருத்தர் மீன் சுடுறாங்கபோல இருக்கு

சீஷன் 2: ஆமா அங்கியோட ஒருத்தர் குத்தவச்சு இருக்கிறாரு

 பேதுரு: அது நம்ம ஆண்டவரா?

சீஷர்கள்: ஆமா! இயேசுவேதான்…. அவர் உயிர்த்தெழுந்தார்… அல்லேலூயா.

Contact: Rev. Godson Samuel (Mumbai)

palmyra_project@yahoo.com malargodson@rediffmail.com

09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

ஒரு பதில் to “மனிதர்களைப் பிடித்தல்”

  1. Jegan Ruba Singh J Says:

    hai brother ur stories rreally touch our heart………………meandjegan read some of ur lines reallly its have a soulllllllllllllllllllllllllllllllll….our best wishes 4 ur next editions by githin

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: