இறைவேண்டல் கோப்பை


மீரா ரோடு திருச்சபையின் பதினோராவது ஆண்டை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த வருடம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். திருச்சபை கட்டுமான பணியினை முன்னிட்டு இறை வேண்டல் கோப்பையை அறிமுகப்படுத்துகிறோம்.

இறை வேண்டல் கோப்பையானது மாயம் மந்திரம் அற்றது என முதலிலேயே சொல்லிக்கொள்ளுகிறேன். திரித்துவ கடவுளை முன்னிறுத்தும் ஒரு அழகிய இறை வேண்டலை தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறித்திருக்கிறோம். என்நேரமும் வாசித்து இறையாசி பெறும்படியான அந்த மன்றாட்டு இதோ.

 அன்புள்ள ஆண்டவரே

 உமது கட்டளைகளைக் கைகொள்ளும்

 தாகத்தை எனக்குப் புகட்டும்.

உமது வாழ்வு தரும் தண்ணீரால்

என் தாகம் தணியச் செய்யும்.

பேரன்பு, இரக்கம் மற்றும் அகமகிழ்வு

என்னில் நிரம்பி வழியட்டும்.

அறிவுக்கு எட்டாத உமது அமைதி

பிறரை நிரப்பும்படியாய்

தூய ஆவியை எனக்கு அருளும்

ஆமென்.

இறை வேண்டல் கிறிஸ்தவத்தின் மிக முக்கிய கடமை ஆனபடியால் ஒவ்வொருவரும் வாங்கி பயன்பெற அழைக்கிறோம். ஜெபிக்க – இறைவேண்டல் செய்யப் பழகும் சிறுவருக்கும், மறந்துவிடும் வாலிபருக்கும் இது மிகவும் உபயோகமானது. திருமணம் போன்ற விசேஷித்த நேரங்களுக்கும் நண்பர்களுக்கு பரிசளிக்க எற்றது.

அழகிய இந்த மன்றாட்டு கோப்பைகள் 6 எண்ணிக்கை நிறைத்து ஒரு காகிதப் பையில் இட்டு விரும்புபவர்களுக்கு கொடுக்கிறோம். ரூ600 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறீர்கள்.

உங்களது கொடைகள் யாவும் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, மீரா ரோடு – என்ற வங்கிக் கணக்கிற்கு காசோலையாக அனுப்பவும். அல்லது பணமாக எனது முகவரிக்கு பணவிடையாக அனுப்பவும்.

இந்த எளிய கட்டுமான பணியில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்
அருட்திரு காட்சன் சாமுவேல்

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: