பனைமரச் சாலை (21)


 

மனித வாழ்வில் முன்று முக்கிய தாவரங்கள் தங்கள் பலனை அளித்து மனிதர்களது வாழ்வை மேம்படுத்தியிருக்கின்றன என தாவரவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். புல் இனம் (Gramineae), பயறு அல்லது கொட்டைகள் விளையும் தாவரங்கள் (pulses – Leguminosae )மாற்றும் பனை வகைகள் (Palmae).   பனை மரத்தில் மட்டுமே இரன்டாயிரத்துகு அதிகமான இனங்கள் காணப்படுகிறன, பெரும்பாலும் வெப்பமண்டல பிராந்தியங்களில் கானப்படும் தாவர இனம். தென்னை, பேரீச்சை, எண்ணைப்பனை பொன்றவௌஇ மனிதர்களுக்கு காலம் காலமாக அதிக பயனை அளிட்த மரங்கள். இவைகளோடு பயனுள்ள பனைமரத்தை நாம் சேர்க முடியும். ஆனால் பனை மரத்தின் பயன்பாடு அருகிவருவதினாலே அனேகருக்கு பனை மரம் என்றால் அவர்கள் அறிந்திருக்கும் வேறு மரங்களையே  குறிப்பிடுவர்.

உலகின் பல்வேறு தேவைகளை பனை மரத்தின் குடும்பம் நிறைவு செய்திருக்கின்றன. நல்ல தங்குமிடத்திற்கு ஓலைகள் வேயவும், தூண்களுக்கு பதிலாக இயற்கையிலேயே உருண்டையாக காணப்படும் அதன் அடித்தண்டுகளும், உணவுக்காக பல்வேறு கனிகளும், குடிப்பதற்கு மென்பானங்கள் மற்றும் போதையளிக்கும் கள், காய்ச்சும்போது கிடைக்கும் இனிப்பு போன்ற  பல்வேறு பயன்பாட்டு காரியங்களைக் குறிப்பிடலாம். ஓலைகள் பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்கள் செய்வதற்கு, தொப்பிகள் செய்வதற்கு, அலங்கார பொருட்கள்  என மிகப்பெரிய பயன்பாட்டுப் பட்டியலை கொண்டுள்ளது. இவைகளைக் குறித்து தனியாக ஒரு குறிப்பு எழுதவேண்டும். எஞ்சிய பொருட்களை சேர்த்து ஒரு அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.

ஆப்பிரிக்காவைக் குறித்து எனக்கு அதிகம் தெரியாது ஆனால் ஆசியப் பகுதிகளில் பனையோலையில் காவியங்கள் எழுதி பாதுகாக்கப்பட்டன. உலகம் கற்களிலோ அல்லது பெரும் மண்பாண்டங்களிலோ, களிமண் தட்டுகளிலோ தங்கள் பதிவுகளை நிறைத்த நேரம், இந்தியாவில் பனையோலைகளில் இப்பணிகள் இயல்பாகவும் சர்வ சாதாரணமாகவும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதற்கு இணையாக எளிதான பதிவுகள் சீனாவின் பட்டுத் துணி பதிவுகளும், எகிப்த்தின் பாப்பிரஸ்ஸும் தான். பாப்பிரஸ் மற்றும் ஓலை மட்டும்தான் இயற்கையை அப்படியே பயன்படுத்தி செய்யப்பட்ட எளிதான பதிவு முறை.

பனை மரங்கள் முற்காலத்தில் வீரத்திற்கும் செழுமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது, ஆகவே அவை சடங்குகளிலும் சமய வழிபாட்டிலும்  முக்கிய இடத்தை பிடித்தது. அல்லாமலும் அவைகள் மிக திறட்சியாக காணப்பட்டதும் ஒரு காரணம். பல்வேறு பயன்பாட்டில் அவைகள் நீக்கமற நிறைந்து இருக்கையில் கண்டிப்பாக ஒருவரது சிந்தையிலும் அவைகள் ஒரு குறியீடாக மாறிவிடுவதில் வியப்பேதும் இல்லை. அனைத்தையும் கொடுக்கும் கற்பக விருட்சம் என்ற பெயர் கிடைக்கபெற்றது அதனால் தான். மனித மனம் முயற்சிக்கும் அனைத்திற்கும் தன்னை விரிவாக்கிகொள்ளும்  அதன் பல்வேறு பயன்பாட்டு முக்கியத்துவம் மனிதனுக்கு ஒரு சவாலாகவும், ஆச்சரியமானதாகவும், எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. ஆகவே அவன் அதை நேசிக்க ஆரம்பித்தான்.

தற்போது விடுமுறைகளில் பொழுது போக்கும் இடங்களைக் குறிப்பிடவும், வெப்பமண்டல பிரதேசங்களைக் குறிக்கவும் பனை மரங்கள் பயன்படுகின்றன. பூங்காக்கள் மற்றும் சாலையின் இரு மருங்கிலும் பனை குடும்ப தாவரங்களை வைத்து பாதுகாப்பது இன்றைய மரபு. அதற்கு காரணம் தொல் பழங்காலத்தில் அவைகளில் இருந்து மனிதர்கள் பெற்றுகொண்ட பயன்களே எனக் கொள்ளலாம். இன்று அவைகள் பயன் பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதையும் பூடகமாக சுட்டி நிற்கின்றன அழகு தரும் பனை தாவர குடும்பங்கள்.

நாண்பர்கள் வந்துவிட்டனர். பிரபாகரோடு வேறு ஒரு போதகரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். சற்று நேரம் வெடித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு கேள்விகள், திருச்சபையாக என்ன செய்யலாம் பொன்ற காரியங்களையும் சிந்தித்தோம். அதன் பிற்பாடு உணவு உண்ணும்படியாகச் கிளம்பினோம். ஆந்திரா கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் வெளியிலே தானே ஒரு கள்ளுக்கடை இருப்பதாகவும், நீங்கள் அதை கண்டிப்பாக பார்கவேண்டும் எனவும் அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதெற்கென்ன என்று கள்ளுக்கடை நோக்கி போனோம்.

காவி நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட சுவர்கள் அவைகளில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பனை சார் ஓவியங்கள் என அட்டகாசமாக இருந்தது. உள்ளே கல்லாவிலே ஒருவர் இருந்தார் கள்ளெடுத்து கொடுப்பதற்கும் ஆட்கள் இருந்தனர். ஆனால் அங்கு வைகப்பட்டிருந்த கள் தான் எனது கவனத்தை கவர்ந்தது. கடையின் ஒரு ஓரத்தில் மண்ணை கொட்டி சிறிய பானைகளை பதித்து வைத்திருந்தார்கள். நுரைத்து ததும்பும் கள் பானைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சுனைகளில் தண்ணீர் ஊறி நிர்பது போல. பல  கண்களை சேர்ந்து நம்மை உற்றுப்பார்ப்பது போல. ஒரு நட்சத்திர  விடுதிகளுக்கு இணையான நேர்த்தி.  பனை சார் சுற்றுலா மையம் ஒன்று துவங்கினால் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்த்தேன்.

பிற்பாடு நாங்கள் அங்கிருந்த கடைகாரரிடம் பெசினோம். பனை மரத்திலிருந்து பெறுகின்ற கள்ளைத்தான் அவர்கள் விற்கிறார்கள் என்றும், அரசு இதை ஊக்குவிக்கிறது என்றும் கூறினார். ஒரு காலத்தில் ஆந்திராவில் எக்சைஸ் டிபார்ட்மென்ட் என்று சொன்னால் அது கள்ளால் வரும் வருமானமே. இன்று அந்த நிலை மாறி விட்டது. வெளிநாட்டு மது இன்று கல்லாவை நிரப்புகிறது. ஒரு வகையில் அழிந்து போன பாரம்பரியத்தின் ஒரு கடைச் கோட்டை அந்த கடைக்காரர் பற்றியிருக்கிறார் எனத் தோன்றியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: