பனைமரச் சாலை (17)


சமய உரையாடல்

சமய உரையாடல்

சமய உரையாடல்

அன்று காலை நான் ஹைதராபாத் போகும் வழியில்தானே  எனது நண்பன் அனுப்பிய பணத்தை எடுக்கும்படியாக ஒரு வெஸ்டெர்ன் யூனியன் சென்றேன். அது ஒரு சிறிய மளிகை கடை. அங்கிருந்த மனிதர் என்னை வரவேற்று சற்று நேரம் ஆகும் என்று சொல்லி உட்கார வைத்தார். பின்னர் என்னிடம் பேச்சுக் கொடுத்த போது நான் போதகர் என்றும், பனை மரங்களின் திரட்சியை மற்றும் அவைகளில் பணிசெய்பவர்களின் வாழ்க்கைத்தரமும் எப்படி இருக்கின்றன என பார்க்க ஒரு முன்னோட்ட பயணமாக மும்பையிலிருந்து கன்னியாகுமரி செல்கிறேன் என்றேன்.

அவருக்கு நான் போதகர் என கூறிய வார்த்தை தான் பெரிதாக தென்பட்டது போலும். மதமாற்றம் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றார். மிகவும் மையமான ஒரு பிரச்சனையை அவர் துவங்கியிருப்பதாலும் எனது பயணத்துக்கு அது சற்றும் சம்பந்தம் இல்லாததாலும் நான் அதை தவிர்க்க விரும்பினேன். எனக்கு விவாதங்களில் விருப்பமில்லை, அதுவும் முன் பின் தெரியாதவர்களோடு செய்யும் விவாதம் வீணான சச்சரவுகளுக்கு நம்மை கொண்டு செல்லும் என அறிந்திருந்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. சற்று நேரம் இருக்கிறது என கூறி மிகவும் அன்போடு என்னை விவாதத்திற்குள் இழுத்துப்போட்டார்.

ஆகவே நான், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அவரவர் சமயத்தை போதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பதாக பொதுவாக கூறினேன். அவருக்கு அது போதவில்லை, நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தை தருவித்து மனமாற்றம் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டினார். நான் சொன்னேன், எனது நண்பன் அனுப்பிய பணத்தை எடுக்க தான் நான் இங்கு வந்தேன், எனக்கும் மதமாற்றத்திற்கும் நேரடியாக எந்த சம்பத்தமுமில்லை. உங்களிடத்தில் கூட நான் எனது சமயத்தை குறித்து கூறவோ உங்களை மதமாற்றம் செய்யவோ நான் முற்படவில்லை.

எனது பயணம் வேறு திசையிலானது என கூறினேன். ஆனால் அவரும் மிக அதிகமாக மூளை சலவை செய்யப்பட்டிருப்பதனால் தான் அவர் ஒன்றையே பற்றி நிற்கிறார் எனவும், விரிந்த ஒரு பார்வையில் பிரச்சனைகளை அணுகவும் அவர் தயாராக இல்லை என்பதும் எனக்கு புரிந்தது.

ஆகவே அவர் பின்னணியத்தை நான் அறிந்துகொள்ள நான் விரும்பினேன். அவர் சொன்ன காரியங்கள் என்னை மிகவும் வேதனை படுத்திய ஒன்று. அது மதமாற்றம் குறித்த மாயையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அறிந்து உணர வேண்டிய பாடம்.

ஒரு முறை தனது கடைக்கு ஒரு போதகர் வெஸ்டெர்ன் யூனியனிலிருந்து பணம் எடுக்கும்படியாய் வந்திருக்கிறார், இவரும் அவரை வரவேற்று என்னோடு பேசுவதுபோல் பேச்சு கொடுத்திருக்கிரார். வந்தவர் மிகுந்த ஆன்ம பாரத்தோடு கிறிஸ்துவை பகிர்ந்திருக்கிறார். நண்பருக்கோ கேட்க கேட்க ஆனந்தம். ஆகவே இருவரும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சந்தித்திருக்கிறார்கள். தனது ஆன்மீக வாழ்வினை செறிவு படுத்த நண்பர் முயற்சிக்கையில், வந்தவருக்கோ ஒரு ஆன்மாவை மரண இருளிலிருந்து இரட்சிக்க வேண்டும் எனும் தாகம் மேலோங்கியதால், அந்த போதகர், நீங்கள் வணங்குவது சாத்தானை, அனைத்தையும் உடனே விட்டுவிடுங்கள் என கூறியிருகிறார்.

நண்பருக்கோ அதிர்ச்சி, காலம் காலமாக நாங்கள் வழிபட்டு வந்தது கடவுள் இல்லையா? உனது கடவுளை நீ கூரும்போது கேட்டேனே, எனது கடவுளைப் பற்றி நீ கேட்காவிட்டாலும் பரவாயில்லை அதை குறித்து தவறாக பேசுவது தான் உனது கடவுள் உனக்கு கற்று தந்திருக்கும் பாடமா? என்பது போன்ற கேள்விகள் அவரில் நிரம்ப, சென்று சேர வேண்டிய இடத்தில் சென்று சேர்ந்திருக்கிறார். பிற மதத்தினர் எல்லாரையும் கொல்ல வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியெற்ற வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறார். நாங்கள் எத்தைனை பேர் இருக்கிறோம், சிறுபான்மையினராக இருந்து கொண்டு எங்களையே குறை சொல்லும் அளவிற்கு வந்து விட்டீர்களா?

நான் அயர்ந்து போனேன், இத்துணை வன்மத்தை ஒருவர் பெறத்தக்கதாக நமது பணிகள் இருக்கின்றனவா என எண்ணினேன். ஆம், பெரும்பாலான நேரங்களில், கடவுளின் அன்பை சொல்லுகிறோம் என்று எண்ணிக்கொண்டு வம்பையே பகிர்ந்து கொள்ளுகிறோம்.

அப்போது அவர் எனக்கு தண்ணிர் குடிக்கக் கொடுத்தார். அந்த கூஜா இஸ்லாமிய பாணியில் நீண்ட காழுத்தை உடையாதாக அமைந்திருந்தது. நான் அவரிடம் கூறினேன் பல்சமயத்தவர் நம்மிடையே இருக்கும்போது நாம் சிலவற்றை கொடுத்து சிலவற்றை பெற்றுக்கொள்ளுகிறோம். அது நம்மை சீர்தூக்கிப் பார்க்கும் கண்ணாடியாகவும் இருக்கிறது. நல்லவற்றை பிறவற்றிலிருந்து எடுப்பதும் நமது தனித்தன்மைகளை பேணிக்கொள்வதும் நல்லதுதானே? இந்த கூஜாவையே எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு இஸ்லாமிய வடிவமைப்பில் இது இருக்கிறது, இதை நீங்கள் இஸ்லாமியரின் கொடையாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களா? இந்த வடிவம் பார்வைக்கு அழகாயும், பயன்பாட்டிற்கு ஏற்றதாயும் இருப்பதனால் தானே நமது மக்கள் இன்றளவும் இவ்வடிவமைப்பை பயன்படுத்துகின்றனர்? தவறுகளை மன்னித்து முன்செல்வது தானே மனித பண்பு என்றேன் .சுமார் 2 மணிநேரம் எனக்கு அங்கே செலவானது.

ஆனால் அவரது காயம் ஆழமானது. அவரால் எனது வார்த்தைகளை தொடர முடியவில்லை. எனக்கும் அங்கு செலவளிக்க அதிக நேரம் இல்லை. எனது தொடர்பு எண் உங்களிடம் இருக்கிறது. நாம் நண்பர்கள் என்பதையே நினைவில் கொள்ளுங்கள். என்னை நீங்கள் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்றேன்.

எனது அம்மா சிறுவயதில் சொன்ன ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது. ஒரு கறிக்கடைக்காரன் மனத்திரும்பி தனது தீய வழிகளை விட்டு நல்லவனானான். அவனுக்கு கடவுளை போதித்தவர்கள் அவனும் அதை பிறருக்கு சொல்ல கடமைப்பட்டவன் என கூறியிருந்தனர். அவனது தொழிலை அவனால் விட முடியாதாகையால் அவன் தன்னை தேடி வரும் மனிதர்களுக்கு கடவுளை பற்றி எடுத்து கூற தலைப்படலானான். ஒரு நாள் தனது கடைக்கு வந்த ஒரு சிறுமியிடம் அவன் கடவுளைப்பற்றி கூற அச்சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு கறியையும் வங்காமல் சென்றிருக்கிறாள். என்ன காரணம் என்றால் கடவுள் அன்பானவர் என்று உனக்குத் தெரியுமா என் அவர் கரத்தில் கறி வெட்டும் கத்தியை காட்டி கேட்கும்போது பாவம் சிறுபிள்ளை எதை புரிந்துகொள்ளும்?

 

கிறிஸ்துவின் கடைசி கட்டளை போல் அவரது கன்னி அழைப்பும் முக்கியமானது. அவைகளை நாம் முக்கியத்துவப்படுத்துவதில்லை. மேலும் இயேசு தமது சமூகத்தின் உள்ளிருந்த தீமைகளையே சாடினார், நாமோ நம்மை சுய பரிசோதனைக்குட்படுத்தாமல் பிறரிடம் உள்ள தவறுகளையே காண முற்படுகிறோம். வாழ்வில் சில நேரங்களில் நாம் முன்னிறுத்த வேண்டிய கருணை கடலாம் இயேசுவை பின் தள்ளிவிட்டு பரபாசாகா தப்பித்துகொள்ள முற்படுகிறோம்.

கனத்த இதயத்தோடு அங்கிருந்து புறப்பட்டேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

குறிச்சொற்கள்: , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: