பனைமரச் சாலை (4)


 

முதல் நாள் பயணம்

முதல் பயணம்

முதல் நாள்  பயணம் துவங்குவதற்கு திருச்சபையினரையும் ஒருசில போதகர்களையும் நண்பர்களையும் அழைத்திருந்தாலும், போதகர் எமில் மட்டுமே வந்திருந்தார்கள். அவர் ஜெபிக்க, எங்கள் சொசைட்டியில் உள்ள குழந்தைகளோடு இணைந்து இரண்டு பேரீச்சை கன்றுகளை நட்டு பயணம் துவங்கியது. இது நுங்கு விளையும் பருவமாகையால், பனங்கொட்டைகளுக்கு இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

பின்னால் ஒரு பையைக் கட்டி வைத்துவிட்டு, முன்னால் லேப் டாப் , கேமரா மற்றும்தொலை நோக்கி ஆகியவைகளுக்கு தனியாக ஒரு பை, மேலும் சிறிய பொருட்களை அடைத்த ஒரு பையை முதுகில் கட்டிவிட்டு, மொத்தம் மூன்று பைகளுடன் பயணத்தை துவங்கினேன்.  சற்று கஷ்டமாக இருந்தாலும் உற்சாகத்துடன் புறப்பட்டேன்.

பேராசிரியர் ஜெயசீலன் அவர்கள் வீட்டில் அவரது மகளும் பேர பிள்ளைகளும் விடுமுறைக்காக சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களைப் பார்ப்பது போதகராக எனது கடமை, ஆகவே, அவர்களை சந்தித்து ஜெபித்து, அவர்களோடு சற்று நேரம் செலவிட்டு  செல்லலாம் என முடிவுசெய்தேன். மதியம் மூன்று மணிவரை அங்கே இருப்பதாக திட்டம். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல் தங்குமிடம் ஆனபடியால் மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றார்கள்.

போகும்போது எனது பரிதாப நிலையைப்பார்த்த அவர்களது மகள் என்னிடம் இருந்த மூன்று பைகளை ஒருங்குபடுத்தி, இரண்டாக்கி கொடுத்தார்கள். அது பயணத்தை இன்னும் எளிதாக்கியது. கர்ஜத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில்  வாலிபன் ஒருவன் என்னைப்போலவே புல்லடின் அருகில் நின்று டீ குடித்துக்கொண்டிருப்பதை  கண்டேன். என்னைப்பார்த்து அன்பாய்  புன்னகைத்து நான் இப்போதுதான்  மும்பை முதல் பூனே வரை சென்று மீண்டு வருகிறென் என்றார். போகிற வழியில் இன்னும் அனேகர் ரைட் போவதை பார்ப்பீர்கள் என்றார். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் ஒரு கிராமத்தில் பனை மரங்கள் இருப்பதைப் பார்த்தேன். பனைத் தொழிலாளர்கள் இருப்பதற்கு வாய்புள்ள பகுதி, ஆனால் நான் வாகனத்தை நிறுத்தினால் நில்ஷி செல்ல முடியாது. ஆகவே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். மீண்டும் ஒருமுறை எனது பயணம் நிறைவு செய்தபின்பு இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பொதுவாகவே கர்ஜத்தின் சுற்றுவட்டாரங்களில் அதிக பனைமரங்கள் இருப்பதைக் காண முடியும். ஆகவேதான் வெயில் காலங்களில் நுங்கு குலைகள் இங்கு வைத்து விற்கப்படுவதை சகஜமாக காணலாம். ஓரு டஜன் கண்களை தனியாக பிரித்து தருவதற்கு 80 ரூபாய். பிரிக்காமல் குடுத்தால் யாரும் வாங்கிச்செல்லுவதில்லை. நமது ஊரைப்போல பெருவிரல் விட்டு நுங்கை சுவைக்கும் வழக்கம் இங்கு இல்லை. கடித்து சப்பிடுவதற்கு ஏற்றவிதமாக தனி தனி கண்களாக பிரித்து வைத்திருப்பார்கள். கண்டிப்பாக கர்ஜத்தை சுற்றி உள்ள  பன்வேல், ரசாயனி , கர்னாலா ஆகிய இடங்களில் காணப்படும் பனைகளை கணக்கெடுக்கத் துவங்கினால், அதைச் சார்ந்து வாழும் ஒரு பெருங் கூட்டத்தையே கண்டடைய முடியும் என எண்ணிக்கொண்டேன்.

நில்ஷி போகவேண்டுமென்றால் லோனவாலா மலை தாண்டவேண்டும். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து மாற்றலாகி டெகு ரோட்டிற்கு வந்தபோது, நானும் போதகர் எமிலும் இதே வாகனத்தில் தான் வந்தோம். அந்த் நேரம் இந்த வாகனம் என்னை ரொம்பவே சொதித்து விட்டது. 12 மணிக்கு கிளம்பி 6 மணிக்குத்தான் டெகுரோடு போய்ச் செர்ந்தோம். மொத்தம் 120 கிலோ மீட்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே மீண்டும் பைக் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அந்த பயணம் தடுத்துவிட்டது.

என்றாலும் ஒருமுறை போதகர்களுக்கான கூடுகை மகாபலேஷ்வரில் வைத்து 2012 அக்டோபர் 15 – 17 வரை, நடை பெற்ற போது, இதே வாகனத்தை தான் எடுத்தோம். அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளிலே, எனது இளைய மகன் பிறந்த நற்செய்தி வந்தது. அன்று தான் டெகு ரோடு திருச்சபையின் சபை நாள் கூடுகை. பேராயரிடம் அனுமதி பெற்ற நானும் போதகர் எமிலுமாக வந்தோம். திருச்சபையின் சபைநாளும் போதகரின் மகனின் பிரந்தநாளும் ஒருசேர வந்ததில் அனைவருக்கும் ஆனந்தம்.

பின்னும் ஒருமுறை போதகர் ஆபிரகாமோடு இகத்புரியில் நடைபெற்ற போதகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதே வாகனத்தில் சென்றிருந்தேன். இப்படியாக 120 கி மீ தூரம் மட்டுமே உள்ள இடங்களுக்கு மட்டுமே என்னால் செல்ல முடிந்திருக்கிறது. ஒருமுறைக்கூட இதற்கு அதிகமான தூரத்தை நான் தாண்டியதில்லை.

ஒருமுறை அந்தேரிக்குச் செல்லவேண்டும் என முடிவு செய்து மீராரோட்டிலிருந்து தகிசர் செக்கிநாக்கா வந்தடைந்தபோது வாகனங்களின் நெரிசலில் பிதுங்கி ஊர்ந்து நெரித்து சென்றுகொண்டிருந்தன. எனது கை வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது. 10 கி மீ கூட ஓட்டியிருக்க மாட்டேன். வண்டியை ஓரங்கட்டி, மெதுவாக வீடு வந்து சேர்ந்தேன். மும்பை பட்டணத்திற்குள் அதன்பின் என் வண்டி பின்னிரவு நேரத்தில் மட்டுமே செல்லும்.

லோனாவாலா பகுதி வரும் முன்பதாக ஏறுகின்ற மலைப்பயணத்தின் ஒவ்வொரு அடுக்கும் பழைய நியாபகங்களையே கிளர்த்திக்கொண்டு வந்தது. ஆனால் இம்முறை, சென்ற முறையை விட சற்று எளிதாக ஓட்ட முடிந்ததாக உணர்ந்தேன். லோனவாலாவிலே வந்து நில்ஷியப்பற்றிக் கேட்டால் எவருக்கும் தெரியவில்லை; முள்ஷியா என்றார்கள், கமோடேயில் வந்து கேட்கும்போதும் அப்படியே சொன்னார்கள் ஒருவழியாக கண்டுபிடித்து, கானே ஃபாட்டா வழியாக செல்லவேண்டும் என்பதை அறிந்துகோண்டேன்.

கானே பகுதிக்குள் செல்லும்போது ஒருபுறம் மலையும் இன்னொருபுறம் அகன்று விரிந்த ஆனால் நீர் குறைந்த ஒரு அணையும் தென்பட்டது. அந்த மலையில் ஆயிரக்கணக்கன நாட்டு பேரீச்சைகள் வளர்ந்திருந்தன. ஓரு பனைமரத்தைக்கூட காணவில்லை. நேரம் ஆறரை ஆகிவிட்டது. இன்னும் 40 கிமீ உள்ளே செல்லவேண்டும். ஆனால் சிறிய சாலையாக இருந்தாலும் மிகவும் அழகான சாலையாக இருந்தது. வாகனங்கள் குறைவு. குளிர்ச்சியான இதமான சவாரியாக இருந்தது. முன் விளக்கை போட்டால் தான்  சாலை தெரியும் என்ற நேரம் வந்தபோது நில்ஷி ஒய் எம் சி ஏ வளாகத்தை அடைந்தேன்.

யாரை தொடர்புகொள்லலாம் என நினைத்தபோது எனக்கு நன்கு அறிமுகமான ஒய் எம் சி ஏ செக்கரட்டரி திரு ஆஸ்டின் இருப்பதை அறிந்தேன். அவரது நெருக்கடியான நேரத்திலும் எனக்கு படுக்கையும் வேண்டிய அனைத்து காரியங்களையும் ஒழுங்கு செய்தார்கள். ஒரே பிரச்சனை  ஒழுங்காக டவர் கிடைக்கவில்லை. முதல் நாள் பயணம் மனதுக்கு இனிதாகவும், எளிதாகவும் அமையும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: