போ அல்லது (பணம்) அனுப்பு – பாகம் 2


இறுதி கட்டளை எவ்விதமாக காட்டமாக பரிசீலிக்கின்றோமோ அது போலவே கன்னி அழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது. “போ” என்பது “வா” என்ற அன்பின் அழைப்பினைத் தொடர்ந்து வருகின்ற அறைகூவல் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறிவிடக்கூடாது.

இயேசுவின் “ஊழியம்” கலிலேயா கடலோரங்களில் ஆரம்பித்தது என்பதாக மத்தேயு 4 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதற்கான சூழல் யாதெனின் யோவான் காவலிலே வைக்கப்பட்டும் மனம்திரும்பி ஞானஸ்நானம் பெற்ற ஒரு விரியன் பாம்பின் குட்டிகளும் கிளர்ந்து எழவில்லை. யூதருக்குள்ளே யோவானால் மிகப்பெரிய பாதையை செவ்வை செய்ய தடை ஏற்பட்டதனால் சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்தவராக இயேசு யூதர்களை விட்டு விலகி பரலோக ராஜ்ஜியத்திற்கு அனைவரும் ஏற்புடையவர்கள் என்னும் உண்மையை எடுத்துக்கூறும்படியாக புறப்படுகிறார். அவர் கடலோரங்களில் அழைத்தவர்கள் அனைவரும் தங்களுக்கான சொத்துக்களை விட்டுவிட்டு (விற்றுவிட்டு நிதானமாக அல்ல) அவசரமாக   இயேசுவை பின்தொடர்ந்தார்கள்.

இதைத் தொடர்ந்தே இயேசுவின் மலை சொற்பொழிவு மத்தேயுவில் இடம்பெறுகிறது. தமது சீடர்களுடனும் தன்னைப் பின்பற்றிய திரளான ஜனங்களையும் கண்டு அவர் தனது வாயைத் திறந்து விளம்பினவைகள் அனைத்துமே கருணையின் வார்த்தைகள், ஆதரவின் சொற்கள், அரவணைப்பின் மாண்பு வெளிப்படும் தகவுகள்.  பின்பு இவ்விதமாக முத்தாய்ப்பு வைக்கிறார். “இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது” (மத் 5: 18). ஓளி கொடுப்பதை நமக்கு வசதியாக ஒலி எழுப்புவதாக எப்படி மாற்றிக்கொண்டோம்?

 அதைத் தொடர்ந்து அவர், கூறப்பட்ட சட்டங்களை மறு ஆய்வு செய்கிறார். தெளிவான உண்மைகளுடன் அவர் சத்துருக்களை சினேகிக்க கற்றுக்கொடுக்கிறார். மனுஷர் காணவேண்டும் என நாம் செய்வது அனைத்துமே ஆண்டவர் பார்வையில் அருவருப்பாய் இருக்கும் என்பதையும் தனது நீண்ட உரையில் அவர் தொகுத்தளிக்கிறார். மத்தேயு தொகுத்தளித்திருக்கும் இப்பகுதியானாது செறிவுள்ளதும் நம்மை மறு பரிசீலனை செய்ய அழைக்கிறதுமான சவால் மிக்க அழைப்பு. “வா” என அழைக்கும் இப்பகுதியில் நுழையாத எவரும் “போ” என அவரால் அனுப்பப்பட்டிருக்க இயலாது. எனில் யார் தான் ஆண்டவரது காரியமாக போவார்? எங்கே அவர்கள் தங்கள் உழியத்தைச் செய்வார்கள்.?

மத்தேயு 10 ஆம் அதிகாரத்தில் அவர் சீடர்களை அனுப்பும் விதத்தை நாம் கூர்ந்து அவதானிக்காமல் இருக்க முடியாது. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்தில் போங்கள் என்கிறார். அதனால் விளையும் ஆபத்துக்களை முன்கூட்டியே அவர்களுக்கு அறிவுறுத்துபவர் அவர்களை எவ்விதம் செல்லவேண்டும் என போதிக்கிறார். பொன்னையாவது வெள்ளியையாவது ஏன் செம்பைக்கூட உங்கள் கச்சைகளில் எடுத்துச்செல்லவேண்டாம் எனும்போது உண்மையை உணர்ந்து கொண்டவர்களாக கிரெடிட் கார்ட் கலாச்சாரத்தை உள்ளே நுழைக்க முயலுகிறோமா? 

காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார் யார்? அவர்களிடம் இன்று செய்யபடுகிற ஊழியங்கள் எவையாக இருக்கமுடியும் என்று  நாம் என்றேனும் எண்ணிப்பார்த்ததுண்டா? ஒரு பட்டணத்தில் நம்மை ஏற்றுக்கொள்ளாவிடில் மாறுவேடம் பூண்டு அங்கே செல்வதற்கு இயேசு ஒருபோதும் நமக்கு அனுமதியளிக்கவில்லை. மாறாக கால்களிலுள்ள தூசியை உதறிப்போடவே அறிவுறுத்துகிறார். நாமோ அங்கெயே நமக்கொரு கூடாரம் அமைத்து அந்த இடத்தையே மாசுபடுத்த துணிந்துவிடுகிறோம்.

பணம் என்பது இன்றைய திருச்சபைகளிலும் ஊழியங்களிலும் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்திருந்தாலும், நம்மை வழிதப்பவைக்கும் ஒரு சுழல் இதிலே உண்டு. சீடத்துவத்தில் உறுதியாக நின்று நமக்கடுத்தவர்களிடம் பகரும் நமது வாழ்வின் சாட்சியில் காணப்படும் ஆண்டவரின் எதிர்பார்ப்பும் பலனும் பொருளுதவி அனுப்பி நாம் தாங்குகிற ஊழியத்தில் எவ்விதத்திலும் இருக்காது என்பது உறுதி.

ஃபிரான்சிஸ் ஆஃப் அசிசி கூறுவதாக இப்படி ஒரு வாக்கியம் உண்டு. ” சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளை உபயோகியுங்கள்” இதோடு இன்றைய தேவையாக நான் ஒன்றைக் கூட்டுவேன். ” சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளையும்  பொருளையும்  உபயோகியுங்கள்”

தொடரும்

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

+918108752325

Advertisements

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: