பனைமரச்சாலை (65)


பனை பக்தி

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருப்பனந்தாள் வந்தபோது மணி 5.30 ஆகிவிட்டிருந்தது. கோவிலுக்கு எதிரில் இருந்த ஒரு கடையின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு, எங்கள் பொருட்களையும் வண்டியிலேயே வைத்துவிட்டு பின்பு ஆலயத்திற்குள் சென்றோம். மிகப்பெரிய ஆலயம் அது. முகப்பிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவை கடந்து சென்றால் தல மரமகிய  பனை மரங்கள் நிற்கின்றன. சுற்றிலும் சிமென்டால் கட்டி வளர்க்கிறார்கள். ஆலய வளாகத்தினுள் வேறு மரங்கள் இல்லை.  ஆனால் ஆலயத்தின் பின்புறம் மிக அழகான ஒரு ஒத்தைப் பனைமரமிருந்தது. அஙு செல்ல வழியில்லாமல் திரும்பிவிட்டோம். பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்துகொண்டோம். அரை கால்சட்டை அணித்திருப்பதால் உள்ளே செல்ல பயமாக இருந்தது. அமிர்தராஜ் வேறு பயமுறுத்தினார். ஆனால் துணித்து சென்றேன். ஒருவரும் தடுக்கவில்லை, வயதான பெரியவர்கள் ஆலய மண்டபத்தில் குழுமியிருந்தார்கள். சரியாக ஆறுமணிக்கு மணியடிக்கப்பட்டது. தீபாரதனை காட்டினார்கள். பக்தி கமழும் முகங்களின் வழியாக நான் அன்று தெய்வத்தை தரிசித்தேன். உச்சகட்ட கணம் அது.

ஒவ்வொருவராக பிரிந்து சென்றார்கள் அப்போது ஒரு பெரியவரைக் கண்டு தல வரலாறு குறித்து கெட்டேன். அவர் வெறொரு பெரியவரை கை காட்டினார். நான் அவருடன் புத்தகம் வாங்க உள்ளே சென்றபோது மிகப்பெரிய ஓட்டை விழுந்த மர பெட்டி இருந்ததையும், மிகப்பெரிய செப்பு பாத்திரமும் இருந்ததைப்பார்த்தேன். மிகப்பெரிய ஆலயம்தான். பழைமையை அதிகமாக மாற்றமல் வைத்திருக்கிறார்கள். தலமரம் பின்னணியில் தெரியும்படி அனேக படங்களை சுவரில் பெய்ன்டால் வரைந்திருந்தர்கள். எனக்கு ஒரு புத்தகக்ட்தை அவர் தந்க்டுவிட்டு 20 ரூபாய் கேட்டார்.  என்னைடம் பணம் இருக்கவில்லை, அமிர்தராஜை நான் தேடிப்போக எத்தனிக்கையில் அவர் அங்கே வந்தார். ஒரு தலபுராணம் புத்தகத்தை வாங்கிவிட்டு வெளியே வந்தோம்.

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள்

தமிழகத்தில் உள்ள சிவ தலங்களில் 16 ஆலயங்களில் பனை மரம் இருப்பதாக பண்ருட்டியைச் சர்ந்த  திரு இரா. பஞ்சவர்ணம்  அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274. இவைகளில் 264 தமிழகத்தில் உள்ளன. இவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை தல வரலாறாக குறிப்பிடப்படுகிறதைப் பார்க்கலாம். பெரும்பாலும் தல வரலாறுகளில் பனை ஒரு குறியீடாக பின்னிணைந்து வருவதைக் கண்டுகொள்ளலாம். அதற்கு காரணம் பனையின் பயனும், மக்கள் வாழ்வில் நீக்கமற இடம்பெற்ற அதன் முக்கியத்துவமும், அதனை பக்தி பரவசத்தில் உற்றுநோக்கிய அடியவர்களும்தான்.

திருப்பனந்தாள் எனும் வார்த்தையே பக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது. இறைவனின் பாதத்தை தாள் எனக் குறிப்பிடுவார்கள். தாள் என்பது மரத்தின் அடிப்பகுதியையும் குறிக்கும். திரு என்பது கடவுளையும் பனையின் என்பது மரத்தினையும் குறிப்பிடும்போது பனையின் அடியில் வசிக்கும் கடவுள் அல்லது, இறைவனின் பாதமும் பனைமர அடி பாகமும் ஒன்று என பொருள் கொள்ளத்தக்க பெயராக காணப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பக்தி எழுச்சி காலகட்டத்தில் இவ்வாலயத்தில் வந்து பக்தி ரசம் சொட்ட பாடிச்சென்ற திருஞான சம்பந்தரின் பதிகம் கிடைக்கிறது.

இந்த ஆலயத்தின் தல வரலாறு இவ்விதமாக கூறப்பட்டுள்ளது. அசுரகுல மகளான தாடகை என்பவள்  தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது.  இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். என தல வறலாறு கூறுகிறது. ஆடை நழுவும் வரலாறு பிந்தையது என நாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.

ஆண்டாள்

ஆண்டாள்

இந்திய சிற்ப கலை மரபில் 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்பே  பெண் சிலைகளுக்கு ஆடை அணிவிக்கும் மரபு ஏற்படுவதாக கூறுவார்கள். பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரும், ஒரே பெண் கவியும் பக்தையுமான ஆண்டாள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள். அவர்களின் திருவுருவச் சிலை லாச் ஏஞ்சல்ஸ் கண்ட்ரி மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் இல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை பதிநான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது எனச் சொல்லுகிறார்கள். இச்சிலை மார்பகம் மானத்தின் அடையாளமாக காண்பிக்கவில்லை மாறாக பக்தி சுரக்கும் ஊற்றாகவே காண்பிக்கிறது.

ஆனால்  63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார் அது நிமிர்கிறது எனும் வரலாற்றில், இழந்த ஒன்றை மீட்கின்ற அடியவரைக் காண்கின்றோம். அது பனையுடனான உறவா என்பது கேள்வியாக தொக்கி நிற்கிறது.

இதை விஞ்சும் பல்வேறு தகவல்கள் கூறும் ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன. மரத்தடியில் தொல் பழங்காலத்தில் கடவுளை வணங்கி வந்த மக்கள் பக்தி மரபால் தொகுக்கப்பட்டபோது இவ்விதம் நிகழ்ந்திருக்கலாம். பல்வேறு ஆலயங்களில் வழங்கப்படும் தல வரலாறு மிகவும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவைகள் அனைத்திலும் பனை மரத்தை குறித்த தகவல்கள் எஞ்சுகின்றன.

பேரளம் எனும் ஊரிலிருந்து  திருவாரூர் செல்லும் வழியில்  சன்னாநல்லூரைக் கடந்து சென்றால் ‘பனையூர் ‘ என்று கைகாட்டியுள்ள கிளைப்பாதை காணப்படும். சுமார்  1 கி. மீ. செல்ல திருப்பனையூர் தாலவனேஸ்வரர் என்ற ஆலயம் வரும். பனை மர காட்டில் வாழும் கடவுள் என பொருள் கொள்ளத்தக்க இறை நாமம். இறைவன் பனங்காட்டில் வாழ்ந்ததால் அது திருப்பனையூர் என பெயர் பெற்றது. சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலவரலாறு, தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார், அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது எனக் கூறுகிறது.

கரிகாலனுடன் யானை கதைகளை இணைத்துக் கூறும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் இத்தலம் பனை மரங்களால் சூழப்பட்ட காடு. எட்டு வருடங்கள் இங்கு வாழும் வலிமையை பனங்காடு வழங்கியிருப்பது, பனங்காட்டின் சிறப்பை எடுத்துக்கூற வல்லது. இக்கோவிலின் கல்வெட்டில் இறைவன் ‘பனையடியப்பன்’, ‘பனங்காட்டிறைவன் ‘ என்று குறிக்கப்பெறுகின்றன.

திருவன் பார்த்தான் பனங்காட்டூர் எனும் இடத்தில் இருக்கின்ற  அருள்மிகு தாளபுரீஸ்வரர்  திருக்கோவிலில்,  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் என பெயர் கொண்ட இறைவன் பனங்காட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பனங்காட்டில் வழும் கடவுள் யார் என கேள்வி நம்முள் எழுவது இயல்பு. அதற்கு விடையாக சுயம்பு லிங்கம் அமைகிறது. பனங்காடுகள் பக்தி எழுச்சி கால கட்டத்தில் மிக முக்கிய கவனம் பெற்றிருக்கிறது  என அறியமுடிகிறது. பாங்காட்டினை நம்பி வாழும் குலம் அங்கு தொடர்ந்து பக்தி  எழுச்சி காலகட்டம் வரை தங்கள் குல வழிபாட்டை நிகழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்குள்ள சிறப்பு அம்சம் என்னவென்றல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். இங்கு வந்க்டு வடிபடுகிரவர்களுக்கு  ஐஸ்வர்யம் உண்டாகும் எனும் நம்பிக்கை பனை மரம் தன்னை நாடி வந்தவருக்கு, அளிக்கும் அளவற்ற பயன்களைச் சுட்டும். கண் தொடர்பான நோய்கள் தீரும் எனும்  நம்பிக்கை பனை மரம் கண் நோய்களுக்கு எப்படி மருந்தளிக்கிறது என்பதை குறிப்புணர்த்தும். தலவிருட்சத்தை சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். ஆம், பனையே ஆணும் பெண்ணுமாக இருக்கையில், திருமண பந்தத்தை மானிடர்கள் மேன்மையாக எண்ணக்கூடாதா என்ன? தொன்மையான இவ்வழக்கங்கள் நமது எண்ணத்தை ஒருமுகப் படுத்துகின்றன.

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ‘நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார். நுங்கின் மேன்மையா, அல்லது பதனீர் வழங்கும் தண்மைய என தெரியவில்லை, ஆனால் பனை இருக்கும் வழிபாட்டிடங்கள் பெரும்பலும் கண் நோயை குணப்படுக்த்துவதாக கூறுவது ஏதோ ஒரு செய்தியை தன்னுள் உள்ளடக்கியிருப்பதையே குறிப்புணர்த்துகிறது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள  திருமழபாடி வைத்தியநாதர் கோயில் திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. இறைவனின் மருத்துவ தன்மையை வெளிப்படுத்தும்படி வைத்தியநாதர் என பெயரிடப்பட்டிருப்பது சிறப்பு. பனை தல மரமாக இருக்குமிடத்து பிணி நீங்குவது அன்றோ முறை?

திருமழபாடி

திருமழபாடி

திருவோத்தூர் தல புராணம் நான் மிகவும் ரசித்தது. செய்யாறு அருகிலிருக்கும் இத்தலத்தை நான் 12 வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்திருக்கிறேன். இங்குள்ள சிரப்பு என்னவென்றால் கல்லில் பனை மரத்தை எடுத்து வடித்து வைத்திருக்கிறார்கள். அதிலும் அர்த்தநாரீஸ்வரர் போல் ஒருபுறம் ஆண் பனையின் அலகு தெரியும்படியாகவும் மற்றொருபுறம் பெண்பனையின் காய்கள் தெரியும்படியாகவும் கல்லில் செதுக்கி வைத்திருக்கின்றனர்.  இந்த முறை பனைமரச்சாலையில் என்னால் இதை பார்க்க முடியாவிட்டாலும், இக்கோயிலும் அதன் தல புராணமும் என்னுள் மிகுந்த  தாக்கத்தை எற்படுத்தியவை.

செய்யாறு அருகிலிருக்கும்  வேதபுரீஸ்வரர் தன்னுள் சிறப்புகள் பலவற்றை அடக்கிய தலமாகும்.  இத்தல புரனம் குறுகையில், சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனை கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை சார்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் தனது ஆய்வினை எனக்கு கண்பித்தார். அந்த ஆய்வு, தன்மகரந்த சேர்கை கொண்டு எப்படி பெண்பனை காய்க்கிறது எனும் அடிப்படையிலானது. யோசித்துக்கொண்டேன், பக்தி என்பது பாடலோ ஆடலோ அல்லது பரவசமோ அல்ல, அது ஒன்றிலிருந்து பிறிதொன்றாக மாறும் அதிசயம். அந்த அற்புத கணத்தை கண்டடைபவர்கள் மெய் பக்தர்கள்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

2 பதில்கள் to “பனைமரச்சாலை (65)”

 1. Logamadevi Annadurai Says:

  பனைக்காதல் இன்று பனை பக்தியாகிவிட்டது. காதலும் பக்திதானே பாஸ்டர்? எதன்அல்லது யார் மீதாவதான நம் எல்லை கடந்த விருப்பமே காதலும் பக்தியும் அல்லவா? திருப்பனத்தாள் ஆலயத்தரிசனம் குறித்த உங்கள் பதிவு அருமை.மாற்று மதத்தவர் எழுதியதென்று சொன்னால் மட்டுமே நம்ப முடியும்
  அரைகால் சட்டைகு எதற்கு பயந்திர்கள்? இங்கே இப்பொதெல்லம் அபப்டியான கட்டுப்படுகள் இல்லையே?
  பார்த்துக்கொண்டே இருங்கள் இனி கொஞ்சகாலத்திற்கு பிறகு பூசாரிகல் அரைக்கால் சட்டயுடன் வந்து போசை செய்வார்கள்
  இபோதெல்லம் ஆலயங்களில் பூசனைகள் வெரும் சடங்குகள். தட்டில் விழும் காசே ஆராதனைக்குரிய விஷயம்!!
  பனையை போற்றும் ஆலயங்களைகுறித்த இந்த பதிவை மிக நெகிழ்ச்சியுடன் படித்தேன்
  உங்களுக்கு ஸ்தலபுராணம் சொல்ல ஒரு பெரியவரும் இல்லாமல் போனாலும் நல்ல வேளையாக புத்தகமாவது கிடைத்ததே?
  திரு என்பதை செல்வம் என்னும் பொருளிலும் சொல்லாம் பாஸ்டர்.ஸ்ரீ அல்லது திரு இரண்டும் ஒன்றே!!!
  பனையைக்காட்டிலும் செல்வம் வேறில்லை என்னும் பொருள்படும்படி வைத்தார்களோ என்னவோ?
  பெண்சிலைகளுக்கு மேலாடை பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டபின்பே சேர்க்கப்பட்டிருக்கும்

  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் சிலையும், அந்த சற்றே சாய்ந்த கொண்டையும் கரத்தில் இருக்கும் அந்த கிளியுமாக அந்த சிலை அருமை என்றால் அதனைப்பற்றிய உங்கள் வர்ணனையோ அருமையிலும் அருமை

  இவ்வாலயம் குறித்து திருஞானசம்பந்தர் பக்தி ரசம் சொட்ட பாடிச்சென்ற பதிகத்தை தேடிச்சென்று படித்தேன் இப்போது, அற்புதமாயிருக்கிறது
  திருப்பனையூர் கோவிலில் ராஜகோபுரமிருக்காது என்பார்கள். கவனித்தீர்களா?

  புறவார் பனங்காட்டூர் இறைவனின் அருகிலிருக்கும் தாயரின் பெயர் மெய்யாம்பாள் எத்தனை அழகிய பெயர்?
  சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன என்பதும் இந்தத்தலத்தின் சிறப்பு எனப்படுகிறது
  ஆணும் பெண்ணுமாயிருக்கிற dioecious பனைகளை திருமணபந்தத்திற்கு எடுத்துக்காட்டாய் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

  திருமழபாடி வைத்தியநாதர் ஆலயத்தின் ஆண்டவர் சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.. இவரினிறைவியின் பெயரைக்கவனித்தீர்களா? அழகம்மை!!!

  திருவோத்தூர் ஆலயச்சிறப்பு நான இது வரையிலும் கேள்விப்படாத தாவரவியல் தகவலாயிருக்கிறது.அதிசயம்.
  அறிவியலால் அளவிடப்படமுடியாதல்லவா இறையியல்? இங்குள்ள அம்மனோ இளமுலைநாயகி!!!!
  எத்தனை எத்தனை அழகான திருநாமங்கள்?
  இங்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் கடைசி பகுதியில் ”குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்”
  என்றே முடிக்கிறார்

  அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்பார் நம்மாழ்வார். எவருடைய இறையவரும் குறையுடையவர்கள் அல்லர். அவரவர் செயல் வழியாக அவரவர் இறையவரை அடைய நின்றார்கள் என்ற இதன் பொருள் உங்களுக்கானது பாஸ்டர்

 2. pastorgodson Says:

  பேராசிரியை தேவி, இறைவியர் பெயர்களை நான் கவனித்தேன். கரிய பனை நுங்குகள் எப்போதும் ஒரு முழுமையைக்கொண்டுள்ளன. திடம், மென்மை, இளமை, தண்மை மற்றும் கண்ணுடயவைகள் கூட. நீங்கள் அதை பதிவு செய்து நிறைவு செய்துவிட்டீர்கள். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: