ஓலையும் கலையும்


நீர் சுமக்கும் ஆப்பிரிக்க பெண்

நீர் சுமக்கும் ஆப்பிரிக்க பெண்

“உலகம் முழுவதும் பெண்களே தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதியுறுகிறார்கள் அவர்களை நினைவில் கொண்டே இந்தப் படத்தை தெரிவு செய்தேன். தண்ணீர் அற்ற பகுதியில் வாழும் பனை மரம் அவர்களோடு தனது சார்பை வெளிப்படுத்துவதாகவே ஓலையில் செய்யப்பட்ட இந்த படம் குறிப்புணர்த்துகிறது”

பனை ஓலைகள் பனைமரத்திலிருந்து கிடைக்கும் பயனுள்ள ஒரு பொருளாகும். பழங்காலத்தில் வீடுகளின் கூரைகளை வேய்வதற்கும், வீட்டின் சுவர்களை மூடுவதற்கும் ஓலைகள் பயன்பட்டன. பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களும் ஓலையிலிருந்து வீட்டிலேயே தயாரிக்கப்பட்டன.

 

ஏடுகள் எனும் ஓலையில் இயற்றப்பட்ட புத்தகங்களே முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்புவரை குமரி மாவட்டத்டின் ஒரு சில பகுதிகளில் ஓலையிலேயே பிரமானங்கள் எழுதப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் எனது பெற்றோரின் காலத்தில் ஓலையில் எழுதப்பட்டதையே தங்கள் சிறுவயதில் கற்றிருக்கிரார்கல். தற்காலத்தில் ஓலைகளில் என்னென்ன செய்ய முடியும் என எனது நேரத்தி ஒதுக்கி நான் செய்த படங்களை பதிவிடுகிறேன்.

 

கன்னியாகுமரி மாவாட்ட திருமண வீடுகளில் பொங்கிய சோற்றை சேமித்து வைக்க ஓலை பாயை இன்றும் பயன்படுத்துகின்றனர். ஓலைகளின் அவசியம் அருகிவிட்டபோதிலும்  பாரம்பரியத்தை விரும்புகிறவர்கள் ஓலைகளின் பயன்பாட்டை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். ஆகவே ஓலைகள் தங்கள் முக்கியத்துவத்தை முழுமையாக இழக்கவில்லை என்றே படுகிறது. அப்படியென்றால், ஓலைகளின் பயன்பாடு மக்களின் ஆழ்மனதில் மென்மையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கும் ஒரு பயணம் நமக்கு இன்று வேண்டும்.

 

பனை ஓலைகளில் நான் சிறுவயதில் எதையும் செய்து பழகியதில்லை. நண்பர்கள் காத்தாடி செய்வதுண்டு மேலும் தென்னை ஓலைகளில் நண்பர்களோடு சேர்ந்து கணப்பொழுதில் ஓலைப்பந்து செய்தும் விளையாடியிருக்கிறோம். ஆனால் எதையும் செய்து பழகியதில்லை. குருத்து ஞாயிறு அன்றும் சிறுவர்களும் பெரியவர்களும் விதம்விதமாக ஒலைகளை முடைந்து அழகுபார்க்கும்போது, என்னவென்றே புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் ஓலைகளால் என்னன்னெ செய்ய முடியும் என முயற்சிக்கத் துவங்கிய பின்பு, இன்றுவரை ஓலைகளில் அனேக படங்களைச் செய்துகொண்டுவருகிறேன்.

 

கீழ்காணும் படம், இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை மாதிரியாகக் கொண்டது. ஆப்பிரிக்க மக்களின் கலை ஈடுபாட்டின் மேல் எனக்கு ஒரு பித்தே உண்டு. அதை நிறைவு செய்யும்படியாக அனேக படங்களை அங்கிருந்து கடன் வாங்குவது எனது வழக்கம். பிறருடைய படமாயிருந்தாலும் நான் பயன்படுத்துவது ஓலைகளை மட்டுமே. இந்த படத்தில் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசமான வண்ணங்களை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அனைத்தும் ஓலையின் இயற்கை வண்ணங்களே ஒழிய எந்த விதமான சாயங்களும் சேர்க்கப்படவில்லை. இவ்வோலைகள் சுமார் 400 வருடங்கள் கெடாமல் இருக்கும்.

 

பாதுகாக்க வேண்டிய முறைகள்:
கண்ணாடி சட்டம் போட்டு காற்றில் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவேண்டும். ஒருவேளை அவ்வைதம் காற்றின் ஈரப்பதம் நுழைந்து படத்தில் ஒருவித பூஞ்சைகள் வந்துவிட்டால் படத்தை பிரித்து கண்ணடியை மட்டும் மாற்றிவிட்டு, கண்ணடியையும் ஓலையையும் துடைத்து காயவைத்து மீண்டும் சேர்த்து சுவரில் தொங்கவிட்டால் எந்த பாதிப்பும் இருக்காது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: