பனைமரச் சாலை (18)


கள்ளும் கடவுள் நம்பிக்கையும்

கள் விற்பனை நிலையும், ஹைதராபாத்

கள் விற்பனை நிலையும், ஹைதராபாத்

நான் ஹைதராபாத்தை நெருங்குகின்ற தருணத்தில், அங்கே ரோட்டோரத்தில் கள் விற்பவர்களைப் பார்த்தேன். நெடுஞ்சாலை ஓரத்தில் கள்ளை விற்பதா? நடக்கிற காரியமா என எனது தமிழ்நாட்டு மனம் நினைத்தது. வண்டியை நிறுத்திவிட்டு அந்த கடையை நோக்கி சென்றேன். சந்தையைப்போலவே வாங்க சார் வாங்க சார் என்றே கூவி அழைத்தனர். இவ்வளவு அன்பாக அழைட்த பின்பு போகவில்லையென்று சொன்னால் தப்பாக நினைத்துவிடுவார்களே என்று எண்ணி வண்டியை நிறுத்தினேன். மண் குடுவைகள் சற்று நீண்டு இருந்தன. தென் தமிழகத்தில் காணப்படும் கலயங்கள் போலல்லாது ஒரு இஸ்லாமிய மருவிய வடிவம் தென்பட்டது.  அது  உண்மையில் கடையல்ல, சாலையோர விற்பனை நிலையம். கிட்டத்தட்ட எட்டு விற்பனை நிலையங்கள் அங்கே சாலையின் இருமருங்கிலும் இருந்தன.

சாலை அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை, அதற்கு முன்பு அழகிய மண் பானைகள் அடுக்கிய கற்களின்மேல் வரிசையாக் வைக்கப்படிருந்தன.  கீறு கொட்டகைக்குள் அமர்ந்து குடிக்க கற்பலகைகளும் பிளாஸ்டிக் கேன்களில் நிறைத்து வைக்கப்பட்ட கள். அதுபோலவே பெரிய பானைகளிலும் நுரைக்க நுரைக்க வைத்திருந்தார்கள். மொழி தெரியாவிட்டாலும் பனை சார்ந்த காரியங்களை எப்படியும் அறிந்து கொள்ளுகின்ற நுட்பம் என்னுள் நிறைந்திருக்கிறது போலும். காள்ளின் வாசனை வேறாக இருந்தபடியால் என்ன கள் எனக் கேட்டேன். சிந்தி என்றார். சிந்தி என சொல்லப்படுவது நாட்டு பேரீச்சை மரங்கள் (ஈச்சமரங்கள்). கள் இறக்குபவர்கள் வேறு விற்பவர்கள் வேறு என அறிந்துகொள்ள முடிந்தது. சுமார் ஒரு லிட்டர் கள் வெறும் 30 ரூபாய் என தெரிந்தபோது, கண்டிப்பாக பனையேறிகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், நல்ல கூலி கிடைக்கும் என எண்ணிக்கொண்டேன்.

கடும் வெயில் வெதும்புகின்ற பகுதிகளில் பனையிலிருந்தோ அல்லது ஈச்சமரங்களிலிருந்தோ கள் பெறப்படுவது முற்காலங்களில் வாடிக்கையான ஒன்றாக இருந்திருக்கலாம். கேடையின் வெம்மையை எதிற்கொள்ள இறைவனே அளித்த கொடையாக மக்கள் கள்ளை எண்ணியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.  பதநீரில் பயன்பாடு என்பது குறுகிய கால அளவை உடையது. மூன்று மணி நேரத்துக்குமேல் சுண்ணம்பு சேர்த்தாலும் பதனீர் சளித்துவிடும். ஆகவே இயற்கையாகவே புளிக்க வைத்து பயன்படுத்துவது எளிதான காரியமாக இருந்திருக்கலாம். மாத்திரம் அல்ல, இவைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய இடங்கள் தூரமாக இருக்கின்ற படியாலும், நாள் முழுவதும் பயணிகள் வந்து போவதாலும், இவ்வித நடை முறை அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

மேலும் கள்ளானது மிக குறைந்த அளவிலான போதை உள்ள பானமாகையால் அவைகள் மிக பரவலாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தன.  அவைகள் பல்வேறு மதத்தினராலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எவ்விதம் என உறுதியாக கூற முடியாவிட்டாலும் நாம் யூகிக்கத்தக்க  தரவுகள் நம்மிடம் உள்ளன. தமிழகம் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் செய்யப்படும் ஆப்பத்தில் கள் ஊற்றுவது மிக சமீபத்திய வழக்கம். இந்த வழக்கம் தொன்று தொட்ட ஒரு பழக்கத்தின் மருவிய வடிவமாகவே நாம் அறிகிறோம். பல்வேறு மிஷன் காம்பவுண்ட்களில் கள் அவ்விதமாக இறக்கப்பட்டிருப்பதை அறியும் போது, கள்ளைக் குறித்த தற்போதைய தமிழக எண்ணங்கள் அல்லாத வேறு ஒரு சித்திரம் நமக்கு கிடைக்கிறது.

என்றாலும் எல். எம். எஸ் சரித்திரத்தை வசிக்கும் போது, குமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் என்ற பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், கள்ளை தொடக்கூடாது என்றும், கள் இறக்குகிறவர்களை ஊர் விலக்கம் செய்ய வேண்டும் என 150 வருடங்களுக்குமுன்  நடை பெற்ற சம்பவத்தை குறித்த ஒரு பதிவு ஞாபகம் வருகிறது. அது போலவே கால்டுவெல் தனது புத்தகத்தில், பனை மரம் குறித்து விவரித்து எழுதும்போதும், தனது நீண்ட பயனத்தில் தான் ஒன்றிரண்டு பனை மரங்களையே கள் இறக்கும் லைசென்ஸ் கொண்டவைகளாக காணப்பட்டதை குறிப்பிடுகிறார்.

இஸ்லாமியர்களுக்கும் போதை வஸ்துக்களுக்கும் பெரும் விலக்கம் உண்டு என்பது நாம் அறிந்ததே. ஆயினும், நான் கண்ட அந்த குடுவைகள் இஸ்லாமிய பாணியில் அமைந்திருந்ததால், ஹைதராபாத் பகுதியில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. ஆனால் அவைகளை நான் இனிமேல் தான் ஆய்வு செய்ய வேண்டும். அவ்விதமான ஆய்வு பல்வேறு வகைகளில் நமது கண்களை திறக்கின்ற ஒன்றாக அமையும்.

தமிழகத்தை தவிர இந்திய அளவில் கள்ளை எவரும் தடை செய்யாததற்கு என்ன காரணம் என அறிவதற்கு அதிக ஆய்வுகள் தேவையில்லை. அவை மலிவான அரசியல் லாபத்திற்கானவை. ஆனால் தமிழகத்தில் மட்டுமே பனை ஏறுபவர்கள் ஒன்றாக திரளாமல் இருக்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டும் முயற்சியோ அவர்களை முன்னேற்றும் முயற்சியோ சரியானபடி முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டும் உறுதி. கள்ளை தீய ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி பேசியவர்கள் அனைவரும் மது ஆலைகள் ஆறாக பாய்கின்றதை கண்டும் காணாமல் இருப்பது நமக்கு அதிக தெளிவுகளைத் தருகின்றது.

ஆகவே கள்ளை ஆதரிக்க வேண்டும் என எவர் நினைத்தலும் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அது நடைமுறை சாத்தியமானது மாத்திரம் அல்ல, பனை சார்ந்து நாம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும்  அது பின்னடைவையே கொடுக்கும். ஆகவே கள்ளை முன்னிறுத்துகிற முயற்சிகளை கைவிட்டு வேறு விதங்களில் பனையை முன்னிறுத்துவது நல்லது என்றே நான் கருதுகிறேன்.

கள்ளை முன்னிறுத்துகிற அதற்காக காளமிறங்கி போராடுகிற கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் கள்ளு நல்லூசாமி மேல் எனக்கு பெரும் மதிப்பே உண்டு. ஆனால் நாம் பிரிட்டிஷ் அரசுடன் போராடிய காந்தி இல்லை. நல்ல போராட்டங்களுக்கு செவி சாய்க்கிற நிலை தமிழகத்தில் இல்லை. ஆகவே போராட்ட முறையை நாம் வேறு வகையில் முன்னெடுக்க வேண்டும். பனை இருந்தால் தனே கள்ளுக்காக போராடுவார்கள் எனும் இக்கட்டான நிலைக்கு நாம் ஒருபோது வழி வகுத்துவிட கூடாது.

அங்கிருந்து வருகிற வழியில் உணவுக்காக நின்றபோது, உணவக உறிமையாளரின் அருகில் ஒரு பனைஓலை குல்லா இருந்தது. அவரோ துணியால் செய்யப்பட்ட  ஒரு குல்லாவை அணிந்திருந்தார். நான் அவரிடம் பனை ஓலையில் செய்யப்பட்ட அந்த குள்ளவிக் கொடுத்து அணியச்சொன்ன போது அவர் மறுத்து நீங்கள் அணியுங்கள் என்றார். நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்பின் அடையாளமாக கருதி அதை அனிந்க்டு அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த குல்லா நான் நினைத்தது போல பனை ஓலையால் செய்யப்பட்டது அல்ல, அது ஈச்ச ஓலையால் செய்யப்பட்டது.

ஈச்ச ஓலையில் செய்யப்பட்ட தொழுகைக்கான தொப்பி

ஈச்ச ஓலையில் செய்யப்பட்ட தொழுகைக்கான தொப்பி

நான் குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் இருந்தபோது சி. டி எம் பகுதியிலிருந்து கிழக்கில் செல்லும் சாலையில் இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். அவர்கள் இருந்த பகுதியில் சுமார் 25 பனைமரங்கள் இருக்கும். சுற்றிலும் வேறு எங்கும் பனை மரங்கள் கிடையாது.  இஸ்லாமியர்களுக்கு பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாலும், பேரீச்சைகள் இங்கு வளர்வதில்லை என்பதாலும், பனை மரங்களை அவர்கள் பேரீச்சைக்கு மாற்றாக கொண்டிருக்கலாம்.

முகாஃபிஸ்கான் பள்ளிவாசல்

முகாஃபிஸ்கான் பள்ளிவாசல், அகமதாபாத், குஜராத் (நன்றி: இணையம்)

ஒருமுறை நான் பனைமரங்களைத் தேடி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன், அப்போது என்னருகில் ஒரு இஸ்லாமியர் அமர்ந்திருந்தார். பொதுவாக குமரி மாவட்டத்தின் இஸ்லாமியர்களை அவர்கள் சமய உடை இல்லாமல் பிரித்தறிய முடியாது. எளிய உடையில் இருந்த அவரிடம் நான் பேச்சு கொடுத்தபோது அவர், நாகர்கோவில் மணிமேடையில் உள்ள பள்ளி வாசல்களில் பனைஓலையில் செய்யப்பட்ட குல்லாய் வைத்திருப்பார்கள் என்றும், குல்லாய் அணியாமல் வருபவர்கள் அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்கள்.

பொதுவாகவே பனையோலை தடுக்குகளை இஸ்லாமியர் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். பனை ஓலைகளை நான் பயன்படுத்தும்போது மிக அதிக ஊக்கமும் ஆதரவும்  எனக்கு இஸ்லாமிய   நண்பர்களிடமிருந்தே கிடைத்தது என்பதையும் நான் இவ்விடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: