பனைமரச் சாலை (22)


கருமையும் காலமும்

பிரபாகர் என்னிடம் ஹைதராபாத்தின் மண் மணம் கமழும் ஒரு உணவகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லபோகிறேன் என்று கூறிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு சென்றார். சிக்கலான சாலைகள் வழியாக ஒரு பாரம்பரிய உணவகத்திற்கு சென்று சேர்ந்தோம். நெருக்கமாக இருந்தது. எளியவர்கள் வந்து செல்லும் உணவகம் தான். உணவுகள் மிகவும் சிறப்பாயிருந்தன. நான் இனிமேல் ஹைதராபாத் வரவேபோவத்தில்லை  என எண்ணினேனோ தெரியாது நிறைவாக சாப்பிட்டேன். அதன் பின்பு நான் சூர்யாபேட் செல்லவேண்டுமாகையால் அவர்கள் என்னை நான் செல்லவேண்டிய பாதையை கண்டடையுமட்டும் என்னோடு வந்து வழி காட்டினார்கள்.

முக்கிய சாலையிலிருந்து நான் எங்கும் திரும்பவேண்டாம் என்பதால் சாலையில் கவனம் குவித்து வண்டியை ஓட்டினேன். நண்பர்கள் அருகில் இல்லாதபடியாலும், உணவை வெளுத்துவாங்கியதாலும் தூக்கம் வந்தது. வண்டியை ஓரம் கட்டலாம் என நினைத்தபோது தான் எனக்கு உறைத்தது, வண்டியை நிறுத்தும்படியாக உகந்த இடம் என்று ஒன்று எங்குமே இல்லை. வண்டிகள் வெள்ளம் போல் பாய்ந்து ஒழுகிக்கொண்டிருந்தன. மிகவும் பரபரப்பான இடமாகையால் பட்டணத்திற்குள் நிறுத்துவதற்கு உகந்த இடம் ஏதும் இல்லை. வேறு வழியில்லாமல் அரை தூக்கத்தோடு வண்டியை ஓட்டினேன். என்ன முயற்சி செய்தும் என்னால் தூக்கத்தை முழுமையாக  நிறுத்த முடியவில்லை. ஆனால் தூங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நான் தூங்குவது தற்கொலைக்கு சமம்.

சுமார் ஒருமணிநேரம் வண்டியை ஓட்டியபின் சலையோரம் ஒரு கோவில் தெரிந்தது. சிறிய இந்து கோவில்தான். அதன் பிரகாரத்தில் ஒரு குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒரு சன்னியாசி படுத்துக்கொண்டிருந்தார். இனிமேலும் பொறுக்கமுடியாது என்பதல்ல, இவ்வளவு நேரம் எப்படி சமாளித்தேன் என்பதே பெரிய விஷயம் ஆகையால் உடனடியாக வண்டியை நிறுத்தினேன். தூங்கும் போது யாரேனும் என்னை எழுப்பிவிடுவார்களோ என்று ஒரு அச்சம் இருந்தாலும் வேறு வழியில்லை என்பதை நன்குணர்ந்ததினால் எனது பையைத் துக்கிகொண்டு அங்கு சென்று அதை முதுகுக்கு அணைக்கொடுத்து தூங்க ஆரம்பித்தேன்.  வாழ்வில் அத்துணை தூக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு மணி நேரம் அருகிலிருந்த சாலையில் ஓடிய வாகன இரைச்சலோ எதுவுமோ என்னை தொந்தரவு செய்யவில்லை.

தலை சாய்த்த  காளி கோயில்

தலை சாய்த்த காளி கோயில்

எழுந்தபோது மிகவும் உற்சாகமாயிருந்தது. களைப்பு மாறி புதிய பயணத்துக்கான உத்வேகம் என்னில் கூடியிருந்தது. ஆனால் எழுந்தவுடன் நான் தங்கியிருந்த இடத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். எங்கே நிழல் கிடைக்கும் என்று பார்த்தேனே தவிர கோயிலின் முன்பகுதியை நான் பார்க்கவில்லை. மெல்ல நடந்து சென்றபோது அங்கே ஒரு காளி சிலை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பயங்கரமான தோற்றம், உக்கிரமான பார்வை, கொலைவெறி கண்கள், காலடியில் பிதுங்குகின்ற மனித உடல், கரங்களில் ஆயுதங்கள், கழுத்தில் மண்டையோட்டு மாலை, இரத்தத்திற்காக ஏங்கும் நாக்கு, நீல வர்ணத்தில் விஷமேறிய உருவம் போலிருந்தது. கொலைசெய்த தலைகளையும் கரங்களையும் இடுப்பில் ஆடையாக கட்டியிருந்தாள்.

காளி கோயில் சிலை

காளி கோயில் சிலை

சிறு வயதில் காளி உருவத்தை பார்த்து பயந்திருக்கிறேன் இப்போது பயப்படுவதற்கு ஏதும் இல்லை என்று அறிவேன், ஆனால் அந்த கோயில் வேறு ஒரு அதிர்ச்சியை எனக்கு வைத்திருந்தது. காளி சிலையின் அருகிலேயே தாழ்வாக கிளை பரப்பிய ஒரு மரம் இருந்தது. அந்த மரம் முழுக்க தோரணம் போல எதையோ கட்டி விட்டிருந்தார்கள். கூர்ந்து பார்த்தபொழுது அது கோழி மற்றும் ஆட்டின் கால்கள் என தெரிந்தது. என் அனுபவத்தில் இப்படியான ஒரு கொலைக்களத்தை நான் பர்த்ததில்லை.  தூக்கில் தொங்கிய கால்கள் போல அவைகள் இருந்தன. உடல்கள் இல்லா கால்கள் உடல்கள் எங்கே சென்றன? இங்கே பலி கொடுக்கிறார்களா? கேள்வி மேல் கேள்வி என்னை சூழ்ந்து நின்றன. ஒருவித அச்சம் கலந்த புன்னகை என்னிலிருந்து புறப்பட்டது.

அந்தரத்தில் பறக்கும் கால்கள்

அந்தரத்தில் பறக்கும் கால்கள்

காளி எனும் பெயர் காலா எனும் சம்ஸ்கிருத மூல வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. கருமை அல்லது காலம் என பொருள் கொள்ளக்கூடிய வார்த்தை அது. பனை மரம் கருப்பாக இருப்பதும் காலம் காலமாக மக்களிடையே வாழ்வதும் என என் எளிய மனது உருவகிக்கிறது.

சுற்றிலும் பார்க்கும்போது ஒரு பெண்மணி  படைக்கப்பட்ட கொப்பரை தேங்காய்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அது எனக்குள்  ஒரு பொறியை தட்டியது போல இருந்தது. தென்னை பனை வகைத் தாவரம், அப்படியென்றால் பனையை காளியாக உருவகிக்கும் போங்கு நமது ஊரில் உள்ளதே, என்ன தொடர்பு இருக்கும் என சுற்றிப்பார்த்தேன். பனை மரங்கள் தென்பட தொடங்கின. என்னால் இப்போது உறுதியாக சொல்ல முடியும் பனை மரத்துக்கும் காளிக்குமான தொடர்பு வெறுமனே சடங்கு சார்ந்த ஒன்று அல்ல மாறாக வங்கக் கடற்கரையோர மக்களின் தொல் பழங்கால உறவின் சுவடு.

அது என்னவென்று எனக்கு புரியவில்லை. எனினும் எனது உள்ளுணர்வு என்னை  அது சார்ந்து நான் அதிகம் கற்கவேண்டிய நிலையிலேயே இருக்கிறேன் என உந்துகிறது. ஒருவேளை புதிய வாசல்களை அவைகள் எனக்கு திறக்கலாம். எடுத்துக்காட்டாக காளியின் கரத்திலிருக்கும் ஆயுதம் பாளை அருவாளையே ஒத்திருக்கிறது. பாளை அருவாள் என்பது பனை மரத்திலிருந்து பதநீர் பெறவேண்டி பாளையை சீவ பயன்படுத்தும் பிறை வடிவிலான ஒருவித கத்தி. காளி தனது தலையிலும் பிறை சூடியிருக்கிறாள் என்பதும் இங்கு கவனிக்கதக்கது.

காளியும் பனைமரமும் என ஒரு ஆய்வு நடத்த விஷயமறிந்தவர்களிடம் அறிந்தவர்களிடம் கூரவேண்டும். அல்லது மேலதிக தகவல்களை திரட்டவேண்டும் என எண்ணிக்கொண்டேன். காளி குறித்து பெருமளவு ஆய்வுகள் நடந்துள்ளதை வைத்து பார்க்கும்போது வெறொரு கோணத்தையும் நாம் தொட்டெடுக்க இயலும் என்றே நான் நம்புகிறேன்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச் சாலை (22)”

  1. Evangeline Anderson Rajkumar Says:

    Dear Godson, you have used “palmyra tree” as a lens to narrate the story of a community, that is linked inseparably with other communities, who may be living in different “places” (geography) but whose “space” in this world is influenced by nature (palmyra tree). In a novel and incredible way, in your narration, you link the personal, the political, social, religious and economic aspects of shedding new light on the way human community, their relationship with one another and the livelihood that they depended on, that gave them a new meaning of community! I enjoyed reading your blog that gives fresh and fascinating interpretation of theology, using Palmyra Tree as the lens and an instrument. What strikes me is the immense potential of articulating theology anew from this ‘palmyra’ perspective, with the aim of building communities.

    Your insights connecting Goddess Kali to the palmyra tree deserves special congratulations for culling out new path for researchers in the field of religion and spirituality. Proud of your work, Godson!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: