பனைமரச்சாலை (62)


பனை நண்பர்கள்

பனை தேடுதல், பனை சார்ந்த தெடுதல் உடையவர்களின் பால் என்னை அழைத்துச்சென்றது. அப்படித்தான் பேராசிரியர். அறிவர். ஷோபனராஜ் அவர்களை நான் கண்டடைந்தேன். அவர்கள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர். அவர் எனக்கு கொடுத்த ஊக்கம் அளவில்லாதது. மணிக்காணக்காக பனை மரங்களைக் குறித்து பேசுவோம். எனக்கு  பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடையளித்தவர் அவரே. பனை சார்ந்து நான் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் ஊக்கமளிப்பவரும் அவரே. அவரின் ஆசி நான் எனது பனை பயணத்தில் பெற்றவைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அவரே எனக்கு சர்வதேச பனை சங்கம் குறித்த அறிவை புகட்டியவர். பனை சார்ந்த விருப்பம் கொண்டவர்களின் சங்கம் அது என கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், பனைகளை விற்கும் மிகப்பெரும் வணிக நிறுவனங்கள், ஆய்வங்கள், தனிநபர்கள் போன்றோர் அதில் பங்கு பெறலாம்.

பேராசிரியர் சோபனராஜ் அவர்களுடன் நான்

பேராசிரியர் சோபனராஜ் அவர்களுடன் நான்

பேராசிரியர் தன்னுடைய பல பனை சார்ந்த புகைப்படங்களை எனக்கு கொடுத்து உதவியிருக்கிறார். அனைத்தும் மிக முக்கியமானவைகள். ஒரு கல்வியாளருக்கு மிக அதிக அளவில் உதவும் நோக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அனைத்தும் பனைமரத்திற்காக தன்னை அற்பணித்துக்கொண்ட தன்னிகரற்ற தலைவரான டாக்டர். டி ஏ டேவிஸ் அவர்கள் கைபட எடுத்த புகைப்படங்கள். அந்த புகைப்பட தொகுப்பை வைத்தே ஒருவர் ஒரு ஆய்வு கட்டுரையை எழுதினார் என்றால், தமிழகத்தின் பல்வேறு ஆய்வுகளுக்கு சவால் விடும் அளவிற்கு அவை தரம் உயர்ந்ததாக இருக்கும்.

டாக்டர் டி அந்தோணி டேவிஸ் அவர்கள் அடிப்படையில் கணிதம் கற்றவர்கள் என்றும், சமச்சீர் விகிதங்களில் நிபுணர் என்றும் கெள்விப்பட்டிருக்கிறேன். பனை மரத்தின் இலை அடுக்குகளின் பால் ஈடுபாடு ஏற்பட்டு பனைக்காதலராக சுற்றிதிரிந்திருக்கிறார். பனை மரங்களின் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியமாகவே அவர் இருந்திருக்கிறார். சர்வதேச பனை சங்கத்தின் மிக முக்கிய பொறுப்பு வகித்த ஒரே இந்தியர் என்றும் அவரைச் சொல்லலாம். பல்வேறு ஆய்வுநிறுவனங்கள் வெளியிட்ட   தரம் வாய்ந்த ஆய்வு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த ஒரு தன்னிகரற்ற பனை ஆய்வாளர். தென்னை மர ஓலைகள் வலதுபுறமாக விரிந்திருந்தால் அது மிக அதிக பயன்களை கொடுக்கும் என்னும் அளவிற்கு துல்லியமாக  ஆய்வு செய்தவர்.  ரெயின்டீர் என்று சொல்லப்படுகின்ற பனிப்பிரதேசங்களில் வாழுகின்ற மான்களின் கொம்புகள் வடதுருவம் நோக்கி செல்கையில் ஒருபுறமும் தென் திசை நோக்கி செல்கையில் மற்றொருபுறமும் வளருவதையும் ஆய்வில் நிரூபித்தவர். மிக வித்தியாசமான பல குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை செய்தவர்.

பனை மரங்களை ஆலமரம் எப்படி நெருக்கி அதைப் பற்றி வளருகிறது என்கிற அவரது ஆய்வை நான் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.  பொதுவாக ஆல மரங்களின் விதைகள் தரையில் விழுந்து முளைக்காது என்று சொல்லுவார்கள். பறவைகளின் எச்சம் போன்றவை வழியாக பனைமரங்களில் அவை விழும்பொது அவைகள் முளைத்தெழுகின்றன. பனையை ஆலமரம் நெரித்தாலும் பனை அதனைக்குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. இந்த இரு மரங்களும் சேரும் இடத்தை மக்கள் வழிபடுவதை நாம் அறிந்துகொள்ளலாம். தொல் பழங்கால இந்திய மக்களில் காணப்பட்ட ஒரு இணைவின் அம்சமாக நான் இதைக் கருதுகிறேன்.

பேரசிரியர் ஷோபனராஜ் அவர்கள் எனக்கு பல பனைகளை அறிமுகம் செய்தார்கள் அவைகளுள் பென்டிங்கியா கொண்டப்பனா என்று தவரவியல் பெயரில் அழைகப்படும் வரை கமுகு மிகவும் முக்கியமானது. வரை என்றல் மலை என்று பொருள். மலை கமுகு என குமரி மாவட்டத்தில் இதை அழைக்காமல் கொண்டப்பனை என்றே அப்பகுதி காணி மக்கள் அழைப்பார்கள். உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே அது காணப்படுகிறது என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் 1000 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அவைகள் வளருகின்றன என்று சொன்னார். என் வாழ்நாளில் நான் பார்க்கவேண்டும் என நினைத்தும் கைகூடாத ஒரு காரியம் இது. குறிப்பாக குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் இவைகள் கூட்டமாக நிற்கும் புகைப்படத்தை அவர் எனக்கு காண்பித்தார். அவரோடு பேசுவது ஒரு இனிமையான அனுபவம். சிறு சிறு தகவல்களாக சொல்லி புரியவைப்பார். அது மிகவும் முக்கிய தகவல்களாகவும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

வரை கமுகு (கொண்டப்பனை)

வரை கமுகு (கொண்டப்பனை)

பென்டிங்கியா எனும் பெயர் லார்ட் பென்டிங் என்பவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பிரபுவை கருதி இடப்பட்டது. ஆகையால் பத்தொன்பதாம் நூறாண்டின்  பிற்பகுதியிலேயே இவைகளுக்கு தாவரவியல் பெயரிட்டிருக்கிறார்கள் என அறியலாம். கொண்டப்பனா என பெயர் வருவதற்கு காரணம் தாவரங்களின் தலைப்பகுதியை கொண்டை என்று அழைப்பது குமரி வழக்கம். பனா என்பது பனையினை மலையாளத்தில் சொல்லுவது. எல்லா பனைகளுக்கும் கொண்டை இருக்கும்போது இந்த  பனைக்கு மட்டும் ஏன் கொண்டப்பனா என பெயர் வந்தது? அதற்கு மேற்கு    தொடர்ச்சி மலையில் வாழும் தமிழ் மலையாளம் கலந்து பேசும் காணி மக்களின் உதவி தேவை. அவர்களே இதற்கு கொண்டப்பனா என பெயரிட்டிருக்கிறார்கள். எப்படியென்றால், கொண்டப்பனையின் தலைப்பகுதியிலுள்ள குருத்து சாப்பிட உகந்தது. வேறு உணவுகள் கிடைக்காதபோது மலைவாழ் மக்கள் மிக விரும்பி உண்ணும் உணவு இது. ஆகவே கொண்டப்பனா என பெயர் பெற்றது. ஆங்கிலேயர்கள் தொகுத்ததால் தவரவியல் பெயர் ஆங்கிலேய பிரபுவை இணைத்துக்கொண்டது. காலனி ஆதிக்கத்தின் எச்சம் காட்டில் வாழும் வரை கமுகையும் விடவில்லை.

அபூர்வமான இந்த பனை விதையை அனேகர் கடத்திச் செல்ல முயன்றதுண்டு என்பது மேலதிக  தகவல். ஆகவே குமரி வனப்பகுதி அனைத்துமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு காக்கப்படுகின்றன. பென்டிங்கியா குடும்பத்தைச் சார்ந்த வேறொரு தாவரம் அந்தமானில் உள்ளது. அதனை பென்டிங்கியா நிக்கோபாரிகா என அழைப்பார்கள்.

பிரம்பு (சூரல்)

பிரம்பு (சூரல்)

‘பிரம்பைக் கையடாதவன் தன் மகனைப் பகைக்கிறன்” என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிக அதிகமாக புழங்கும்ஒரு  திருமறை வசனம். சிறு பிள்ளைகளை அடித்து நொறுக்கி திருத்த வைப்பதற்காக இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவார்கள். பேராசிரியர் எனக்கு கொடுத்த ஒரு சிறு தகவல் என்னை மாற்று கோணத்தில் சிந்திக்க வைத்தது. ஆம் சூரல் என குமரியில் வழங்கப்படுகின்ற, பிரம்பு ஒரு பனை வகைத் தாவரம். நான் அயர்ந்தே போனேன். பனை கொடி போல் சுழன்று ஏறும் என எனக்கு அப்போது தான் தெரியும். குமரி காட்டில் சுமார் 12 வகை பிரம்புகள் உண்டு. அவைகளின் மேல் தோல் மூள்ளால் நிறைந்திருக்கும் மிக கவனமாக மட்டுமே அதை அணுகவேண்டும். ஒரு காலத்தில் மலை வாழ்  மக்களுக்கு மிக அதிக வருமானத்தை தந்த இப்பனை வகை இப்போது பாதுகக்கப்பட்ட இனமாக அரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், பிரம்பை வணிகமாக மாற்றும்பொழுது காட்டின் அமைப்பு முற்றிலும் மாறிவிடுவதாலும் இதனை நம்பி வாழுகின்ற யானை போன்ற மிருகங்களின் உணவானபடியாலும் தடை விதித்திருக்கிறார்கள்.

ஆளத்தெங்கு

ஆளத்தெங்கு

செல்வகுமார் காணி என்னை ஒரு முரை மலைக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது நாங்கள் அங்கே ஒரு மிக நீளமான ஓலைகள் விடுகின்ற பனை மரத்தை பார்த்தோம். நான் அவரிடம் இது என்ன மரம் எனக் கேட்டேன். அதற்கு அவர் ஆளத்தெங்கு எனக் குறிப்பிட்டார். தாவரவியல் பெயர் அரிங்கா விக்டி. இங்கும் விக்டி என்பது அங்கிலெயர் பெயராக இருக்கலாம் என நாம் யூகிப்பதற்கு இடமுண்டு. ஆளத்தெங்கின் பயன் என்ன என்று கேட்டேன். அவர் பதி கூறுகையில், மிக அதிக சிரமம் எடுத்தே இந்த மரத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அவ்விதம் சுத்தம் செய்தால் கண்டிப்பாக 10 லிட்டருக்கும் அதிகமான கள் இதிலிருந்து கிடைக்கும் என்றார். உண்மையிலேயே அது நெருஙமுடியாதது போலதான் இருந்தது. மீண்டும்  இந்த மரம் குமரி மாவட்ட மெற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் வகையாகும்.

நிலப்பனங்கிழங்கு

நிலப்பனங்கிழங்கு

பனை என பெயர் கொண்ட அனைத்தும் பனையாகுமா? தெரியாது ஆனால் பனை என ஒரு தாவரத்திற்கு பெயர் இட்ட பிறகு அதனைக்குறித்து பதிவிடாமல் இருப்பது சரியல்லவென்றே எண்ணுகிறேன். குமரி மாவட்டத்தில் வைத்தியர்கள் பயன்படுத்க்டும் ஒரு மருந்திற்குப் பெயர் நிலப்பனக்கிழங்கு. சிறிய செடியாக முளைக்கும் தென்னம் பிள்ளையின் இலைகளைப்போல பிரியமால் இருக்கும் இலை கொண்டது. விரல் நீளத்திற்கும் குறைவான அளவில் ஒற்றைக் கிழங்கு காணப்படும். சிரிய மஞ்சள் நிர  பூ பூத்திருக்கும். புல்வெளிகளில் மிக சதாரணமாக காணக்கிடைக்கும்.

நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு அறிமுகமான தோழி பேரசிரியர் விட்னி ஹோவர்த் என்னை பனை சார்ந்து சிந்திக்க பழக்கியவர்கள். எனது தேடுதல் மற்றும் சிந்தனைக்கு எப்படி வடிவம் கொடுக்கலாம் என இரவுபகலாக என்னோடு அலைந்தவர்கள். மிக முக்கிய பணியாக ஒரு வலைத்தளத்தை பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியிட முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றவர்கள். பல்வேறு நூல்கள், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். அவர்களின் தொடர் முனைப்பு இல்லாதிருந்திருந்தால் ஒருவேளை நான் இப்பயணத்தை இத்துணை சிறப்பாக முன்னெடுத்திருக்க முடியாது. பனை ஓலையில் நான் செய்யும் கைவினைப் பொருட்களை செய்ய ஏற்ற கத்திகளை எனக்கு வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்தவர்கள். எனது உறவினர்களைத் தாண்டி இப்பயணத்தில் எனக்காக அதிகம் மெனெக்கெட்டவர்கள் அவர்களே.

நான் பேராசிரியர் விட்னி மற்றும் ரூபா பாட்டியுடன்

நான் பேராசிரியர் விட்னி மற்றும் ரூபா பாட்டியுடன்

பேரசிரியர் விட்னி ஹோவர்த் அவர்களின் தோழியும் விவசாயத்துறை கல்வி பயின்றவர்களுமான ரூபா பாட்டி என்னும் மங்களூர் தோழியும் எங்களோடு இணைந்துகொண்டார். காலம் பல்வேறு வகைகளில் எங்களை இடம் மாற்றி விட்டுவிட்டது.

எனது மாமா மகன் ஜானி எனது அனைத்து பயணங்களிலும் உடன் வருபவர். காடு, மலை கிராமங்கள் என,  பனை மரங்கள் தேடி நாங்கள் அலையாத இடமில்லை. இத்துணை நண்பர்களின் உதவிகள் என்னை ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்கு கடந்து வர மிக உதவியாக இருந்தனர்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (62)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர்
  பனை நண்பர்கள் குறித்த இந்த பதிவில் உங்களைப்போலவே பனையின் மேல் மாறாக்காதல் கொண்டிருக்கும் பலரையும் அறிய உதவியது
  சர்வதேச பனைச்சங்கம் என்று ஒன்று இருக்கிறதா? வியப்பாக இருக்கிறது.
  கணிதம் கற்றவர்களும் இறையியல் கற்றவர்களும் பனைத்தேடலில் இருக்கிற்ரீர்கள். ஆனால் தாவரவியளாளர்கள் நான்குசுவர்களுக்குள் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்

  தென்னை மர ஓலைகள் வலதுபுறமாக விரிந்திருந்தால் அது மிக அதிக பயன்களை கொடுக்கும் என்னும் அளவிற்கு துல்லியமாக ஆய்வு செய்தவர்!!!!
  இத்தனை நுணுக்கமானதோர் ஆய்வை நான் இது வரையிலும் கேள்விப்பட்டதே இல்லை
  வரைகமுகுகின் சிற்றினப் பெயர் கொண்டப்பனா!!!
  இப்படி தாலிப்பனையின் பெயரில் தாலியா இருக்கிறது
  இது போல வட்டரா வழக்குப்பெயர்கள் latinize செய்யப்பட்ட தாவரங்களைப்பற்றி தனியாக ஓர் ஆய்வு செய்யலாம் போல் இருக்கிறது
  areca victi யில் இந்த விக்டி ஒருவேளை விக்டோரியாவாக இருக்கலாம்
  இது எண்னைப்பனையாக இருக்குமோ என்று எண்ணினேன்
  பனை என்ற பெயரில் இருக்கும் அனைத்தையும் பதிவிடுவது உங்களின் பனையின் மேலான மாறாக்காதலின் பொருட்டே சாத்தியமாகிறது
  இந்த பதிவு உண்மையில் botanical treasure.

  பாஸ்டர்
  உங்கள் 36 பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுகையில் அந்த கடிதத் தொடர்பு ஒரு இறைப்பணியாளருக்கு, ஒரு தாவரவியல் ஆசிரியர் எழுதுவதாக இருந்தது
  பின் 4 பதிவுகளின் பின்னர் அது ஒரு பனை என்கிற மரம் மீதான காதல் கொண்ட ஒருவருக்கு ஒரு தாவ்ரவியளாளர் எழுத்வதாகியடது
  அதன் பின்னர் ஒரு தாவரவியால் ஆர்வும் உள்ள ஒருவருக்கு இன்னொர் தாவரவியல் ஆசிரியர் எழுதுவதாகியது
  பின்னர், ஒரு தவரவியல் ஆராய்சியாளாருக்கு தாவரவியல் பாடம் எடுக்கும் ஒரு பெண் எழுதும் கடிதமாகியது
  50 பதிவுகளுக்கு அப்பால் ஒரு தாவ்ரவியல் வல்லுனருக்கு, ஒரு non botanist எழுதுவதாகிவிட்டது
  60 பதிவுகளுக்கு பின்னர் இன்றோ ஒரு ஆகச்சிறந்த தாவ்ரவியல் வல்லுனர், monographer, இறைபணியாளர்,, பனைக்காதலர், ஒருவித்திலை தாவ்ர வல்லுனர், ethnobotanist, seed physiologist, nutritionist, ecologist என் பன்முகம் கொண்ட ஒருவருக்கு ஒரு அற்ப மானுடப்பெண் எழுதிக்கொண்டிருக்கிறேன்
  பாஸ்டர், இன்னும் எத்தனை எழுதுவதாக இருக்கிறீர்கள்? எதரற்கு கேட்கிறேனென்றால், இனி போகப்போக நான் ஒரு புழு, பூச்சி அல்லது பாக்டீரியா range ற்கு போய்விடுவேனோ எனும் அச்சத்தினாலேயே கேட்கிறேன்

 2. pastorgodson Says:

  Dr. Logamadevi, Its Arenga wightii – Vulnerable B1+2c ver 2.3
  Your greatness is in you humility. You are indeed a blessing for a great number of students.
  Rev. G

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: