பனைமரச் சாலை (8)


நினைவுகளினூடாக பயணம்

இளைப்பாறுதல்

வாகனத்திற்கு ஓய்வு

 

உண்மையான ஒரு பயணம் இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது என்ற எண்னத்தோடு நில்ஷியிலிருந்து பயணத்தை துவக்கினேன். சுமார் 5 கீ மீ தூரம் சாலை பெயர்ந்து சரல்களாக கிடந்தது. புல்லட் ஒருமுறை வழுக்கத்துவங்கிவிட்டால் அப்புறம் அதை கட்டுப்பாட்டிலில் கொண்டுவர இயலாது. சரிவுகளும் மேடுகளும் வளைவுகளும் நிறைந்த அந்த சாலையை படபடப்புடனேயே கடந்தேன். ஆனால், இணைப்புச் சாலை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஒரு பேருந்து செல்லும் வழித்தடம் என்றாலும் மிகவும் நன்றாக பேணப்பட்டிருந்தது. அது ஒரு தனிக்கதை.

 

முந்தையநாள் மாலை வேளையில் நான் தனியாக வெளியில் சென்றிருந்தேன். நாட்டு பேரீச்சை மரங்களைக் கண்டிருந்ததால், பனைமரங்கள் இங்கு காணப்படலாம் எனும் நம்பிக்கையில் அந்த பகுதியைச் சுற்றி வந்தேன். பனை மரங்கள் அங்கே இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆகவே ஒருசில நாட்டு பேரீச்சைகள் வளர்ந்திருந்த இடத்தில் போய் நின்றேன். வயல்கள், விளைகளுக்கு மத்தியில் ஒரு சிறிய புதர்காட்டினுள் 15 – 20 அடி உயர 2 மரங்கள் நின்றிருந்தன.

 

அந்த மரத்தடியில் நின்றுகொண்டு விழுந்த உருளையான காய்களைப் பொறுக்கி சாப்பிட்டுபார்த்தேன். சதைப்பற்று சற்றும் இல்லாத விதைகளைக் கொண்ட காய்கள். மகராஷ்டிராவில் இவ்வித மரங்களிலிருந்து “நீரா” எனும் பானத்தை எடுக்கிரர்கள். அவைகளில் சுண்ணாம்பு சேர்ப்பதாக எனக்கு தோன்றவில்லை ஆனால் சற்று இனிப்பு சுவையுடன் தான் இருக்கும். சாலை ஓரங்களில் இரும்பில் செய்த பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்வார்கள். அதற்கு தனி லைசன்சு  தேவை. ஆனால் நில்ஷியச் சுற்றிலும் எவ்விதமான முறைமைகள் கடைபிடிக்கப்படுகின்றன என தெரியவில்லை. யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையோடு திரும்பினேன்.

 

வருகின்ற வழியில் சில கவுதாரிகள் சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது. தமிழகத்தில் உள்ள  தேரிக்காட்டில் கூட கவுதாரிகள் காணப்படும். பனைக்கும் இவைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? தெரிந்தவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

 

கவுதாரிகளைப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் நிற்கையில் அவ்விடம் முன்று கிராமத்தினர் வந்தனர். அவர்களிடம் சற்று பேச்சு கொடுத்தேன். இந்த மரத்தை எப்படி பயன்படுத்துவார்கள் என கேட்டபோது, கள் இறக்குவதற்கு பயன்படுத்துவார்கள் எனக் கூறினார்கள். பொதுவாகவே பனை மரத்தை “தாடி” மரம் என குறிப்பிடுவது வழக்கம். கள்ளிரக்கும் மரம் என பொருள்; ஆகவே, அதை  நான் பொருட்படுத்தவில்லை. மறுநாள் அதிகாலையில் இங்கு வரவேண்டும் என  அத்தானிடம் கூறினேன்.

 

மறுநாள் காலை 6 மணிக்கு நான் அக்கா அத்தான் ஆகியோர் ஒன்றாக கிளம்பிச் சென்றோம். சுமார் 7 கி மீ தொலைவில் அந்த கிராமம் இருந்தது. போகிற வழியில் திடீரென பனி புகை மூட்டம் எங்களை திக்குமுக்காட வைத்தது. கோடைக்  காலத்தில் இப்படியொரு காட்சியை கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சென்ற வழியிலிருந்து ஒரு சாலை திரும்புவதைக் கண்டோம் ஆனால் எங்கள் வாகனம் நேராகச் சென்றது. நாங்கள் சென்று சேர்ந்த இடம் தனியாருக்கு சொந்தமான ஒரு நீர்தேக்கம். அங்கிருந்து புனல் மின்சாரம் கூட தயாரிக்கிறார்கள். இப்போது புரிந்தது, இந்த குக்கிராமங்களைக் கடந்து செல்லும் சாலை நேர்த்தியாக இருப்பதற்கான காரணம்.

 

மீண்டும் வந்து, தவறவிட்ட பாதையை எடுத்துச் சென்றோம், வழியில் விசாரிக்க “கள்ளு” கிடைக்கும் இடத்திற்குப் போக வழி காட்டினார்கள். ஆனால் வழியில் ஒரு இடத்தில் கூட இந்த நாட்டு பேரீச்சைகளையோ அல்லது அதில் ஏறும் தொழிலாளர்களையோ எங்களால் பார்க்க இயலவில்லை. சந்தேகத்தோடு சென்றோம், சாலை கரடுமுரடாகவே இருந்தது. ஒருவழியாக கிராமத்தை வந்தடைந்த போது அங்கே அந்த மனிதரைக் குறித்து விசாரித்தோம். ஒருவரும் வெளி வர விரும்பவில்லை. சற்று நேரத்தில் ஒரு பெரியவர் வந்து பார்த்துவிட்டு அந்த மனிதரை கூப்பிட்டனுப்பினார்.

 

பெரியவரோடு அத்தான் மராட்டியில் பேச்சுக்கொடுத்தார். அவர் மொழிபெயர்த்துச் சொன்ன காரியங்கள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதிகாலையில் இரண்டு குழந்தைகளை அவர்கள் வீட்டின் முன்பதாக வந்து கடத்தியிருக்கிறார்கள். ஒரு ஆணும் இன்னொரு பெண்ணும். சிறுவனுக்கு 6 வயது, சிறுமிக்கு 11 வயது. கேட்டபோது பதை பதைத்துவிட்டோம். அந்த பெரியவர் மேலும் கூறினார், 4 தலைமுறைகளாக இங்கே வாழ்கிறோம், ஆனால் இங்கே இவ்விதம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது கிடையாது. போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம், இதுவரை ஒருவரும் வரவில்லை என்றனர்.

 

குழந்தைகளைக் கடத்துவது ஒரு எளிதான இலக்காக கடத்தல்காரர்கள் கொண்டிருக்கலாம், என்னுடைய சிறு பிராயத்தில் “பிள்ள பிடி காரர்களை” பற்றி எச்சரித்திருக்கிறார்கள். நம்மையெல்லாம் யார் பிடித்துக்கொண்டு போகப்போகிறார்கள் என அப்போது நினைத்திருக்கிறேன். ஆனால் அது ஒரு மாஃபியாவாக செயல்பட்டு வருவதை தெளிவாக உணர முடிந்தது.

 

நாங்கள் தேடி வந்த நபர் அதற்குள் வந்துவிட்டார். ஆனால் அவர் மரத்தில் ஏறுபவர் அல்ல மாறாக, கள் விற்பவர். எங்கிருந்து கள் வங்கி வருகிறீர்கள் என விசாரித்தோம். இன்னும் 5 கி. மீ தொலைவு செல்ல வேண்டும் எனக் கூறினார். சரி யார் உங்களுக்காக மரத்தில் ஏறுகிறார்கள் எனக்கேட்டோம், அதற்கு கர்நாடகாவிலிருந்து வருகிறார்கள் என்றார். கர்நாடகாவின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கு நாட்டு பேரீச்சையே அதிகமாக வளரும். பனை மரங்களின் எண்ணிக்கை சுற்றியுள்ள மாநிலங்களை விட குறைவாகவே இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

 

காலை உணவிற்குப் பிந்தினால் நிகழ்ச்சி முழுவதும் பிசகிவிடுமாகையால் உடனடியாக திரும்பிவிட்டோம். இரட்டை கோப்பை போன்ற இரட்டை சாலை கொள்கை, சிறுவர்களைக் கடத்தும் கும்பல் என காலையே எனக்கு மிகவும் சங்கடமான துவக்கமாக இருந்தது. மாணவர்களே நிகழ்ச்சியின் பொருட்டு என்னை மகிழ்ச்சியில் வைத்திருந்தனர். ஆனால் அன்று எனது பயணமும் எப்படியிருக்கும் என்ற எண்ணத்துடனேயே ஓட்டினேன்.

 

நில்ஷியிலிருந்து சுமார் முப்பது கி. மீ தொலைவில் வந்தபோது ஒரு கிராமம் முழுக்க நாட்டு பேரீச்சைகள் நிற்பதும், பிளாஸ்டிக் கேன்களை வெட்டி கலையமாக பயன்படுத்தப்படுவதையும் கண்டேன். ஆனால் ஈச்சமரம் ஏறும் தொழிலாளர்களையோ காண முடியவில்லை. மீண்டும் இங்கு வந்து ஒரு தனித்த கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களை திரட்டவேண்டும் என முடிவு செய்து எனது வண்டியை சீராக செலுத்தினேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: