Archive for பிப்ரவரி, 2011

பரலோக அனுபவம்

பிப்ரவரி 22, 2011

பரலோகத்தின் புல்வெளியிலே ஆடுகள் திரளாக மேய்ந்துகொண்டிருந்தன. சுவையான புற்களை உண்டபடியும், அசைபோட்டபடியும், ம்ம்ம்ம்மே ம்ம்ம்ம்மே என்று ஒருவொருக்கொருவர் வாழ்த்து சொல்லியபடியும் அவைகள் ஆனந்தமாக வலம் வந்துகொண்டிருந்தன. பல வண்ணங்களிலும், வித விதமான ஆடுகள் பல கூடியிருந்ததைப் பார்த்தவுடன் ஆரோனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

நீண்ட காதுகள், சுருண்ட கொம்புகள், தாடி வைத்தவை, சடை நிறைந்தவை, வெண்மையானவை, புள்ளியிட்டவை, குட்டையானவை, என ஒரு அருமையான காட்சியை கண்டபொழுது, ஆண்டவர் இத்தனை விதமாக ஆடுகளை படைத்திருக்கிறாரா என ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆடுகள் இங்கே இருக்கின்றனவே இவைகள் எப்படி பரலோகத்திற்கு வந்தன? யாரிடம் கேட்பது என எண்ணியபடியே அவன் ஒவ்வொரு ஆடாக பார்த்துக் கொண்டு வந்தான்.

அப்பொழுது அங்கே ஒரு ஆடு துள்ளிக் குதித்தபடி அமர்ந்த தண்ணீரண்டை சென்றதைப் பார்த்தான். என்ன ஒரு துடிப்பான ஆடு இது, இதன் மகிழ்ச்சி தான் எத்தனை அருமையாக இருக்கிறது. எந்த வித பழுதும் இல்லை. கொம்புகள் சுருண்டபடி கெம்பீரமாக காணப்படுகிறதே. இதோடு சற்று நேரம் பேசி நமது கேள்விக்கு விடை பெற்றுவிடலாம் என நினைத்தபடி ஆட்டின் அருகில் சென்றான் ஆரோன்.

அவன் அருகில் சென்றபோது ஆடு தண்ணீர் குடித்தபடி அவனைப் பார்த்தது. தன்னை நோக்கி தான் அவன் வருகிறான் என்றவுடன், அது ஆரோனைப் பார்த்து வா ஆரோன் வா, என்ன இந்தப்பக்கம்? என வரவேற்றது!

ஆரோனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்மை தெரிந்து வைத்திருக்கும் ஒரு ஆட்டிடம் தான் பேசப்போகிறோம் என தைரியமாக தனது கேள்வியை ஆட்டிடம் சொல்லி விட்டான்.

ஓ இது தானா உனது கேள்வி, எனது கதையை நான் உனக்கு சொல்லுகிறேன் அப்போது நான் எப்படி இங்கே வந்தேன் என்பதை நீ அறிந்து கொள்ளுவாய் என்றபடி தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தது…

ஒருநாள் நாங்கள் எல்லாம் மோரியா மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தோம். எங்கள் மேய்ப்பன் அன்று தனது உடல்நிலை சரியில்லாததால் எங்களுடன் வர இயலவில்லை. அதற்கு பதிலாக எங்களை இன்னொருவர் மேய்த்துக்கொண்டு வந்தார். எங்கள் ஒருவருக்கும் அவரைப் பிடிக்கவில்லை. ஒரு விதத்திலும் எங்களுக்கு நல்ல ஊணவோ தண்ணீரோ கிடைக்கவில்லைஅன்று.

உணவே தரவில்லையா அவன். “அப்போ அவன் நல்ல மேய்ப்பனே இல்லை” என்றான் ஆரோன்.

ஆம் அப்படித்தான், ஆகையினால் நாங்கள் அங்கிருந்து சற்று கலைந்து செல்ல முற்பட்டோம். நல்ல உணவு வேண்டி தேடியலைந்தபடி நான் நடந்து நடந்து மந்தைக்கு வெகு தூரமாக சென்றுவிட்டேன்.

பயமாக இல்லையா உனக்கு?….

திரும்பி பார்த்தபொழுத்துதான் நான் மிக அதிக தூரம் வந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நான் திரும்பும் போது எனக்கு அருகிலிருந்த புதரிலிருந்து இருவர் வெளிப்பட்டனர். படீரென என்மேல் பாய்ந்து என்னைப் பிடித்துக் கொண்டனர்….

ஆரோன் பதை பதைப்புடன் …. அப்புறம் என்னாயிற்று? உன்னை அந்த மெய்ப்பன் காப்பற்ற வில்லையா?

என்ன செய்வது? நான் கத்திப்பார்த்தேன், அவனுக்கு எனது சத்தம் கேட்டிருக்காதுபோல, நன்றாக தூங்கியிருப்பன் போல. அவர்கள் இருவரும் பேசியதை வைத்துப் பார்த்தால் அவர்கள் அன்று அனேக ஆடுகளைத் திருடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது?

பிறகு?… ஆரோன் தன்னை மறந்து அந்த சூழலில் ஒன்றியபடி கேட்டான்.

அவர்கள் என்னை வெலி அடைத்திருந்த ஒரு இடத்தில் அனேக ஆடுகளுடன் அடைத்து வைத்தார்கள். நானும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கவலையோடு அங்கே இருந்தோம். மறுநாள் கலையில் அவன் எங்களை ஒருவனுக்கு விற்றுப்போட்டான்.

நீ பரலோகத்திற்கு எப்படி வந்தாய் என்று உன்னைக் கேட்டால் நீ இன்னும் எனக்கு அதை சொல்ல மாட்டேன் என்கிறாயே… சஸ்பன்ஸ் வைத்து கதை சொல்லாதே… பிளீஸ் என்றான் ஆரோன்.

இத்தக் கதையின் திருப்பம் வரும் வேளையில் நீ அவசரப்படுகிறாயே… சரி, எங்களை வாங்கியவன் என்னைப் பார்த்தவுடன் என்னருகில் வந்து என்னைத் தடவியபடி, இவ்வளவு அழகான ஆட்டை நான் பார்த்ததில்லை, என் கடவுளுக்கு இதை நான் பலிகொடுக்கப் போகிறேன் என்றான். எனக்கு சப்தனாடியும் ஒடுங்கிவிட்டது.

என்னைப் படைத்த கடவுளுக்கு மட்டுமே என் ரத்தம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் இருந்த என் உறுதியை இவன் சிதைத்துப்போடுவானே எனஆத்திரமாக வந்தது.

உன் வாழ்வில் தான் எத்தனை துன்பங்கள்? நீ தப்பிக்க முயற்சிக்கவில்லை?

சரியாகவே சிந்திக்கிறாய் ஆரோன், ஆம் நான் தப்பிக்க முடிவு செய்தேன். எனது உயிர் ஏதோ ஒரு கடவுளுடைய பலிபீடத்தில் தெளிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆகையினால் அவன் பார்க்காதபோது அங்கிருந்து மெல்ல நழுவி எடுத்தேன் ஒரு ஓட்டம்.

ஆரோன் அப்படியே கண்களை ஆச்சரியமாக விரித்தான்? தப்பிவிட்டாயா?…

ஆம் அவனிடமிருந்து தப்பி மோரியா மலையடிவாரத்தில் நான் வந்தபோது ஒரு வயோதிபரும் அவரது இரண்டு வெலைக்கரர்களும் ஒரு 12 வயது சிறுவனும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்களும் ஆடு திருடுகிறவர்களா என நான் பயந்தபடி நிற்க, அந்த பெரியவர் தனது வேலைக்காரர்களிடம்  ” நீங்கள் இங்கேயே இருங்கள், நானும் எனது மகனும் அந்த மலைக்கு போய் தொழுதுகொண்டு வருவோம்” என்றார். அந்த சிறுவனுடய தலையில் விறகை ஏற்றிய அவன் தந்தை, ஒரு கையில் நெருப்பு சட்டியும் மற்றுமொரு கையில் கத்தியையும் பிடித்துகொண்டார். ரெண்டு பேரும் நடக்க துவங்கினார்கள். இவர்கள் திருடர்கள் இல்லை என்று மனசு நிம்மதி அடைந்தது.

அப்புறம் நீ என்ன செய்தாய்?

நான் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன், ஒரு வேலைக்காரன் இன்னொருவனிடத்தில் “நம்ம முதலாளி ரொம்ப நல்லவரு, யேகோவா கடவுளுக்கு கீழ்ப்படிஞ்சி நடக்கிறவரு” அப்படீன்னான். உடனே இன்னொருவன் “ஆமாண்டா அதுனாலதான் யேகோவா அவருக்கு வயசான காலத்துல வாக்கு கொடுத்தமாதிரியே, இந்தப் புள்ளயைக் குடுத்திருக்குறாரு” அப்படீன்னான். ஒரே ஒரு புள்ளையோட அந்த பெரியவர் எங்கே போராரு அப்படீன்னு நான் நினைத்துக்கொண்டிருந்த போது, “எப்படியும் அவங்க வர நேரம் ஆகும், நாம இந்த மர நிழலில தங்குவோம்னு” சொல்லி நிழலிலே அமர்ந்துகொண்டார்கள்.

அவர்கள் எங்கே சென்றார்கள் என நீ பார்த்தாயா? என்றான் ஆரோன்.

நானும் அவர்களை தொடர்ந்து போய் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். ஒரு இடத்தில் சிறுவனுடைய தலையில இருந்த விறகை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போ அந்த பெரியவர் “இன்னும் கொஞ்ச தூரம் தான் உன்னால் நடக்க முடியுமா?” என்று கரிசனையோடே கேட்டார். அவனும், “பரவாயில்லை அப்பா நாம் நடந்தே போகலாம், ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், நாம் கடவுளுக்கு பலி கொடுக்கத்தானே போகிரோம்” என்று கேட்டான். “ஆம்! உனக்கு அதிலென்ன சந்தேகம்”? என்று கேட்டார் அந்த பெரியவர். இல்லை அப்பா, நம்மிடம் நெருப்பு இருக்கு, கத்தியும் இருக்கு, விறகு கூட எடுத்துக்கொண்டு போகிறோம், ஆனால் பலிகொடுக்க ஆடு இல்லையே”? என்றான். நான்என்னை பார்த்துவிடுவார்களோ என்று பயந்து மறைந்து நின்றுகொண்டேன்.

அழகு ஆடே! நீ சொல்வதை கேட்க, ஆபிரகாமுடைய கதை போல இருக்கிறதே?

ஆமா அந்த பெரியவர் பெயர் ஆபிரகாம், அவங்க மகனுடைய பேர் ஈசாக்கு? உனக்கு அவர்களைத் தெரியுமா? நீ பார்த்திருக்கிறாயா? என்று அந்த ஆடு ஆரோனப்பார்த்து கேட்டது.

இல்லை வேதபுத்தகத்தில் இதை நான் படித்திருக்கிறேன்.

அப்பொழுது ஆபிரகாம் ஈசக்கைப்பார்த்து சொன்னது என்னவென்றால், “நீ ஏன் இப்படி கவலைப்படுகிறாய்? ஆண்டவர் நமக்கு தேவையானதை அங்கே தருவார், நம்பிக்கையுடன் செல்வோம்? என்றார். என்ன ஒரு விசுவாசம் அவருக்கு? என நான் எண்ணிக்கொண்டேன். அங்கே மலையிலே ஒரு ஆட்டைக்கூட காண இயலாது என்று எனக்குத் தெரியும். என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று நானும் அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். அதன் பின்பு அவர்கள் பெசிக்கொள்ளவில்லை.

மலை உச்சி வந்த உடனே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டியெழுப்பினார். அதற்கு ஈசாக்கும் உதவி புரிந்தான். அதன் மேல் கொண்டு வந்த விறகுகளை இருவருமாக அடுக்கினார்கள். திடீரென ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி அப்படியே அந்த இடத்தில் பலிகொடுக்க வசதியாக போட்டார் ஆபிரகாம். எனக்கு மயக்கம் வருவதுபோல் ஆகிவிட்டது. நான் பதறிப்போய்விட்டேன். கடவுளே! அந்த சிறுவனை காப்பாற்று, என்னை வேண்டுமானால் எடுத்துக்கொள் அப்படீன்னு வேண்டிகொண்டேன். அப்போது ஆபிரகாம் தனது கையிலிருந்த கத்திய எடுத்து அந்த சிறுவனை பலிகொடுக்க ஆயத்தமானார் நான் கண்களை மூடிக்கிட்டேன். ஒரே குமாரனை பலி கொடுக்க வந்திருக்கிற அவர் பக்தி என்னைத் தொட்டுவிட்டது. நான் கண்களைத் திறந்தபொழுது ஆபிரகாம் என்னைப் பார்த்து வந்தார், முட் புதரில் மாட்டியிருந்த என் கொம்பை எடுத்து விட்டு என்னை அந்த சிறு பையனுக்கு பதிலாக பலிகொடுத்துட்டார். அப்படித்தான் நான் இங்கே வந்தேன் என்று சொல்லி துள்ளித் துள்ளி துள்ளி ஓடியது.

ஆரோன் விழித்து பார்த்தபோது மணி 6 ஆகியிருந்தது. இதுவரைக் கண்டது வெறும் கனவு என்பது புரிந்துவிட்டது. “பிள்ளையாண்டான் மேல் உன் கையை போடாதே” அப்படீன்னு சொன்ன ஆண்டவர் இந்த அழகான ஆட்டை எவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறார்? என்று நினைத்தபடி ஆண்டவருக்கு நன்றி சொல்லி தனது காலை ஜெபத்தை துவக்கினான்.

தொடர்புகொள்ள

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

9702567603


%d bloggers like this: