Archive for மார்ச், 2013

தவக்காலம் பெண்கள் மற்றும் ஓலைகள் – கண்காட்சி

மார்ச் 7, 2013

 

தவக்காலத்தில் தியானம் செய்வதும் தவறான வழிகளிலுமிருந்து கடவுள் பால் திரும்பும் வண்ணமாக மனதை குவிப்பதும் மரபு. இவ்வருடம் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் சார்ந்த திருமறை நிகழ்வுகளை பனையோலைகளில் செதுக்கியிருக்கிறேன். மார்ச் 17 முதல் 19, 2013 வரை ஐக்கிய இறையியல் கல்லூரி பெங்களுரில் வைத்து நடைபெற இருக்கும் “தவக்காலம், பெண்கள் மற்றும் வார்த்தை” எனும் கருத்தரங்கில் இக்காட்சிகளை மையப்படுத்தி விவாதம் நடக்கவுள்ளது. இக்கல்லூரியின் பெண்ணிய கல்வி துறை சார்ந்து நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கேற்பது மன நிறைவளிப்பதாக உள்ளது.

மேலும் தென்னிந்திய திருச்சபை, சென்னை சினாட் அலுவலகத்தில் வைத்தும் “தவக்காலம், பெண்கள் மற்றும் ஓலைகள்” எனும் தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது. தவக்காலத்தில் இயற்கையை உற்றுநோக்கும் ஒரு நிகழ்வாக இதை அமைத்திருக்கிறார்கள். மார்ச் 21 மாலை 6 மணிக்கு அறிவர். இஸ்ரயேல் செல்வநாயகம் அவர்கள் தலைமையில் வழிபாடும் பின்னர் இரண்டு கட்டுரைகள் வாசிக்கப்படும். 8 மணிக்கு கண்காட்சி துவங்கி 9 மணிக்கு நிறைவடையும்.

சுவரொட்டியினை வடிவமைத்த, நான் இதுவரை பார்த்திராத எனது நண்பர் திரு. ஹெர்மான் ஜேக்கப் ராஜ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் கூறிக்கொள்ளுகிறேன்.

விரும்புவோர் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்
டெஹு ரோடு, பூனா

சுவரொட்டியினை வடிவமைத்த, நான் இதுவரை பார்த்திராத எனது நண்பர் திரு. ஹெர்மான் ஜேக்கப் ராஜ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் கூறிக்கொள்ளுகிறேன்.

விரும்புவோர் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்
டெஹு ரோடு, பூனா


%d bloggers like this: