பனைமரச் சாலை (9)


பாதை தவறும்போது

கோட்டை

இந்தூரி கோட்டை, தலேகாவுன்

கானே வந்தபோது தலேகாவுன் இன்னும் 10 கி மீ என எழுதப்பட்ட கல் காணப்பட்டது. பனைமர வேட்கைப் பயணத்தின் அறிவிப்பில் தலேகாவுன் ஒரு முக்கிய இடம். அங்கே எனது நண்பரான சர்சேனாபதி சத்யேந்தர ராஜே தாபாடே இருக்கிறார். தாபேடே என்பது குடும்பப்பெயர் மாத்திரம் அல்ல அது ஒரு வரலாற்று பெயர் கூட. வீர சிவாஜியின் மெய்காப்பாளராக “ஏசாஜிராவோ தாபாடே”  என்பவர் இருந்திருக்கிறார். அவரது வழிதோன்றல்கள்   தொடர்ந்து சிவாஜியின் வழிமரபினருக்கு மெய்க்காப்பாளர்களாக இருந்து பல்வேறு இக்கட்டுத் தருணங்களில் அரசனைக் காப்பாற்றியிருக்கின்றனர். அவர்களின் வழிதோன்றல்களுக்கு தாபாடே என பெயர் வழங்கப்பட்டுவருகிறது.

சத்யன் அவர்களை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தித்த விதம் எதிர்பாராதது. என்னைப் போதகராக டெகுரோட்டில் நியமித்தபோது அங்கே எனது கண்காணிப்பாளராக போதகர் உட்கிர்கர் அவர்கள் இருந்தார்கள். ஓருநாள் அவரோடு  எங்கள் போதகர்கள் கூடுகையை நிறைவுசெய்தபோது, எங்களுக்கான உணவு ஆயத்தப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இந்திராணி நதிக்கரையோரத்தில் அமைந்திருந்த அழகான ஆனால் எளிமையான விடுதியில் எங்களுக்கு உணவு பறிமாறப்பட்டது. பறிமாறப்பட்டதும் அந்த ஆற்றோரத்தில்விளையும்  சுவையும் மணமுமிக்க  ‘இந்திராணி” அரிசிதான். ஆந்த ஆற்றின் அருகில் ஒரு பிரம்மாண்ட கோட்டை இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே உண்டோம். மழைக்காலமானபடியால் புற்கள் மதில்களைப் போர்த்தி அசைந்துகொண்டிருந்தது.

நானும், காலம்சென்ற போதகர் ஷாட்டே மற்றுமொரு மராட்டி போதகரோடு உணவுக்குப்பின் அந்த கோட்டைக்குள் நுழைந்தோம். கோட்டையைத் தவிர எச்சங்கள் ஏதும் இல்லை, சிறிய ஆனால் உறுதியான கோட்டை. சத்யன் குடும்பத்தாருக்குச் சொந்தமான கோட்டை என பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன். அந்த கோட்டைக்குள் ஒரு புதிய இந்து கோவில் இருந்தது, அதனுள் சென்று பார்த்தபோது மிகப்பெரிய முரசுக்கள் இருபதிற்கும் மேல் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. சில தோலிலும் சில தற்கால முறைப்படியும் செய்யப்பட்டிருந்தன. நான் ஆச்சரியமாக பார்த்தது, அங்கிருந்த ஒரு பல்லக்கை. மிகவும் சிறியதாக அமைக்கப்பட்ட அந்த பல்லக்கில் மனிதர்களை தூக்கிச் செல்ல முடியாது என தோன்றியது. பிற்பாடு விசாரிக்கையில் அதை அவர்கள் அங்கிருக்கும் சாமியை ஊர்வலமாக எடுத்துச்செல்லுவார்கள் வைத்திருப்பதாக குறினார்கள். சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக அந்த பல்லக்கை உபயோகிப்பார்கள் என தோன்றியது.

இந்த காரியங்களை நான் எனது கண்காணிப்பாளரிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர் தலேகாவுன் பகுதியில் வாழும் தாபாடே குடும்பத்தைப் பற்றிக் கூறினார். மேலும் அந்த வீட்டின்  தாயார் திருச்சபைக் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும்  அவர்களுக்கு சொந்தமான கோட்டை தலேகாவுனில் இருக்கிறது என்றூம் கூறி எனக்கு வழியைக் காண்பித்தார். நான் அங்கே சென்றபோது ஒரு சிறிய கோட்டையைப் பார்த்து எனது புல்லட்டை நிறுத்தினேன். கோட்டை சமீபத்தில் தான் சுத்தம் செய்யப்பட்டிருந்தது, ஆனால் கோட்டைக்குள் விசேஷமாக ஒன்றுமில்லை. குதிரைகளுக்கு தாண்ணீர்வைக்கும் தொட்டிகள், துப்பாக்கி அல்லது விற்களால் எதிரிகளைத் தாக்கும்படியான மறைவு வசதி கொண்ட மதில்கள்.   கோட்டைக்கு ஒரு பிரம்மாண்ட கதவு இருந்தது, மழையிலும் வெயிலிலும் அது கிடந்து சிதிலமாகிக்கொண்டிருந்தது.

கோட்டையைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் எனது வாகனத்தை நிறுத்தியதால் சற்றுமுற்றும் என்ன இருக்கிறது என நான் பார்க்கவில்லை. கோட்டைக்குள் சென்று அதன் வாசல் வழியாக மீண்டும் வெளியே வந்தபோது  எதிற்புறம் இருந்த வீடு  பார்ப்பதற்கு ஒரு சிறிய அரண்மனைப்போன்ற தோற்றத்துடனும், பழைய கற்சிலைகள் வீட்டின் திண்ணைகளில் வரிசையாக வைக்கப்பட்டும் இருந்தன. நான் அது ஒரு மியூசியமாக இருக்கும் என நினைத்து உள்ளே சென்றபோது, என் வயதை ஒத்த ஒரு நபர் வெளியே வந்து, இது தனி நபர்களது இல்லம், யாரைப்பார்க்க வந்தீருக்கிறேர்கள் என தடுத்து நிறுத்தினார். நான் என்னை ஒரு போதகராக அறுமுகம் செய்தவுடன், முகம் மலர என்னை உள்ளே அழைத்து அமரச்செய்து, தான் கல்வி கற்ற காண்வென்றைப்பற்றி மிகவும் பெருமையாக பேசினார். தனது அரசியல் ஈடுபாட்டையும், மக்களுக்காக த்லேகாவுன் பகுதியில் அவ்ர் ஆற்றுகின்ற பணிகளையும், பல்சமய நல்லிணக்கத்திறு தான் துணை நிற்பதாயும் அவர் கூறினார். எங்கள் நட்பு அன்றுமுதல் துவங்கியது.

தாபாடே அவரது மனைவியுடன்

சர்சேனாபதி சத்யேந்தர ராஜே தாபாடே அவரது மனைவியுடன்

பிற்பாடு ஒருமுறை  சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும்படி நான் அவரை  டெகு ரோடு மெதடிஸ்ட் தமிழ் திருச்சபைக்கு குடும்பமாக அழைத்தேன். குறித்த நேரத்தில் வந்தார்கள். எங்கள் உபசரிப்பை ஏற்றுக்கொண்டார்கள். திருச்சபையில் அன்று ஒரு சிறந்த சொற்பொழிவை ஆற்றி, தேசம் நம்மனைவருக்கும் உரியது, இரத்தம் சிந்தி மீட்ட இத்தேசத்தில் கிறிஸ்தவர்களின் கல்வி மற்றும் மருத்துவ பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. தொடர்ந்து தேசத்திற்காக செயல்படுங்கள் என குறிப்பிட்டார்கள்.

அவர்களை சந்தித்து என்னுடைய பயணத்தை தொடரலாம் என நினைத்திருந்தேன், அவர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள், முத்தையநாள் தவிர்க்க முடியாத காரணமாக சந்திக்க இயலாது என கூறிவிட்டார்கள். அது எனக்கு மிகப்பெரிய எதிர்பாராத இழப்பு. அவர்களைப் பார்ப்பதே புது உற்சாகத்தி அளிக்கும் அனுபவம். பனை மர வேட்கைப் பயணம்  நண்பர்களை  சந்தித்து எனது பயணத்திற்கான ஆதரவை திரட்டுவதே எனது முக்கிய நோக்கம். மகாராஷ்டிரா பகுதியில் நான் அறிந்த மற்றும் எனக்கு நெருக்கமான அரசியல் செயல்பாடு கொண்ட அவரை பார்த்திருந்தால் கண்டிப்பாக ஒரு சில காரியங்களை நாங்கள் செயல்முரைப்படுத்த திட்டமிட்டிருக்களம். அவர்களி சந்திக்க இயலாதது எனது பயணத்தில் மனகுறையகவே இருந்தது.

அதற்கு அடுத்தபடியாக டெகு ரோடு திருச்சபையினரையும் சந்திக்கும் வாய்ப்பு அரிதானந்தோ என தோன்றியது. போதகரின் இணைப்பு கிடைக்கவில்லை. நான் பணி செய்த இடமாகையால் என்னை நேசிக்கும் அனேகர் எங்கே உண்டு, ஆனால் தனி நபர்களாக அவர்களை திரட்டுவதை விட போதகரை வைத்து ஒருங்கிணைக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். அது நடைபெறவில்லை. இந்த இரண்டு இடங்களும் எனது பயணத்தில் சுமார் 2 மணி நேரத்தை அதிகமாக்கிக்கொடுத்தது. ஆகவே பூனாவிற்குள்ளே செல்லவேண்டாம் என முடிவு செய்தேன். வாக்கட் தாண்டியதும் வாகனங்களின் நெரிசல் துவங்கியது. எனது வாகனம் பெரும்பாலும் இடம் கிடைத்து ஊர்ந்து சென்றுகொண்டேயிருந்தது, ஆனால் சாலையின் நெரிசலில் கவனம் செலுத்தியதால், ஷோலாபூர் செல்லும் வழியை எப்படியோ தவற விட்டுவிட்டேன்.

செல்லும் வழியைப்பார்த்தால் மகாபலேஷ்வர் செல்லும் பாதை போல் இருந்தது. ஓரு இடத்திலும் ஷோலாபூர் செல்லும் வழி குறித்து தடயங்களைக் காணவில்லை. சாலை மிகவும் நேர்த்தியாக இருந்ததால் வேகமாக பயணித்துக்கொண்டிருந்தேன். சந்தேகம் வலுக்கவே  அருகில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் ஷோலாபூர் செல்லுவது எப்படியென கேட்க, அவர் தலையில் கையை வைத்துவிட்டார். ஆதிக தூரம் வந்துவிட்டீர்களே, பரவாயில்லை இன்னும் இருபது கி. மீ துரம் சென்றால் இடதுபுறம் ஒரு பாதை பிரியும், அங்கிருந்து சென்றால் சாஸ்வாத் வரும் என்றார். முதலிலேயே கோணல் என என்னையே நொந்துகொண்டு இன்னும் வேகமாக வண்டியை செலுத்தினேன். வெளிச்சம் மங்கி, இருள் கவிய துவங்கியது.

 

ஓரு மணிநேரம் பிரயாணம் செய்தபோது அங்கே ஒரு சிரிய ஊர் வந்தது. அங்கே தங்குமிடம் எதும் உண்டா எனக் கேட்டேன், இல்லை என்று கூறினார்கள், இன்னும் 30 கி மீ தூரம் சென்றால் சாஸ்வாத் சிறு நகரம் இருப்பதாகவும் அங்கே தங்க இடம் கிடைக்கும் என்றும் சொன்னார்கள், வழி முழுக்க வளைந்து செல்லும் பாதைகள். வண்டி ஏதிம் பிரச்சனி செய்தால் அப்புறம் இரவு முழுவது நடுக்காட்டில் தான். வளைந்து செல்லும் மலைப் பாதையில் எங்கே செல்லுகிறோம் என தெரியாத இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். சுமார் ஒன்பது மணிக்கு நான் தேடி வந்த ஊர் தென்பட்டது. ஆந்த ஓருக்குள் நுழையும் வழியில் ஒரு அழகான கோட்டை நெரிசலின் மத்தியில் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆனால் நேரமின்மையால் செல்ல முடியாது என்று தெரியும். கண்டிப்பாக எனது திட்டத்தைவிட இன்னும் 50 கி மீ அதிகமாக பிரயாணம் பண்ணியிருக்கிரேன். அதுவும் வழி தவறி.

 

நேரம் இரவானபடியால் கிடைக்கும் இடத்தில் தங்கவேண்டுமென்று முடிவுசெய்து விசாரித்தேன். அனேகர் ஒரு குறிப்பிட்ட  ஓட்டலை கைகாட்டினார்கள். நான் சென்றபோது ஒரு இளம் வலிபன் இருந்தான். ஓரு அறை மட்டும் இருப்பதாகவும் வேண்டுமென்றால் குடுப்பதாகவும் கூறினான். நம்புவதா வெண்டமா என தெரியவில்லை ஆனால் வேறு ஒரு இடத்தைச் தேடிச்செல்லும் மனநிலையும் உடல் பெலனும் எனக்கு இல்லை. ஆகவே சரி என்றேன். இரண்டு கட்டில் உள்ள அறைக்கு 300 ரூபாய். கெட்டித்துபோன ஒரு மெத்தையும் தலையணையும் இருந்தது, வெளிரிப்போன ஒரு பெட்ஷீட்டை போனால் போகிறது என்று அதன் மேல் விரித்திருந்தான்.

 

சரியென்று உள்ளே நுழைந்து அனைத்து பொருட்களையும் வைத்துவிட்டு குளிக்கச் சென்றேன். உள்ளே கம்மோடில் ஒரு ஆணுறை செத்து மிதந்தது, வெறுப்புடன் பக்கெட்டை எடுத்தால் அங்கே இன்னுமொரு ஆணுறை கொலை செய்யப்பட்டு கிடந்தது, இப்படியாகும் என நினைக்காத நான் மக்கை எடுத்து சந்தேகத்துடன் பார்த்தேன் அங்கே  ஒரு ஆணுறை தற்கொலை செய்து கிடந்தது. எரிச்சலோடு ஷவரைத்திறந்தால் நூல் போலவே தண்ணீர் வந்தது. வெறுப்பு, ஆற்றமை, களைப்பு, அயற்சி, கேள்விகள் எல்லாம் சேர்ந்து என்னை புரட்டியெடுத்துக்கொண்டிருக்கையில், ஜெர்மனியிலிருந்து எனது நண்பன் ரமேஷ் என்னை அழைத்தான்.

 

எப்படியிருக்கிறது  உனது பயணம் என்றான். அழாத குறையாக, பாதை தவறிவிட்டேன் எனக் கூறினேன். ஆனால் ரமேஷ் பதற்றப்படவில்லை, மிக அழகாக சொன்னான். இந்தியால ஏன் நெறைய ரோடு இருக்கு? நாம பாக்கவேண்டாமா?  ஒண்ணும் கவலையில்லை, ரெஸ்ட் எடு, அப்புறமா பார்த்துக்கொள்ளலாம். அந்தச் சூழலில் அது ஒரு ஆறுதலான வார்த்தை….அப்படியே தூங்கிவிட்டேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: