காகத்தின் துணிச்சல்


அன்பு பிள்ளைகளே காக்கா செய்த ஒரு மிகப்பெரிய காரியத்தை இண்ணைக்கு நாம பார்க்க இருக்கிரோம்.

ஒரு ஊர்ல ஒரு தாத்தா இருந்தாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. ஆனா பூமில இருந்த ஆட்கள் எல்லாம் தப்பு பண்ணுனத ஆண்டவர் பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க. சரி, தப்பு பண்ணவங்கள திருத்த  ஆண்டவர் ஒரு திட்டம் செய்தாங்க.

ஆமா அங்கிள், இது நோவா தாத்தா கதை தானே… இது எங்களுக்கு தெரியுமே… அம்மா சொல்லிதந்திருக்காங்க, பாட்டி சொல்லி தந்திருக்காங்கண்ணு சொல்லுரீங்களா/ வெயிட்… கதையில ஒரு மாறுதல் இருக்கு…

பேழை அரராத் மலையில தங்கியிருந்தது. நோவா தாத்தா பேழை ஜன்னல திறந்து பார்த்தாங்க. தூரத்துல ஒரு மலையோட சிகரம் தெரிஞ்சுது, ஆனா எல்லாரும் எறங்க முடியுமாண்ணு அவருக்கு தெரியல. தண்ணி இருந்துதுண்ணா என்ன பண்றது/

சரி ஒவ்வொருத்தரா கேட்டு பார்ப்போம்னு…

வாத்துகிட்ட போனாங்க… நீ தண்ணீலயும் தரையிலேயும் போகமுடியுமில்லயா எனக்காக வெளியே போய் பார்த்து வருவியா/

ஒரு வேள தண்ணீ வத்தாம இருந்தா என்ன பண்றது என்று வாத்து கவலையோட கேட்டுது.

அதுவும் சரிதான், சரி நல்லா உயரமா பறக்குற பருந்துகிட்ட கேட்போம்ணு தாத்தா போனாங்க.

எனக்கு நீங்க உயர்ந்த இடத்துல கூடு கட்ட அனுமதிக்கல்ல… எல்லாரையும்போல என்ன இங்க வச்சுருக்கீங்க. என்னால் உங்க பேச்செல்லாம் கேட்க முடியாதுண்ணு சொல்லிடுச்சி.

குயிலே நீ போய பாத்து வந்துடேன். உன் சத்தத்தால எல்லரும் சந்தோஷப்படுவாங்களே/

நானே சோகமா இருக்கிரேன் எனக்கிட்ட வந்து சொல்ரீங்களே தாத்தா/

கிளியே… உன்னால பேச முடியும். என்ன நடந்திருக்குண்ணு பார்த்து வந்து சொல்லேன்.

அது தான் வெளியெ பேச்சுத் துணைக்கு ஆள் இல்லியே. நான் எனக்க ஃபிறண்ஸோட இங்கத்தான் இருப்பேன்.

மயில் சொல்லிச்சி, நம்மால எல்லாம்  மழை வருதுண்ணு சொல்லத்தான் முடியும். அதுக்கு அப்புறம் உள்ளதெல்லாம் என்னோட வேல இல்ல.

தாத்தா நொந்து போயிட்டாரு.

சரி புறாவை கேட்போமுண்ணு …..    கேட்டா…

யாரையாவது முதல்ல அனுப்புங்க அப்புறமா நான் போறேன்.

இப்போ தைரியமான ஒரு ஆள் தனக்கு தேவை அப்டீண்ணு தாத்தா புரிஞ்சிக்கிட்டாரு.

தாத்தா நல்லா யோசிச்சாங்க.

கண்ண மூடி அவர் ஜெபிக்க ஆரம்பிச்சாரு. ஆண்டவர் அவர்கிட்ட நீ ஏன் காகத்துகிட்ட உதவி கேட்கக்கூடாது/ என்று சொன்னார்.

அந்த நேரம் தாத்தா கிட்ட காக்கா தத்தி தத்தி வந்துது.

ஏன் தாத்தா சோகமா இருக்கீங்க/ ஏதாவது உதவி வேணுமா/

கருப்பா இருந்த  காகத்தப் பாத்து தாத்தா யோசிச்சாரு. இது அசுத்தமான பறவையில்லையா/ இவ்வளவு பெரிய பேழையில தங்கியிருக்கிறவங்க இந்த காகத்தாலையா விடுதலை/ ஆண்டவர் சொன்னா சரிதான்…..

தாத்தா விஷயத்த சொன்னாரு

இவ்வளவுதானா… இதோ நான் போரேண்ணு சொல்லி காக்கா கிளம்பிடிச்சி.

வெளியே வந்து பார்த்தா…. தண்ணியா இருக்கு. தண்ணி மேலே என்னவெல்லாமோ மிதக்குது.

 உலகமே இப்போ சுத்தப்படுத்தபட்வேண்டிய நேரம் என்பது காக்காவுக்கு தெரிஞ்சுது. ஒரு நொடி தாமதிக்காம அது தனக்க கடமய செய்ய ஆரம்பிச்சிடுச்சி.

தண்ணி சரியா வத்துறது வரைக்கும் தாத்தா காக்காவ கவனிச்சுட்டே இருந்தார். தாத்தாவுக்கு புரிஞ்சிடிச்சி. கடவுள் ஏன் காக்காவ தெரிந்து கொண்டிருக்கிறாறுண்ணு.

காகத்துக்கு நல்ல தைரியம் உண்டு. அது புத்திசாலி கூட. எந்த பிரச்சனைவந்தாலும் சாமர்த்தியமா தப்பிச்சிடும். குப்பைகள மாற்றி சுத்தப்படுத்தும் குணம் கூட அதற்கு உண்டே ….

இவ்வளவு சுறு சுறுப்பான ஒரு பறவய நான் பாத்ததே இல்லண்ணு சொல்லி அதை பலுகி பெருக ஆசீர்வதித்தார். அதுனாலதான் இண்ணைக்கு உலகம் முழுவதும் எந்த நாட்டுக்குப்போனாலும் நம்மல அங்க காக்காவ பாக்க முடியுது, அதுவும் கூட்டம் கூட்டமாக.

சரி அங்கிள், இந்த கதைக்கு நீதியெல்லாம் கிடையாதா/ அப்டீண்ணு ஒரு தங்கச்சி கேட்கிறது புரியுது. வெயிட்… இதோ உங்களுக்காக….

1. முதன்மையாவதற்கு நிறம் ஒரு தடையில்லை

2. நாம் முதன்மையானவனா/முதன்மையானவளா என்பதை ஆண்டவரே தெரிவு செய்வார், மனிதர் அல்ல

3. பெரிய யானையின் விடுதலை எளிய சிறகில் கூட இருக்கலாம்

4. தைரியமிருந்தால் மட்டுமே நாம் பயனுள்ளவர்களாக முடியும்

அன்புடன்

பாஸ்டர் அங்கிள்

palmyra_project@yahoo.com malargodson@rediffmail.com

09702567603

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: