பனைமரச் சாலை (34)


சாலை ஓர அனுபவங்கள்

நான் ஏலூரு வந்தடைந்தேன் என்பதே சாம்சன் ராஜுவுக்கு பெரும் கொண்டாட்டத்திற்கான செய்தியாக இருந்தது.  நீங்கள் இருக்குமிடத்திலிருந்து ஒரு 200 மீட்டர் முன்னால் வாருங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார்கள். அவரும் அவரது மகனும் ஸ்கூட்டியில் வந்து அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். எனக்கான ஆயத்தம் செய்த்த புத்தம் புதிய மேல்வீட்டு அறையில் தங்க வைத்தார்கள். குளியலறை இணைக்கப்பட்டிருந்தது. குளித்துவிட்டு வாருங்கள் உணவு தயாராக இருக்கிறது என்றார்கள்.

மிகவும் வசதியான அறை. அருகிலேயே ஃபேன் வைக்கப்பட்டிருந்தது. சாலையை நோக்கியபடி ஒரு ஜன்னல். வெளியே இருந்து காற்று வந்துகொண்டிருந்தது. வேகமாக குளித்து தயாராகி கீழே வந்தேன். மணி பத்தரை ஆகிவிட்டது. எனக்கோ களைப்பு எதுவும் தோன்றவில்லை ஆனால் கடும் பசி. நாட்டுகோழி குழம்பு ஆந்திரா ஸ்டைலில் வைத்திருந்தார்கள். அவரது மனைவி பறிமாறினார்கள். மிகவும் சுவைத்து சாப்பிட்டேன். எனது பயணம், யாவற்றையும் குறித்து விரிவாக கேட்டறிந்தார்கள்.

சாம்சன் ராஜுவுடன் அமர்ந்து இரவுணவு

சாம்சன் ராஜுவுடன் அமர்ந்து இரவுணவு

கம்மம் பகுதியில் நான் பார்த்த போதகர் ரவீந்த்ராவை அவர் ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறார் எனவும். அவர் தன்னை ஞாபகத்தில் வைத்திருக்க வாய்ப்புகள் குறைவு, ஆகவேதான் உங்களுக்கு அவர் எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னேன். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் கற்றவர்களானபடியால் உங்களுக்குள் ஒரு ஐக்கியம் தானே ஏற்படும் என யூகித்தேன். என்றார். மேலும் சோற்றூப்பள்ளியில் நீங்கள் போதகரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான காரியம், என் மனதில் அது தோன்றவில்லை பாருங்கள் அங்கே தான் எனது சகலை இருக்கிறார்  என சலித்துக்கொண்டார். முக நூல் நட்பு போன்றே தோன்றவில்லை ஒரு மூத்த அண்ணாவோடு சேர்ந்தமர்த்து பேசும் அற்புதமான தருணமாக இருந்தது.

மறுநாளுக்கான திட்டம் யாவற்றையும் அவர் எனக்காக ஒழுங்கு செய்திருப்பதாக கூறினார். அதற்கு ஆயத்தமாக என்னை பார்ப்பதற்காக ஒருவர் காத்திருப்பதாக கூறினார். இரவு பதினோருமணிக்கா என்றேன். ஆம் என வெளியே அழைத்துச் சென்றார். அவரது தொட்டடுத்த வீடும் சாம்சன் ராஜு அவர்கள் வீடு தான். அங்கே வாடகைக்கு இருப்பவர் பனைத் தொழிலாளர் கூட்டமைப்பில் பணியாற்றுகிறார். ஆகவே அவர் என்னைக் காணவெண்டும் என ஆவலுடன் காத்திருந்திருக்கிறார். சற்று நேரம் வேளியே அமர்ந்து பேசத்துவங்கினோம். சத்ய நாராயணனால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. ஆனால் சாம்சன் ராஜு உதவி செய்தார். மாறுநாளுக்கான திட்டங்களை வகுத்தோம். இரவு படுக்கும்போது 12 ஆகிவிட்டிருந்தது.

சத்திய நாராயணா, பனைத் தொழிலாளர் போராட்டத்தில்

சத்திய நாராயணா, பனைத் தொழிலாளர் போராட்டத்தில்

மறுநாள் காலை வேளையில் சத்யநாராயணா வீட்டில் எனக்கு உணவை ஆயத்தம் செய்திருந்தார்கள். பொடி தூவிய  ஆந்திரா தோசை. உணவிற்குப் பின்பு அறுபத்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சிக்காலபாலம் எனும் சிற்றூருக்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். எனது வாகனத்தில் புறப்பட்டோம். சம்சன் ராஜுவும் அவரது குடும்பத்தினரும் வழியனுப்பி வைத்தார்கள். மதிய உணவுக்கு வந்துவிடுங்கள் என அன்போடு கேட்டுக்கொண்டார்கள்.

நாங்கள் அங்கேயிருந்து புறப்பட்டுச் சென்ற பாதை விரிவாக அழகாக இருந்தது. இருமருங்கிலும் வயல்களும், திரட்சியான பனைமரங்களும் காணக்கிடைத்தன. நூற்றுக்கணக்கில் பனைமரம் காணக்கிடைக்காத இடங்கள் என ஒன்றும் இல்லை. அருகில் இருக்கும் பனைமரங்கள், சற்று தூரத்தில் இருப்பவை தொடுவானத்தின் அருகிலும் பனைமரங்கள். ஆந்திரா எனது கனவு தேசமாக மாறிக்கொண்டு வந்தது. இந்த ஊர் எனது வாழ்வின் முக்கிய புள்ளியாக அமையும் என நான் உறுதிகொண்டேன். நாங்கள் செல்லும் வழியில் ஒருவர்  மோகு இணைத்து பனை ஏறிக்கொண்டிருந்தார். எனது வாகனத்தை அங்கே தானே நிறுத்தினேன்.

பனைத் தொழிலாளி

பனைத் தொழிலாளி

பனை ஏறுபவரை பார்க்கும்போதுதான் அவர் கட்டியிருந்த கலயம் என் கண்ணுக்குப் பட்டது. குமரி நெல்லைப் பகுதியில் காணப்படும் கலயம் போலல்லாது சட்டிப் பானை போல் பெரிதாக இருந்தது. என்வரையில் அது ஒரு முக்கியமான வேறுபாடு. குமரியில் இவ்விதமாக பனைத் தொழிலாளர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். “நல்ல ஊற்றுள்ள பனைக்க மூட்டுல போனா கால்ல செளி பதைக்கும்”. ஊற்று அதிகம் உள்ள பனை மரங்களில் ஊறும் பதனீர், சாதாரணமாக கட்டும் கலயத்திலிருந்து நிரம்பி வழிவதால் பனை மரத்தின் அடிப்பாகத்தில் சேறு போல் ஆகிவிடும் என்பதே பொருள். அப்படியானால் ஆந்திராவில் பனையின் ஊற்று எப்படியிருக்கும்? பெரிய கலயம் கட்டும் அளவிற்கு அதிகமாக இருக்குமோ?

எங்களைப் பார்த்தவுடன் அவர் கீழிறங்கி வந்தார். சத்ய நாராயணா அவரோடு பேச்சுக்கொடுத்தார். தாம் பனைத் தொழிலாளர் பேரவையில் பணிபுரிவதையும் எனது பயணத்தையும் அவருக்கு எடுத்துக்கூறினார் என ஊகித்தேன். அந்த பனைத் தொழிலாழி எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தார். நான் முன்பு பார்த்தது போலவே ஒரு சைக்கிளை நடமாடும் கள்ளுக்கடையாக அழகாக வைத்திருந்தார்.

சைக்கிளின் இரு புறத்திலும் கள்ளுக்கான பிளாஸ்டிக் கேன்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் அரிப்பும் அளந்து கொடுக்கும் நாழி போன்ற பாத்திரமும் வைத்திருந்தார். மண்பாண்டத்திற்குப் பதிலாய் அலுமினிய பாத்திரத்தில் கள் எடுத்துச் செல்வார் போலும். நாங்கள் அங்கே பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் வேகமாக ஸ்கூட்டியில் வந்து நான் யார் எனக் கேட்டார். சத்ய நராயணா அவருக்கும் விளக்கம் அளித்தார். புரிந்துகொண்ட அவர் என்னோடு அங்கிலத்தில் பேசினார்.

எக்ஸைஸ் அதிகாரியுடன்

எக்ஸைஸ் அதிகாரியுடன்

தான் எக்ஸைஸ் துறையில் பணிபுரிவதாகவும், தனது பணி பனைத் தொழிலாளர்களின் லைசென்சை புதுப்பிப்பதும் அவர்கள் வைத்திருக்கும் லைசன்ஸ் காலாவதி ஆகாமல் பார்த்துக்கொள்ளுவதும் என குறிப்பிட்டார். ஒருகாலத்தில் மிகவும் ஓகோவென்றிருந்த துறை இன்று நலிவுற்று இருக்கிறது என்றும் சொன்னார். எந்த வகையில் சொன்னார் என எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது கணக்குகளின்படியும் அவர்கள் நலிவுற்றே இருக்கின்றனர்.

இளநீர் கடையில்

இளநீர் கடையில்

அங்கிருந்து சற்று தொலைவு சென்றபோது இளநீர் விற்பவர் ஒருவரைப்பார்த்தோம். தாகம் எடுத்துவிட்டது ஒதுக்கட்டுமா என்று கேட்டுவிட்டு வண்டியை நிறுத்தினேன். நாங்கள் இளநீர் குடிக்கும்போது சத்ய நாராயணவிற்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் அந்த அழைப்பில் மூழ்கியிருக்க நான் சுற்றிலும் நின்ற பனைகளை வேடிக்கைப் பார்க்க சென்றேன். அப்போது ஏதேச்சையாக நான் ஒரு வீட்டின் முன்பதாக பனையோலைகளை குவித்து வைத்திருக்கிறதைக் கண்டேன்.

மிதித்து காயப்போட்ட ஓலைகள்

மிதித்து காயப்போட்ட ஓலைகள்

நான் கண்ட பனையோலைகள் சாதரணமாக குவித்து வைக்கப் படவில்லை வைக்கோல் போர் போல சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓலைகள் நழுவிவிடாதிருக்க, உறுதியான கழிகள் அதன் மேல் வைக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பு எதற்கு? பொதுவாக பனையோலையில் வீட்டின் கூரையை அமைப்பவர்கள், பனையோலையை பதப்படுத்தும் முறை இது. பனையோலைகள். மூன்று திசையாக பிரிந்திருக்கும். அவைகளை அப்படியே பயன்படுத்த இயலாது. ஆகவே முதலில் அவைகளை மிதித்து நேராக மாற்றுவர்கள். பின்னர் அவைகளின் மேல் பாரங்களை ஏற்றி வைத்து அவைகள் நேராக இருக்கும்படியாய் செய்வார்கள். தமிழகத்திலும் இந்த முறையே பயன்படுத்தப்படுகிறது. வெட்டிப்போட்ட ஓலையை உடனடியாக மிதிக்க வேண்டும் அல்லது மறுநாள் அதிகாலையில் பனி விழுந்த  ஈரப்பதம் காய்வதற்கு முன்னால் மிதித்து கட்டிவைக்கவேண்டும். இல்லாவிட்டால் ஓலைகள் உடைந்துவிடக்கூடும், ஒழுகும் தன்மை அதிகரித்துவிடும். நான் சுற்றிலும் பார்த்த பனை மரங்கள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. அதிலிருந்து தான் ஓலைகளை எடுத்திருப்பார்களோ.

 ஓலைகள் வெட்டப்பட்ட மரங்கள்

ஓலைகள் வெட்டப்பட்ட மரங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: