Archive for ஜூலை 6th, 2010

படி அளக்கும் கருவிகள்

ஜூலை 6, 2010

 

படி அளக்கும் கருவிகள்
எப்படி அளக்கும் மண்ணையும் மரத்தையும்?

ஊன்றி இருந்தாலும் ஊன்றுகோலாய்
தோளில் ஏற்றினாலும் தோழமையுடன்

எருதுகளோடு எறும்பும் ஊர
ஏ(று)ர் எனும் ஏற்றமிகு வாக்கு

உணவு கிடைக்கும் திசை நோக்கி
நகரும் இந்த திசைகாட்டி

நகரும் மனிதனோடு நகராத இணைப்பு
நகர மனிதனோடு  இசையாத உறவு

பதித்தவன் பாதம் இடறாதபடிக்கு
காலடியில் தாங்கி நிற்கும்

ஆயுதம் அற்ற உலகம் செய்ய
ஆயத்தம் பெற்ற போராளிகள்

கோடரிக் காம்பு நாணும்
அன்னமிடும் காம்புகள்

மர தடியாயிருந்தாலும் மரத்தடியில்
நேரம் உண்டு இளைப்பாற
பொருளதார கண்ணோட்டத்தில்
 பொருளற்ற ஒன்றாய் மாறி

சேவையின் பயனாய் நிறையும்
களஞ்சியமோ கலயமோ அறியாது

தலையெழுத்தை எழுதிய பேனா
கலப்பையா மிருக்குதடியா என்று

எப்படி மறந்தோம் இந்த இணைப்பை?

அருட் திரு காட்சன் சாமுவேல்