பனைமரச் சாலை (10)


 இயேசு சீடர்களை

இயேசு சீடர்களை பணிக்கென அனுப்புதல் (உதவி: இணையம்)

ப(ய)ணப் பை

 

காலை ஆறு  மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, பொருட்களை சீராக்கி பைக்குள் வைத்துவிட்டு வாகனத்தை எடுத்தபோது மணி 7.15. சோலாப்பூர் செல்ல வேண்டுமென்றால் நான் ஹடாப்சர் செல்லவேண்டும். இன்னொருவகையில் சொல்லவேண்டுமென்றால், மறுபடியும் பூனே செல்லவேண்டும். நொறுங்கிப்போய்விட்டேன். இப்படியாகும் என தெரிந்திருந்தால் கண்டிப்பாக பூனாவிலேயே தங்கியிருந்திருப்பேன். எனது திருச்சபை அங்கத்தினரான  டாக்டர் அனில் என்னை அழைத்திருந்தார்கள், மெதடிஸ்ட் போதகரான அருள்திரு. ஜாண்சன் என்னை அழைத்திருந்தார்கள். வேகம் வேகம் என நினைத்து இப்படி விவேகம் இல்லாமல் ஒரு காரியத்தை செய்து விட்டேனே என எண்ணினேன். ஆகவே ஒரு சில காரியங்களை முடிவு செய்துகொண்டேன்.

 

இனிமேல் இவ்விதமான இரவு விடுதிகளில் தங்கக்கூடாது. ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலோ அல்லது ஒரு ஆலயத்தின்  வராந்தாவிலோ கூட அனுமதி பெற்று படுக்கவேண்டும். அல்லது கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளில் தங்கவேண்டும். ஆனால் இப்படி நினைப்பதில் ஒரு பெரிய பிழை உண்டு என எனது ஆழ்மனம் சொன்னது. எனது எண்ணம் கன்னியாகுமரி மாவட்டத்தை நினைவில் கொண்டு எழுந்தது. அனைத்து கிராமங்களிலும் ஒன்றுக்கு மூன்று திருச்சபைகள் இருக்கும். அவைகளின் ஆலய வளாகங்களின் அருகில் போதகர் தங்கியிருப்பார். அதுபோலவே இருக்கும் என நம்பியிருந்தேன்.

 

எனது பயணத்தில் அதிகமாக பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது என முடிவு செய்திருந்த போதிலும், அவைகளும் ஒரு சுமையாக மாறிவிட்டது. கட்டுரைகளை  அன்றாடம் எழுதவேண்டும் என நினத்திருந்த நான், தொடர்புகளில் உள்ள இடர்பாடுகளாலும் எனது லேப்டாப்   என்னைக் கைவிட்டதாலும் செய்ய இயலாமல் போய்விட்டது. இந்த பயணத்தில் எனது சார்ஜர் வேலைசெய்யவில்லை என்று புதிதக வேறு வாங்கியிருந்தேன். மொபைலிலிருந்து இணைய சேவை பெற மேலும் ஒரு கனெக்ஷன் கார்ட் வாங்கியிருந்தேன். போர்ட் சரியில்லையோ என்னவோ என்னால் அதை இணைக்க முடியவில்லை. வைஃபை எப்படி இணைப்பது என தெரியவில்லை. எப்படியோ லேப்டாப்  எடுத்துவந்தது அதிகப்படியான  ஒரு சுமையாகிப்போனது.

 

வழியில் தேவைப்படும் என வாங்கிய மருந்துகள், முதலுதவி பொருட்கள் மற்றும் குளியலரை சாதனங்கள், இவைகளும் ஒரு பக்க பாக்கெட்டை நிரப்பியது. இன்னொருபுறம் சீர் செய்யப்பட்ட ஓலைகளை வைத்திருந்தேன். தேவைப்பட்டால் படம் செய்வதற்கான உபகரணங்களும் எடுத்துச் சென்றிருந்தேன். வழியில் நேரம் கிடைத்தால் எவரையாவது வரையலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு செய்முறை விளக்கம் அளிக்கலாம் என வைத்திருந்தேன்.

 

இத்தோடு இரண்டு அரைக் கால் சட்டைகளும் ஒரு முழு கால் சட்டையும் எடுத்து வைத்திருந்தேன். எனது கிளர்ஜி காலர் சட்டை, இரண்டு முழுக்கை சட்டைகள்  இரண்டு அரை கை சட்டைகள், ஒரு கறுப்பு பனியன், காவி வேஷ்டி மற்றும் உள்ளாடைகள்.. ஒரு பெரிய டர்க்கி டவல் வைத்திருந்த்ததை மாற்றிவிட்டு அக்கா ஒரு மெல்லிய துண்டை கொடுத்தார்கள். மேலும் எங்காவது ஆலயத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைக்குமென்றால் அங்கு அணிவதற்கக ஒரு அங்கியையும் எடுத்து வைத்திருந்தேன். பைபிளைக் அக்காவிடமே கொடுத்துவிட்டு மொபைல் பைபிளையே பயன்படுத்த திட்டமிட்டேன். குறிப்பெடுக்க ஒரு சிறிய  நோட்டு புத்தகம் மற்றும் பேனா

 

பையின் மேல்பகுதியில் புதிதாக வாங்கிய பைனாக்குலரை வைத்தேன். ஓலையில் செய்த படங்கள் படங்களை எல்லாம் ஒரு தனி ஃபைலில் இட்டு ஒரு புத்தகம் போல அதை எடுத்து வைத்துக்கொண்டேன். அதிகமாக எதையும் உள்ளே வைப்பதற்கு இடம் கிடையாது எனும் அளவிற்கு பை உப்பிவிட்டது. பையிலிருந்து எதுவும் எடுத்தால் மீண்டும் கவனாமாக உள்ளே வைக்க 10 நிமிடம் ஆனது. அந்த அளவிற்கு நெருக்கடி.

 

ஆகவே இனிமேல் இப்படிப்பட்ட பயணங்களில் லேப்டாப் மற்றும் பொருட்களை குறைத்துவிடவேண்டும் என்ர உறுதியான முடிவுக்கு வந்துவிட்டேன். பயணம் முடியும்போது முற்றும் துறந்த மனிதராக மாறிவிட முடியும் என்றே தோன்றியது. போகிற போக்கில் பைக்கையும் விட்டுவிட்டு நடந்தே பயணத்தை முடித்துவிடுவேனோ என்று தோன்றியது.

“கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும்

9…..உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ,

மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம்.

ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. [2]

11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும்

அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள்.

அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.” 12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். (மத்தேயு 10, திருவிவிலியம்)

 

இயேசு தமது சீடர்களது பயணத்தில் பணத்தயோ பொருளையோ முன்னிறுத்தாமல் பணியை முன்னிறுத்திய ஒரு அறைகூவல் விடுப்பதை இப்பகுதியில் காணலாம். இப்பகுதியே என்னை பயணிக்கும் ஒருவனாக மாற்றியது. இவ்விதமான ஒரு பயணத்தை நான் என்று நிறைவு செய்கிறேனோ அன்றே எனது மனது நிறைவடையும்.

இப்போதைய பயணங்கள் யாவும் ஆண்டவரின் கட்டளைக்கேற்ப என்னை தயாரிக்கும் பொருட்டே என எண்ணி என்னையே நான் சமாதானப்படுத்துகிறேன். ஆகிலும் இயேசு தனது சீடர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் போகச்சொல்லுகிறார் என்பதை நாம் காணத்தவறிவிடக்கூடாது. மேலும் அவர் பணியின் முக்கியத்துவத்தை தவற விடக்கூடாது என்பதை பாதங்களின் தூசை உதறிவிடுவதன் வாயிலாக குறிப்புணர்த்துகிறார்.

பனைமர வேட்கைப் பயணம் என நான் எனது மனக்கண்ணில் நினைத்தது ஒன்று, அது தனது பாதையை கண்டடைந்தது வேறொன்று. நினைத்துப்பார்க்கவே ஒவ்வாத ஒன்றாக அது இருந்தாலும் நான் அவ்விதம் ஒன்றையே மேலும் கற்பனை செய்கிறேன். அவ்வைதம் ஒரு எளிய பயணம் நிகழுமானால் அதையே செய்ய முயலுவேன்.

இயேசுவின் கூற்றோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலாச்சாரம் நமக்கு உண்டு. முற்காலத்தில் புண்ணிய யாத்திரை செய்பவர்கள் வழிக்கு எதையௌம் எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்களது பயணத்தில் எதிர்படும் கிராமமோ அல்லது நல்லுள்ளம் கொண்டவர்களோ அவர்களை உபசரிப்பார்கள். பயண களைப்பு நீங்கியபின் அவர்கள் வேறு இடம் தேடி செல்லுவார்கள். ஆபிரகாமும் அவ்விதமாக உணவு வழங்கியதை தொடக்கநூல் 18ஆம் அதிகாரத்தில் காண்கிறோம்.

இவ்விதமான ஒரு பயணமாக அமையுமா என நான் யோசித்தேன். சாத்தியமே, ஆனால் நாட்கள் இன்னும் அதிகம் பிடிக்கும், அத்துணை நாட்களை நான் விடுமுறையாக கொள்ள முடியாது. ஆகவே நண்பர்களின் உதவியோடு எனது பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்தேன். நான் ஜாஸ்மினிடம் எவ்வளவு செலவு ஆகும் என கணக்கு கொடுத்திருந்தேனோ அது போல் இரு மடங்கு எனது பயணத்துக்கான ஆயத்தத்திற்கே செலவானது. எனது ஹெல்மெட்டும் ஜாக்கெட்டுமே நான் அவளிடம் கூறிய தொகைக்கு ஈடானது. பாதுகாப்பை சரிவர செய்துவிட்டு ஏறெடுக்கும் பிரார்த்தனையே சரியானது என்பது எனது எண்ணம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: