பனைமரச்சாலை (55)


இழந்த சொர்க்கம்

நாங்கள் கடலூர் செல்லும் வழியில் நான் அனேக பலா பழங்கள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அமிர்தராஜ் பலாப்பழங்கள் என்றால் உயிரை விட்டுவிடுவார். எனக்கு பலாப்பழம் பிடிக்கும் ஆனால் நான் பலாபழங்கள் சாப்பிடுவது குறைவு. பலாப்பழங்கள் எல்லாரின்
வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்கள் பலாப்பழம் சப்பிட்ட பின்பு அதன் விதையை கடித்து அதில் ஊறும் பாலினை உட்கொள்ளுவது நல்லது. பொதுவாக பலாப்பழம் சாப்பிட்ட பின் எங்களுரில் கை கழுவும் வழக்கம் கிடையாது. எண்னை மட்டும் தடவிக்கொள்ளுவார்கள். குறிப்பாக தண்ணீர்  குடிக்கக்கூடாது. என்னைப்பொறுத்த வரையில், தண்ணீர் குடிக்காமல் எந்த உணவையும் நிறைவு செய்யக்கூடாது. ஆனால் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. வயிற்றை கலக்கிவிடும்.

 

பலாப்பழங்கள் மிகவும் நல்லதுதான். ஒருவகையில் பூச்சிகொல்லி போன்ற எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் விளைந்தது. ஆகவே அது ஒரு சிறந்த பழமாக கருதி சாப்பிட உகந்தது. முக்கனிகளில் ஒன்றாக தமிழர்களால் சுட்டப்பட்டது. ஆகவே அதற்குறிய தனித்தன்மைகள் இருக்கவே செய்யும். இப்பழங்கள் யாவும் பண்ருட்டியில் இருந்து கொண்டு வரப்பட்டவைகள் என்பதை பிற்படுதான் அறிந்துகொண்டேன். பண்ருட்டி பலாப்பழங்கள் அவற்றின் சுவைக்காக பெயர் போனவை.

 

இலக்குவனுக்காக நாங்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் காத்திருந்தோம். சற்று நேரத்தில் அவர் வருவதாக தகவல் அனுப்பியிருந்தார். இலக்குவன் இயற்கை சார்ந்து களப்பணி  ஆற்றுபவர்,  அரசியல் தலைவர்களோடு நெருக்கமானவர், குறிப்பாக வைகோ அவர்களின் நெருங்கிய வட்டத்தைச் சார்ந்தவர். அனேக ஊடக நண்பர்களை தனது தொடர்பில் வைத்திருப்பவர். ஜெபக்குமாருக்கு மிகவும் அணுக்கமானவர். ஜெபக்குமார் எனது பயணம் சிறந்த முரையில் ஆவணப்படுத்தப்படவேண்டும் என நினைத்தே சர்வதேச புகைப்படக் கலைஞரான அமிர்த்தராஜை என்னோடு அனுப்பியிருந்தார். மேலும் அவருக்கு எனது பயணங்கள் யாவும் ஊடகங்களின் கவனத்தில் விழவேண்டும் என்பதும் எண்ணமாக இருந்தது. எனக்கு ஊடகங்கள் குறித்த எண்ணம் ஏதும் அவர் அளவு தெளிவாக இருக்கவில்லை.

இலக்குவன் சற்று நெரத்தில் வந்துவிட்டார் மணி கித்தத்தட்ட 12 ஆகிவிட்டிருந்தது. ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு சில நூறு மீட்டர்களிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் காணப்பட்டது. நாங்கள் உள்ளே செல்லும்போதே ஒரு பழைமையான தகர பலகையில் எழுத்துக்கள் பகுதி அழிந்து புராதான சின்னம் போல் கானப்பட்டது. எனக்கு அதைப் பார்த்தவுடனே தெரிந்துவிட்டது உள்ளே எப்படி இருக்குமென. நாங்கள் உள்ளே செல்லும்போது பாதையின் இரு மருங்கிலும் பனை மரங்கள் உயந்து நின்றன. ஆனால் அவைகள் பயன்படுத்தப்படாதவைகள் என்பதை தொங்கிக்கொண்டிருக்கும் காய்ந்த ஓலைகள் அறிவுறுத்தின. அமிர்த்தராஜ் சொன்னார், வரும்போது இங்கே நாம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும்.

கல்வெட்டு 1

நங்கள் உள்ளே சென்று வாகனத்தை நிறுத்தியபோது அந்த இடம் ஆளரவமற்ற ஒரு பகுதியோ என எண்ணும்படி  அமைதி கொண்டிருந்தது. என்னால் அந்த இடத்தின் மவுனத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. பாழடைந்த ஒரு பிரம்மாண்ட கட்டிடம் அது. ஒரு நடுநிலைப்பள்ளியை ஒத்திருந்தது அந்த கட்டிடம். குறைந்த பட்சம் 10 ஏக்கர் நிலபரப்பு கொண்ட இடமாக அதன் வளாகம் இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு பேய் பங்களாவிற்குள் நுழையும் கவனத்துடனேயே உள்ளே சென்றோம். முகப்பில் இரண்டு கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

05 – 03 – 1971 ல் திரு.ப.சோமசுந்தரம் (இயக்குனர், தமிழ்நாடு கதர்கிராம தொழிலகம்)அவர்களால் முதலில் திறக்கப்பட்டு, பின்னர் சிறிது சிறிதாக முன்னேற்றப்பாதையில் பயிற்சிக்கூடம், ஆராய்ச்சி கூடம் என தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.  10 – 02- 1977 ல் திரு.எல்.இளையபெருமாள் அவர்களால் மண்டலக் பனை ஆராய்ச்சி மற்றும் பனை பயிற்சி நிலையமாக தெவையான கட்டிடஙள் கட்டப்பட்டு  திறக்கப்பட்டது . இந்த மண்டல பனை ஆராய்ச்சி மற்றும் பனை பயிற்சி நிலையம்  கர்நாடக, கேரளா, ஒருங்கிணைந்த ஆந்திரா, பாண்டிசேரி, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலத்தின் மாணவர், மாணவியருக்கு பயிற்சி கூடமாக, மண்டல மையமாக இருந்த ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டிருக்கிறது. கல்வெட்டின் கீழே கூ. சம்பந்தம் அவர்களின் பெயரை படித்ததும் நான் நிர்கும் இடம் எத்துணை அற்பணிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது எனும் ஒரு பெருமூச்சு என்னிலிருந்து புறப்பட்டது.

எந்தவொரு காவலாளியும் இல்லை. கேட்பார் இல்லை, சமூக விரோதிகளின் வாழ்விடமாக மாறிவிட்டதோ என்று அஞ்சுமளவிற்கு அந்த வளாகம் அன்னியப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரே ஒரு கதவு எங்கள் எதிரில் திறந்திருப்பதைப் பார்த்தோம். அதேவேலையில் எங்களுக்கு வலதுபுறமாக இருந்து ஒரு மெலிந்த மனிதர் தோன்றினார். அவரை நோக்கி போகும்போது அங்கே ஒரு அறை திறந்திருந்தது. உள்ளே ஒரு பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்தார்கள். பதனீர் கிடைக்குமா எனக் கேட்டோம்.  இருக்கிறது என்றார்கள். முகவும் சுவையான மற்றும் தரமான பதனீர். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

கல்வெட்டு

கல்வெட்டு

நாங்கள் நுழைந்த அறையில் மிக பிரம்மாண்டமான பாய்லர் வைத்திருந்தார்கள். அங்கே பல ஆய்வுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் இருந்தன. ஆனால் ஆய்வுக் கருவிகள், பயிற்சிக் கருவிகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. லெட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள தளவாடங்கள் அங்கே பயனற்று இருப்பது மனதை பிசைந்தது. மெல்ல பேச்சு கொடுத்தோம்.

 

ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களோடு பேச மறுத்துவிட்டனர். எங்களோடு பேச தகுதியான ஒருவர் இருக்கிறார் எனக் கூறி ஒருவரை அழைத்து வந்தனர். பார்ப்பதற்கு  இன்னும் மெலிந்த உடல், எளிமையான மனிதர். அவர் தான் அங்கே அனைத்து பயிற்சிகளும் கொடுப்பவர். பனைமரம் சார்ந்து எந்தவிதமான பயிற்சி என்றாலும் அதனை கொடுக்க அவர் ஒருவரே தகுந்த  பயிற்சியாளர். ஓலைகள், பனந்தும்புகள், கறுப்புகட்டி காய்ச்சுதல், கற்கண்டு அறுவடை செய்தல் என அனைத்தையும் அறிந்த்து வைத்திருகிறார். இன்றைய தினத்தில் பனை சார்ந்து இவ்விதமாக அனைத்து பயிற்சிகளும் கற்று தேர்ந்த ஒருவர் இவராக மட்டுமே இருக்க முடியும் என எண்ணினேன். அந்த எண்ணம் என்னில் ஒழுகிச்செல்லும்போது அவர் ஒரு மாபரும் மனிதராக உயர்ந்து நின்றார். ஆம் பனை சார்ந்த பயிற்சியளிக்கும் ஒரே ஆசிரியர் இவர். தமிழக மாநில மரத்தினை மத்திபுடன் பிறர் நோக்கச்செய்யும் சொத்து. நம்மிடம் எஞ்சியிருக்கும் அரிதினும் அரிதான முத்து. கண்ணகியின் முன்பு இருக்கும் காற்சிலம்பு போல் என எண்ணம் தோன்றியது. எவர் முன் அவரை விசிறியடிப்பது என்பது தான் குழப்பமாக இருந்தது. அனைத்தையும் இழந்த பிற்பாடு என்ன செய்வது? தழல் எரிக என சாபமிடவே  தோன்றியது.

 

ஆனால் எனக்குத் தெரியும் அவை மிகுந்த நகைச்சுவையுணர்வுடன் பார்க்கப்படும், ரசிக்கப்படும், விவாதிக்கப்படும் இறுதியில் எளிதில் மறக்கப்பட்டுவிடும். எனக்குப் புரிந்தது, வேறு விதங்களில் தான் இவைகளைக் கையாளவேண்டும். மக்கள் திரள் தங்களின் பாரம்பரிய உணவை தெரிவு செய்யவும், தங்கள் மரபு சார்ந்த பொருட்களின் மேல் மாளாத காதலும் கொண்டால் மட்டுமே அது நடைமுறைக்கு  வரும். மொத்த தமிழகமும் பனை மரத்தை தனது விழாக்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டும், தனது உணவில் பனை பொருட்களை அங்கமாக்கிகொள்ளவேண்டும், தனது  பயன்பாட்டில் பனை மர பொருட்கள்  இன்றியமையாத ஒன்றாக மாற்றிக்கொள்ளவெண்டும். கருத்து ரீதியாக பனைமரம் தமிழர்களின் ஆதி சின்னமாக, ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாக எழுந்து அவர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்த ஒன்றாக மாறவேண்டும். அதற்கு அற்பணிப்புடன் காலத்தை செலவுசெய்யவெண்டும்.

 

அந்த மனிதர், எங்களுக்கு ஒரு உயரதிகாரி இருக்கிறார் அவரை நீங்கள் பர்ப்பது நல்லது என்றார். நாங்கள் மூவரும் அவரது அறைக்குச் சென்றோம். சுமார் 500 பேர் அளவுக்கு வந்துபோகும் அளவுக்கு பிரம்மாண்டமான இடத்தில் எங்கள் மூவரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் மட்டுமே இருப்பது  மன சோர்வை அளித்தது. அங்கிருக்கிறவர்களுக்கு எவ்விதமான மனநிலை இருக்கும் என்பது அவர்களை பேச அனுமதித்தபோதுதான் புரிந்தது.

 

முதலில் பேச தங்கியவர்கள் பிற்பாடு தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். பனைத்தொழிலாளர்களுக்கு என மத்திய அரசிலிருந்து வந்த பணத்தை, கட்டிடங்கள், வாகனங்கள் என கணக்குகாட்டியதை அடுத்து ஆய்வுக்கு வந்த ஒரு மாவட்ட ஆய்வாளர் பணம் விரயமாக்கப்படுகிறது என தனது புகார் அறிக்கையை சமர்பித்திருக்கிறார். அதன் பின்பு 2001 முதல் மத்திய அரசின் உதவிகளோ மாநில அரசின் உதவிகளோ எதுவும் இவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இவர்களின் சம்பளம் உட்பட. என்றேனும் ஒரு மாறுதல் நிகழும் என காத்திருக்கின்றனர்.

 

மனம் கனத்திருந்தது, ஒருவித பாரம் நெஞ்சை அழுத்தியது. பன்னாட்டு நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்படுகிற சூழலில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக  விளங்கும் பனை சார்ந்த பயிற்சிகளுக்கு அரசு எவ்வித முனைப்பும் எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கவில்லை. சுமார் 16 வருடங்களாக பனை ஆய்வு உறைநிலையில் இருப்பது குறித்து யாருக்குத் தெரியும்?. இலக்குவன் 30 வயது நிரம்பியவர். அவருக்கு இப்பகுதியில் பனை ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிலையம் இருப்பது தெரியாது என்பதை கூறும்போது 5 மானிலங்களைச் சார்ந்த எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கனவு எவ்விதம் நம் கண்முன்னே உளுத்துப்போய் நிற்கிறது எனக் கண்டோம்.

 

நான் எனது அனுபவத்தின் வாயிலாக குறைந்த ஓலைகளைக்கொண்டு அழகிய பொருட்கள் செய்வது எப்படி? என சில செய்முறை பயிற்சிகளைக் காண்பித்தேன். எவ்விதமாக நாம் உள்ளூரிலேயே சந்தையைப் பெற்று நிறைவடையமுடியும் என ஒரு சில ஆலோசனைகளைக் கூறினேன். பயிர்சிYஆலர் நெகிழ்ந்துபோனார். சார்! ஒரு பத்தாண்டுகளுகு முன்பாவது நீங்கள் இங்கே வந்திருக்கக்கூடாதா, எங்களை ஊக்கப்படுத்த ஒருவரும் இல்லையே என நாங்கள் நாங்கள் துவண்டுபோயிருந்த சமயம் அது. இப்போதோ நாங்கள் மீள இயலா பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம். எங்கள் நிலைகளை அரசுக்கு வெண்டுமானால் எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் எங்கள் பெயர்களை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

 

நாங்கள் வெளியே வந்தோம். அந்த வளாகம் ஒரு பனங்காடு என்று சொல்லலாம். பனையே புல், பனையே  புதர், பனையே மரம், பனையே சருகு என பனையே எல்லாமாகி காணப்பட்டது. அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

அமிர்தராஜும் நானும்

அமிர்தராஜும் நானும்

 

நானும் அமிர்த்தராஜ் அவர்களும் சேர்ந்து நிற்கும் ஒரு புகைப்படத்தை எடுக்க இலக்குவனை கேட்டுக்கொண்டோம். பயிற்சியாளர், எங்களுக்கு ஒரு தொடர்பு எண்ணைக் கொடுத்து, பனை ஓலைகளைச் செய்து விற்கும் ஒரு பெண்மணி இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பார்ப்பது நல்லது என்றார்.  அங்கிருந்து மேற்கோண்டு எங்கு செல்லலாம் என எண்ணம்கொண்டு யோசனையில் ஆழ்ந்தோம். இலக்குவன் சொன்னார், ஏன், பத்திரிகையாளர்களை சந்திக்கலாமே? ஆம் அதுவும் சரியென்றே பட்டது. மணி இரண்டைத் தாண்டியிருந்தது இன்னும் உணவுண்ணவில்லை.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: