பனைமரச்சாலை (63)


மர வழிபாடு

குடப்பனை அருகிலிருந்து நாங்கள் மனக்கிளர்ச்சியுடனே புறப்பட்டோம். அது எங்களுக்காக காத்து நின்ற பனையல்லவா? அடுத்ததாக நாங்கள் செல்லவேண்டியது மேலப்பெரும்பள்ளம். நாங்கள் வழியில் இரண்டு முறை கேட்டிருந்தோம் நானும் பல வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். ஆனால் கூகுள் மேப் பார்த்து அமிர்த்தராஜ் அழைத்துச்செல்ல, நான் வழி தவறுகிறோம் என்பதை உணர்ந்து அவரை நிற்கச்சொன்னேன். இல்லை இன்னும் போகவேண்டும் என்றார். நல்லவேளை அந்த இடத்தில் ஒரு கல்லூரி சென்று மீண்டு வருகிற மாணவியைப்பார்த்துக் கேட்டோம். அவள் நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து இடதுபுறமாக திரும்பிச்சென்றால் போதும் என்றாள்.

பனைமர நிழலில், திருவலம்புரம்

பனைமர நிழலில், திருவலம்புரம்

நான் 12 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். ஊர் பெரிதாக மாறினதுபோல இல்லை. நாங்கள் சென்ற ஆலயம் அப்போது நடை திறந்திருந்தது. ஒரு காரில் குடும்பத்தினர் ஒருவர் வந்திருந்தனர். அந்த ஆலயத்திற்கு திருவலம்புரம் என்று பெயர்.

இந்த ஆலயத்திற்கு நாங்கள் வருவதற்கு காரணம் அங்குள்ள தல மரம் பனை. அதைப்பார்த்து செல்லுவது மற்றுமோர் சித்திரத்தை அளிக்க வல்லது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்டுள்ள ஆலயங்கள் அனேகம் உண்டு. நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயிலும்போது நான்கு சைவ திருத்தலங்களில் சென்று அவைகளை கண்டு எனது ஆய்வு கட்டுரையை எழுதினேன். அனைத்து ஆலயங்களும் பல நூற்றாண்டுகள் கடந்தவை. தேவாரம் பாடிய சுந்தரர், திருநாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தர் அகியோரின் காலம் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு. அப்பொழுதே இத்தலங்களில் அவர்கள் வந்து பாடியிருக்கின்றனர் என்பது ஆலயங்களின் தொன்மையைக் குறிக்கும். பெரும்பாலான கோயில்களின் கட்டுமனாத்தில் வேறுபாடுகள் உள்நுழைந்திருந்தாலும், ஒரு ஆலய்த்திற்கு மூன்று முக்கிய அடிப்படையான காரியங்கள் வெண்டும் எனக் கூறுகிறார்கள். அவைகள் மூர்த்தி தீர்த்தம் மற்றும் விருக்ஷம். மூர்க்த்டி என்பது ஆலயத்தின் மையமான இறை வழிபாட்டு தெய்வம் சிலையாக நிறுவப்பட்டது. பக்தர்கள் வரும்போது தூய்மையுடன் இருக்க அருகில் காணப்படும் குளம் அல்லது கிணறு தீர்த்தம் எனப்படும். இறுதியாக பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு நிழல் தர, பிரசாதம் அளிக்க பூ அல்லது கனிகள் தர, அப்பகுதியில் தொன்மையான ஒரு மரம் அல்லது தாவரம் நிற்கும், அதை விருக்ஷம் என்பார்கள்.

பூம்புகாரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் இருக்கும் இவ்விடத்தில் பனைமரங்கள் நிற்கிறது என நாம் காணும்போது நாம் மீண்டும் கடற்கரையைச் சுற்றி நிற்கின்ற பனை மரங்களைக் குறித்து அறிந்துகொள்ளுகிறோம். பனை மரத்தின் தேவைகள் மிக அதிகமாக கருதப்பட்ட ஒரு காலத்தில் பனை மரம் தல விருட்சமாக இவ்வாலயத்தில் இடம்பிடிக்கிறது. மெலப்பெரும்பள்ளம் எனும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டாலும் எனக்கு அவைகள் பனை சார்ந்த விளக்கங்களாய் இருந்தால் இன்னும் சிறப்புடையதாயிருக்கும் என்று தோன்றுகின்றது.

மேலபெரும்பள்ளம் எனும் பெயர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் வலப்புறமாக சுற்றி ஓடிய அகழி இருந்த பகுதி மேலப்பெரும்பள்ளம் என வழங்கலாயிற்று. அதுபோலவே, காவிரிக்கு மேற்கில் இருந்த பகுதி ஆனபடியல் மேலப்பெரும்பள்ளம் என பெயர் பெற்றது என்றும் கூறுவர்கள். அங்கிருக்கும் சிவலிங்கத்தில் ஒரு கை நுழையுமளவு இரு பள்ளங்கள் இருப்பதால்  லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. இங்கிருக்கும் தலமரம்  நூறாண்டு கண்டதாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன். அதன் அருகில் வேறொரு சிறிய பனையும் வளர்ந்து வருவதைக்கண்டேன்.

சிவலிங்கத்தின் மேல் காணப்படும் இரு பள்ளங்கள், தோண்டிய நுங்கை நினைவுபடுத்துகின்றன, ஒருவேளை பனையிலிருந்து பெறும் ஊற்றைக் குறிப்பிட மேலப்பெரும்பள்ளம் என்றார்களா?

மரங்கள் மனிதனுக்கு ஆதி காலத்திலிருந்து ஆச்சரியம் அளிப்பவைகளாக இருந்திருக்கின்றன. மிகச்சிரிய பிராணிகளுக்கும் பயப்படவெண்டிய கட்டாயத்தில் இருந்த மனித குலத்திற்கு, நிழாலாக உறைவிடமாக ஆசியளித்தவை மரங்களே. இம்மரங்களை இன்னும் கூர்ந்து அவதானித்தபோது அவைகள் செழிப்புக்கும்  வளர்ச்சிக்கும் ஏற்ற குறியிடுகளாக காணப்பட்டது. ஒரு குரங்கு தனக்கு வேண்டிய பழங்களை அளிக்கும் மரத்தினை சுற்றி வருவது போல மனித மனங்கள் மரத்தையே சிற்றி வந்தன. மேலும் மரம் மரணத்திற்கும் மறு பிறப்பிற்கும் அடையாளமாகியது. சில மரங்களின் விதைகள் கீழ்விழுந்து மரணித்து மீண்டும் முளைத்தெழுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மறு வாழ்வு குறித்த எண்ணங்கள் ஆதி மனதிற்குள் வேரூன்றியிருக்கலாம். அகவேதான் பல மரங்களில் ஆவிகள் உறைவது குறித்த கதைகளை நாம் கேள்விப்படுகின்றோம். பல தலைமுறை கண்ட மரமல்லவா?

ஆப்பிரிக்க பாப் மரம் (உதவி - இணையம்)

ஆப்பிரிக்க பாப் மரம் (உதவி – இணையம்)

ஆப்பிரிக்கவைப் பொறுத்தவரையில் பாப் என்கிற மரம் மிகவும் வணங்கப்படத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வாழ்வோடு அது பின்னி பிணைந்திருப்பதனால் தான். சட்டென பார்த்தால் வேர்களை பிடுங்கி தலைகீழாக நட்டிருக்கிரார்களோ எனத் தோன்றும் தாவரம். ஆனால் ஆப்பிரிக்க மக்களின் வாழ்வில் இன்றியமையாத சமய முக்கியத்துவம் பெற்றது இது. உணவு, தண்ணீர், மருத்துவம் தங்குமிடம், உடை என அதன் பரந்துபட்ட பயன்கள் அதற்கு அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

நாங்கள் குலசேகரம் பகுதியில் இருக்கும்போது எனது உடன் பள்ளித்தோழன் கோகுல் என்னை அவனுடன் அழைத்துக்கொண்டு சென்றான். நான் சென்ற இடத்தில் ஒரு சில நாக சிலைகள் மட்டுமே ஒரு மரத்தினடியில் இருந்தது. அங்கு இருந்த சூழல் என்னை மிகவும் அச்சுறுத்துவதாகவே இருந்தது. நாக சிலை எனக்கு பாம்புகளை நினைவுபடுத்தின, நாங்கள் சென்றது ஒரு உக்கிரமான காட்டிற்குள். மிகப்பெரிய ஒரு மரத்தின் அடியில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். பிர்ற்பாடுதான் நாங்கள் சென்றது “காவு” என அறிந்து கொண்டேன். குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் காவுகள் அனேகம் உண்டு. வழிபடுகின்ற இடம் என்பதால் அவ்விடத்தை இயற்கையாக வைப்பது மிக முக்கிய கடமையாக செய்யப்பட்டுவந்தது. நான் டாக்டர் சோபனராஜ் அவர்களிடம் இதைக்குறித்து பகிர்ந்து கொண்டபோது காவு குறித்த சூழியல் நன்மைகளை அவர் கூரினார். அதாவது காவில நிற்கும் மரங்களை ஒருவரும் வெட்டமாட்டார்கள். அந்த நம்பிக்கையால் பல்வேறு வகையான அபூர்வ மரங்கள் காக்கப்பட்டு வந்திருக்கிறது என கூறினார்கள்.

அந்தவகையில் பல்வேறு மரங்கள் மிக முக்கியமாக வழிபடப்படுகிறது. மரங்களில்  ஏதேனும் கட்டி வைத்து தங்கள் வேண்டுதலைக் வெளிப்படுத்துவது உலகில் பல்வேறு இடங்களில் உள்ள மரபு. மரங்களை ஒருசிலர் வணங்குவதால் வேறுசிலர் அதை வெறுக்கின்ற மனநிலைக்கு போய்விட்டனர். கிறிஸ்தவமும் இஸ்லாமும்  மரங்களிலிருந்து தங்களை வெகுவாக பிரித்துக்கொண்டாலும், திருமறையும் திருகுரானும் தாவரங்களைக் குறித்து தாராளமாகவே பதிவு செய்திருக்கிறது.

நான்  போதகராக பணியாற்ற துவங்கியிருந்த நேரம். சிறு குழந்தைகளுடன் மிகவும் அதிக நேரங்கள் செலவிடுவேன். எப்போது சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தினாலும், நான் அவர்களுக்கு புத்தகங்களையே வழங்க முயற்சித்தோம். ஆனால் மிகச்சிறந்த புத்தகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்தவைகளே. இந்தியாவின் வரை கலையோ கதை கூறும் முறைகளோ பதிப்பக வளர்ச்சியோ கிறிஸ்தவ குழந்தைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவில்லை.  ஆகவே நாம் ஒரு மாதாந்திர பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என எண்ண தோன்றியது. ஆகவே அவற்றிற்கான வடிவம் எப்படியிருக்கும் ஆன ஒரு மாதிரியை தயாரித்தேன். அந்த பத்திரிகையில் திருமறையில் காணப்படும் தாவரங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுத டாக்டர் சோபனராஜ் அவர்களை கேட்டேன். இந்தியாவில் காணப்படுகின்ற  தாவரங்களுக்கும் அவைகளுக்கும் நெருங்கிய உறவு இருக்குமென்றல் அதையும் நீங்கள் இணைத்து கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

சிறுவர் பத்திரிகைக்கான முன் அட்டைப்படம்.

சிறுவர் பத்திரிகைக்கான முன் அட்டைப்படம்.

பிற்பாடு பல்வேறு சோதனைகளால், என்னால் அந்த பத்திரிகையை வெளிக்கொணர இயலவில்லை. ஆனால் டாக்டர் சோபனராஜ் அவர்கள் எனக்காக ஒரு பகுதி ஆயத்க்டம் செய்து தந்தார்கள். அதில்,  அவர்கள் அத்திமரத்திற்கும் ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் உள்ள தொடர்பை குறித்து எழுதியிருந்தார்கள். அது என்னை வெகுவாக தூண்டியது. ஆபிரகாமிய மதங்களில் அத்தி மிக முக்கிய இடம் வகிக்கிறது, இந்துக்களுக்கு ஆலமரம் அவ்விதமாக காட்சியளிக்கிறது, புத்த மதத்தைச் சார்ந்தவ்ர்களுக்கோ அரசமரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எப்படி ஒரே பேரின தாவரங்களை பல்வேறு மதத்தினர், நாட்டினர் தங்களின் மரபோடு இணைத்துக்கொண்டனர்? இதற்கு இணையாக பனைமரங்களைக் நாம் குறிப்பிடலாம். பலஸ்தீனாவில் பேரீச்சைகளும் ஆசியாவில் பனை மரங்களும் இடம்பிடித்துள்ளதை காணமுடியும். இஸ்லமியரும் கிறிஸ்தவரும் கூட பனையை தங்களுக்கு எப்பொழுதும் நெருக்கமாக வைத்திருப்பதை இன்றும் காணமுடியும்.

திருமறையில் மனிதர்களை கடவுள் படைத்து அவர்களை தங்கச்செய்வது ஏதேன் எனும் தோட்டம். இல்லமே கோயில். அங்கே தானே கடவுள் அவர்களோடு உலாவுகிறார். அவர்களிடம் விலக்கப்பட்ட கனி மரம் ஒன்றின் அருகில் செல்லவேண்டாம் என மட்டும் அறிவுறுத்தபடுகிறது. ஆனால் அவர்கள் அந்த கட்டளையை மீறியதால் அவர்களுக்கும் அந்த இறைவன் வாழும் தோட்டத்திற்கும் இருந்த உறவு முறிக்கப்படுகிறது. மீண்டும் இயேசுவால் சிலுவை எனும் வெட்டி இணைக்கப்பட்ட மரத்தினால் மீண்டும் இரைவன் தங்கியிருக்கும் ஒர் தோட்டதில் வாழும் வாழ்வை அனைவரும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் கூறியீடாகத்தான் அனைவரும் அவரின் இறுதி எருசலேம் பயணத்தில் இலைகளையும், குருத்தோலைகளையும் பிடித்துச் செல்லுகின்றனர். எனேனில், இறையரசு குறித்த காட்சியை திவ்ய வாசகனாகிய யோவான் காணும்பொழுது, அங்கு நிற்கிறவர்கள் அனைவர் கரங்களிலும் குருத்தோலை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் எனும் காட்சி பதிவாகிறது. இப்படியாக திருமறையின் துவக்கம் முதல் முடிவு வரை, நாம் மரங்களின் ஊடாகவே பயணிக்கிறோம்.

இளம் கன்று, திருவலம்புரம்

இளம் கன்று, திருவலம்புரம்

நாங்கள் உள்ளே செல்லும்போது அங்கே வந்திருந்த கார் டிரைவரும் எங்களோடு இணைந்துகொண்டார். வெளியில் பிரகாரத்திலேயெ நின்று கொண்டோம். தமிழகத்தில் பனை பெருமதங்களிலும் இடம் பிடித்திருக்கிறது மற்றும் சிறு தெய்வ வழிபாட்டிலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. குமரி மாவட்டதில் மட்டும் 4 இடங்களில் பனை மரங்களை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன். இவைகளை எல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது பனை மரங்கள் தமிழர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த தாவரம். அதன் மகிமையை தொல் மூதாதை கண்டு நமக்கு கையளித்திருக்கிறார். அதை வணக்கத்துடன் ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

3 பதில்கள் to “பனைமரச்சாலை (63)”

 1. Logamadevi Annadurai Says:

  பனையைக்காணச்செல்லும் உங்களின் அதே உள்ளக்கிளர்ச்சியுடன் தான் நான் உங்கள் பதிவினை வாசிக்கிறேன்.
  ஒரு கிறுஸ்துவ இறைப்பணியாளராயிருக்கும் நீங்கள், இந்துக்களின் ஸ்தலவிருட்ஷம் குறித்து பரந்துபட்ட பார்வையுடன் எழுதி இருக்கிறீர்கள்
  சிவன் திருமேனியின் இரண்டு குழிகளும் நுங்கினைப்போல் தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை
  காதல் கொண்ட கண்ணல்லவா? காண்பதெல்லாம் பனையே உங்களுக்கு
  எனினும் அந்த உவமை அற்புதம்
  மூர்த்திக்கு இணையானது விருட்ஷம் எல்லா ஆலயத்திலும்
  பாஸ்டர் ஒன்றை கவனித்தீர்களா? எல்லா பழமையான பனையின் அடியிலும் ஒரு இளம் பனை வளர்கிறது அல்லது வளர்க்கப்படுகிறது
  இது ஒரு நல்ல அறிகுறி அல்லவா?
  மரங்களைக்குறித்த பொதுவான பதிவும் மிகச்சரியே
  கோகுலுடன் நீங்கல் சென்ற கோவில்காவுகள் உண்மையில் conservation -ன் பொருட்டே உருவாக்கப்பட்டவை
  என் mphil மாணவர்களில் ஒருவர் இந்த sacred groves எனப்படும் காவுகளைக்குறித்து ஆய்வு பண்ணியிருக்கிறார்
  விலக்கப்பட்ட கனியின் மரத்தயும், சிலுவையின் வெட்டி இணைக்கப்பட்ட மரத்தயும் கூறீருக்கிறீர்கல்
  பாஸ்டர் இந்த loyality மிக மிக ஆச்சர்யப்பட வைக்கிறது
  பனை என்றால் பனை மரம் என்றால் மரம்
  பேசுபொருள் குறித்த ஆகச்சிறந்த எல்லாமே சொல்லிவிடுகிறீர்கள்
  எனக்கு ஒன்று தோன்றுகிறது முன் ஜென்மங்களில் நீங்கள் பனையாக பிறந்து பனையை காதலித்து கலந்து நூறாய் ஆயிரமாய் சந்ததிகளை கனியின் மூலம் பெருக்கி பின் இந்த பிறவியில் பனையாக பிறவாமல் அந்த ஜென்மாந்திர நீட்சியாகத்தான் பனையின் மீதான காதலில் திலைக்கிறீர்கள் என்று

 2. pastorgodson Says:

  எனது மனப்பதிவும் அதுவே. நூற்றாண்டுகளாக ஒரு மரத்தினை அப்படித்தான் பேண முடியும். அதை ஆணயாக கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதன் பயனை ருசித்தவர்கள் சான்றாக கல்வெட்டுகளில் பொறிக்கும் காலத்திற்கு முன்பே இதை செய்திருக்கிறார்கள். அவர்கள் வாரிசாகவே என்னை கருதுகிறேன்.

 3. siva kumar Says:

  sir, there were some comics presented with Bible related stories. You can have a look at this. Sadly it was very long back.
  http://johny-johnsimon.blogspot.in/2016/05/001.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: