பனைமரச்சாலை (70)


அருட்பணியாளர்

 

அங்கிருந்து புறப்படும்பொழுது பின்மதியமாகியிருந்தது, கொடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்குப் போகலாமா என அமிர்தராஜ் கேட்டார் ஆனால் அது நேரத்தை விரயமாக்கும் என்பதால் அவைகளை தவிர்த்து நேரடியாக வினோலியாவின் வீடுநோக்கி செல்ல முடிவெடுத்தோம். அமிர்தரஜ் சற்று தடுமாறினாலும், இடத்தை அவர் கண்டுகொண்டார். மாலை அந்தி சாயும் வேளையில் அணைக்காடு வந்து சேர்ந்தோம்.

 

ரோட்டோரத்தில் ஒரு புளியமரத்தடியில் இருந்த சர்பத் கடையில் எப்படி போகவேண்டுமென்று வழி விசாரித்தோம். அவர்கள் வழி காட்டினார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் அருள்திரு ஜெ வின்சென்ட் அவர்கள் வீட்டு வாசலில் நின்றோம். வினோலியா முன்னதாகவே கூறியிருந்தார்கள் அவர்கள் அப்பவௌம் அம்மாவும் தனியாக இருப்பதால், மாலை 6 மணிக்கு கேட்டை பூட்டிவிடுவார்கள் என்று. ஆகவே சீக்கிரமாக வந்தது சரியென்றே பட்டது.

 

வினோலியா அவர்களை சென்னையில் ஒரு உணவகத்தில் தான் முதன் முறையாக சந்திதேன். அன்று நான் உடல்நலமின்றி இருந்ததால் அவர்களுடன் ஈடுபாட்டுடன் பேசமுடியவில்லை. ஆனால் அந்த நினைவுகள் அவர்களில் இருந்தது. முகநூல் வழியாகவே தொடர்பில் இருந்தோம். எனது பனைமர வேட்கைப்  பயணத்தைக் குறித்து கேள்விபட்ட உடனேயே அவர்கள் மிகவும் உற்சாகமாகிவிட்டார்கள். அந்த உற்சாகம் எந்த அளவு என்றால், எனது பயணத்தின் ஆரம்ப கால தடங்கல்களை நினைத்து நான் வருந்திக் கொண்டிருக்கும்போது எனக்கு அவர்கள் தொலைபேசியில் அழைத்து ஊக்கமளித்து, சென்னைக்கு வருகையில் உங்களை தங்க வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்பது முதல், எனது பாதையில் சிறு மாற்றம் ஏற்படுத்தி அவர்கள் அப்பாவுடன் தங்க வைக்கச் செய்யுமளவு பரபரப்பாக அனைத்தையும் ஒருங்கிணைத்து என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்கள்.

 

முகநூல் எனக்கு அவ்விதம் மிக நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தது. திருச்சியிலிருந்து கூட ஒரு சகோதரி அழைத்து, நீங்கள் திருச்சி செல்வீர்களென்றால் எனது தந்தையை பாருங்கள் அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கூறியிருந்தார்கள். திருச்சி எங்கள் பயண திட்டத்தில் இல்லாதபடியால் அவர்களை எங்களால் சந்திக்கமுடியாது என்பதை கூறினோம். இதற்கிடையில் எனது மூத்த சகோதரி, கோவையில் இருக்கிறவர்கள், பாலக்காட்டில் தான் பணியாற்றும்  கல்லூரிக்கு வரமுடியுமா? என்று கேட்டார்கள். எங்களது பயணம் நிறைவு செய்யப்படவேண்டிய நாள் நெருங்குவதாலும், ஒருசிலர் எங்கள் பாதையில் எங்களுக்காக காத்திருப்பதாலும் நாங்கள் அங்கும் செல்ல இயலாது என கூறினோம்.

 

தஞ்சாவூர் செல்லவேன்டியது எங்கள் பயண திட்டத்தில் இருந்தது.  ஆனால் வேதாரண்யம் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை அருகிலிருக்கும்  அணைக்காடு எனும் பகுதியில் வசிக்கும் அருள்திரு வின்சென்ட் அவர்களைப் பார்க்கவேண்டி இருந்ததால் தஞ்சாவுரை நாங்கள் பயண திட்டத்திலிருந்து மாற்றிவிட்டோம். அனைத்திற்கும் ஒரு காரணம் இருப்பது போல, இங்கும் கடவுளின் செயல் எங்களை வழிநடத்தியது என்பதை பின்னர் தான் உணர்ந்துகொண்டோம்.

அருள்திரு ஜே வின்சென்ட், பனைமரச்சலையில் அவரை அமிர்தராஜ் ஸ்டீபன் எடுத்த புகைப்படம்.

அருள்திரு ஜே வின்சென்ட், பனைமரச்சலையில் அவரை அமிர்தராஜ் ஸ்டீபன் எடுத்த புகைப்படம்.

 

மாலத்தீவில் இருக்கும் எனது சகோதரி தான் சிறுவயதில் எங்கள் அனைவருக்கும் டீம் லீடர். பெரிய அக்காவும் பெரிய அண்ணனும் நகர்கோவிலில் நின்று படித்ததால், எங்களுக்கு கண்கண்ட மூத்த சகோதரி எங்கள் ரோஜா அக்கா தான். காலை எழுத்தவுடன் அவர்கள் தான் ரேடியோவில் பாட்டு வைப்பார்கள். அப்படி நான் கவனித்த வான் மலர் நிகழ்ச்சியில் கேள்விபட்ட பெயர் தான் அருள்திரு வின்சென்ட். ஒரு கட்டத்தில் நானே சொல்லிவிடுவேன் பாடல்கள் அல்லது கதை குறுநாடகம் என எழுதியவர் பெயர் வரும்போது அது அருள்திரு வின்சென்ட் என கூறுவர்கள் என. வானொலியில் சுமார் 30 வருடங்களுக்குமுன்பு ஒரு பெயராக மட்டுமே எஞ்சிய அந்த முகத்தை பார்ப்பது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு என்பதாகவே எண்ணினேன்.

 

வினோலியா என்னை அவர்கள் வீட்டிர்குச் செல்ல அறிவுறுத்தக் காரணம் வேறொன்றும் உண்டு அது எனது பழைய ராயல் என்ஃபீல்ட் தான். தனது தகப்பனாரின் புல்லட்டில் தான் தனது சிறு வயது பயணங்கள் அனைத்தும் அமைந்தது என அந்த நினைவுகளை மீட்டியபடி சொன்ன அவர்கள், ‘அப்பா உங்களையும் புல்லட்டையும் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்” என்றார்கள். நான் அருள்திரு வின்சென்ட் அவர்களிடம் தொலைபேசியில் பேசும் போதும் அவர்கள் தான் எண்பது வயதை நெருங்கிவருவதாகவும் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்திவிட்டதகவும் கூறினர்கள். உடலில் இன்னும் சற்று வலுவிருக்குமானால் என்னோடு வர மிகுந்த விருப்பமே என்றும் சொன்னார்கள். ஆகவே பல்வேறு முறைகளில் அவரை சந்திக்கும் முன்பே அவர் எனது மனதுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார்.

 

நாங்கள் அந்த காம்பவுண்டின் அருகில் சென்றபோது சட்டை எதுவும் அணியாமல் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அவர்கள் வந்து எங்களை வரவேற்றார். தனித்தன்மை வாய்ந்த பெரிய மீசை வைத்திருந்தார். போதகர்கள் என்றால் மீசை மழிப்பதோ அல்லது தாடி வைத்துக்கொள்ளுவதோ வழக்கமாயிருக்கும் வேளையில் அது பார்ப்பதற்கு அழகாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. வான்மலர் பத்திரிகை ஊழியத்தில் வருகின்ற “மீசை மாமாவின் பெரிய மடத்தனம்” எனும் பகுதியை இவர் தான் எழுதியிருப்பாரோ என்கிற எண்ணம் என்னுள் மின்னி மறைந்தது.   எங்கள் வாகனங்களை நிறுத்தும்படியாக அமைக்கப்பட்ட இடத்தை காண்பித்தார்கள். வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்றோம். ஷூ எதுவும் கழற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். நாய் கவ்வினால் அப்புறம் எதுவும் மிஞ்சாது என கூறினார்கள். அந்த வீட்டிற்குள் நுழையுமுன்பதாகவே எத்துணை கச்சிதமான மனிதர் என பிரமிப்பாக இருந்தது.

 

முன் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் மிகவும் நேசிக்கின்ற நாகர்கோவில் கங்கார்டியா செமினரியில் அவர் இறையியல் கற்றுக்கொடுப்பவராக இருந்திருக்கிறார். லுத்தரன் திருச்சபையில் போதகராக 15 ஆண்டுகளும் பணியாற்றிவிட்டு, பின்பு சென்னையில் உள்ள கிறிஸ்டியன் மீடியா சென்டரின் வளர்ச்சிக்காக 30 வருடங்கள் அயராது பாடுபட்டிருக்கிறார். அனேகருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், குருவாகவும், நல்ல தோழராகவும் இருந்திருக்கிறார். எனது தாத்தா வருகையின் தூதன் தேவதாசன் அவர்களை நன்கு அறிந்திருக்கிறார். மதுரை அரசரடி கல்லூரியின் முதல்வர் தெர்வு நேரத்தில் இவரும் விண்ணப்பித்திருக்கிறார். ஆகவே பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களையும் மிக நன்றாக தெரியும் என பழங்கால கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது போதகர் அம்மா எங்களுக்கு தேனீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் அன்று பெலவீனமாக இருந்தார்கள். ஆகையினால் எங்களுக்கு உணவு ஏதும் செய்யவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டோம்.

 

நாங்கள் அங்கு செல்கிறோம் என்று அறிந்தவுடன் அவர்கள் எங்களுக்காக மிகுந்த பிரயசப்பட்டு அனேக தகவல்களை எங்களுக்காக செகரித்திருக்கிறார்கள். குறிப்பிட தகுந்த காரியங்களாக அவர் சொன்னவைகள் என்னவென்றால், பனைத் தொழிலாளிகள் அணைக்காடு பகுதியில் ஒருகாலத்தில் வந்து பனையேறுவது வழக்கம். தற்போது ஐந்து வருடங்களாக பனைட்தொழிலாளர்கள் வருவது குறைந்து விட்டது. ஆகவே பனைமரங்கள் பயனின்றி இருப்பதால் அவைகளை அனேகர் வெட்டி முறிக்க முடிவு செய்திருக்கின்றனர். மேலும் அணைக்காடு பகுதிகளில், வேலிகளிலே பனைமரங்கள் வைத்து பாதுகாத்திருக்கின்றனர். தற்போது வேலிகளில் இருக்கும் மரங்களை நீக்கி சுவர் எழுப்புவதால் வெலியில் நிற்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன எனவும், சுவர் அருகில் நிற்கும் பனை மரங்களில் இருந்து விழும் பழங்கள் ஓலைகள் யாவும் அருகில் இருக்கும் தோட்டக்காரர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று எண்ணி அவைகளையும் வெட்டிவிட முடிவு செய்திருக்கின்றனர் எனவும் தாம் கேள்விப்பட்டவைகளை கூறினார்.

 

அற்பணிப்புடன் அவர் சேகரித்த தகவல்களை குறித்துக்கொண்டோம். அவரை சந்தித்ததே போதகராக எனக்கு பெரும் பக்கியம், அப்படியிருக்க அவரும் மகிழ்வுடன் என்னோடு பங்கு கொண்டது எனக்கு அதிகப்படியான மகிழ்ச்சியைக் கொடுத்தது. பிற்பாடு அவர், தனது வீட்டின் மேல் மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு கூட்டிச்சென்றார். அங்கே நாங்கள் இரவு தங்குவதற்காக அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பொருட்களை வைத்துவிட்டு, குளித்து வெளியே சென்று இரவு அவர்கள் தூங்குமுன் உணவை முடித்துக்கொண்டு வரலாம் என திட்டமிட்டோம். மணி ஏழு தான் ஆகியிருந்தது. ஆனால் பெரியவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக சாவியை வாங்கிக்கொண்டோம். வெளியே வரும்போது ஒரு சிறு பாம்பு எங்களை கடந்து போனதாக அமிர்தராஜ் கூறினார். எங்களுக்கு எதிரே, ஒருசில பனைமரங்கள் ரோட்டோரத்தில் நின்றதைப் பார்த்தோம்.

 

 

அமிர்த்தராஜுடைய வண்டியிலேயே நாங்கள் பட்டுக்கோட்டை சென்றோம். அங்கே நான் தோசை சாப்பிட்டேன், அமிர்த்தராஜ் பலாப்பழம் மட்டும் சாப்பிட்டார். மீண்டும் வருகிர வழியில் டீ குடித்தோம். எட்டுமணிக்குள் வீடு வந்து சேர்ந்துவிட்டோம். எங்கள் பயணத்திலேயே மிகவும் சீக்கிரம் கூடணைந்த நாள் இது. அமிர்தராஜ் கட்டிலில் படுத்து உடனேயே தூங்கிவிட்டார். வினோலியவை அழைத்து, அத்தனையும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருகிறது என நன்றி கூறினென். நான் பாயை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன். நட்சத்திரங்களை பார்த்தபடி படுப்பதில் உள்ள சுகத்தை அனுபவித்தபடி கிடந்தேன். சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வந்தது. அப்படியே தூங்கிப்போனேன்.

 

காலை வேளையில்  நாங்கள் குளிப்பதற்கு ஆயத்தமானபோது, வினோலியாவிடமிருந்து மீண்டும் செய்தி வந்தது, “பம்புசெட்ல குளிங்க”. அமிர்தராஜ் நான் பாத்ரூம்லயே குளிக்கிறேன் என்றார். நான் மட்டும் சென்றேன், பெரியவர் எனக்காக கத்திருந்தார். அந்த காலை வேளையின் பம்புசெட் குளியல் ஒரு சிறந்த அனுபவமாகத்தானிருந்தது. நங்கள் அங்கிருந்து வெளியே கிளம்பும்படியாக ஆயததமகி கிழே வந்தபோது பெரியவர் மிக அழகாக மெஜையில் அமர்ந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அமிர்தராஜ் அப்படியே அமர்ந்து புகைப்படம் எடுக்கத்துவங்கினார். அமரத்துவம் வாய்ந்த ஒரு புகைப்படத்தை அன்று அவர் எடுத்தார். எண்பது வயது நெருங்கையில் கூட தனக்கான அனைத்தையும் செய்யும், தனது இறைப்பணியின் நீட்சியாக எழுதும் அவரை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

 

நாங்கள் புறப்படுகிறோம் என்றவுடன் அவர் எங்களுக்காக ஒரு பிரார்த்தனை ஏறெடுத்தார். மிக சிறப்பான அர்த்தம் பொதிந்த ஒரு இறையியல் பிரார்த்தனை அது. கடவுளே உமது வழிகளை நாங்கள் அறியோம், உமது வழிநடத்துதல் ஒவ்வொரு அடியவருக்கும் வித்தியாசமாக வழங்கப்படுவதை நாங்கள் கண்டு பிரமிக்கின்றோம் என அவர் ஏறெடுத்த மன்றாட்டு சிறப்பான மற்றும் சிலிர்ப்பான ஒன்று. அவர் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பிவிட்டார். எளிமையே உருவான ஒரு கர்ம யோகியை, மகானை சந்தித்து விடபெறும் அசீர்வதிக்கப்பட்ட கணமாக அது இருந்தது.

 

(நாங்கள் அங்கிருந்து விடைபெறும் தருணம் அவர்களை மீண்டும் சந்திபோம் என்று கூறியே விடைபெற்றோம், ஆனால் கடந்த 03.08.2016 அன்று அவர் ஆண்டவருக்குள் மரித்தார். கிறிஸ்துவ நம்பிக்கையின் படி அவரை மேலுலக வாசியாக சந்திப்போம் எனும் உறுதியே வினோலியாவுக்கும் கூறினேன் அதை எனக்கே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேன்.)

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (70)”

 1. Logamadevi Annadurai Says:

  உங்கள் நட்பு வட்டாரம் குறித்த இந்த பதிவு மிக நெகிழ்வாக இருக்கிறது. லினோலியாவின் தந்தையின் அந்த கம்பீரமான புகைப்படம் மனதில் பதியுமுன்பே அவர் இறப்பு பற்றிய செய்தி!!!
  எத்தனை அனித்யம் நம் வாழ்வு இல்லையா பாஸ்டர்?
  அந்த முதிய தந்தையின், இறைப்பணியாளரின் மீசை என்ன கம்பீரம் மற்றும் வசீகரம்?
  வள்ளுவர் சொல்லி இருக்கிறாரே பாஸ்டர்
  “ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தொழித்துவிடின் “” அப்படின்னு!!!
  அவர் ஆன்மா அமைதியுற என் பிரார்த்தனைகள்.
  பம்புசெட் குளியலும், நட்சத்திரங்களுடனான ஒர் தனித்த இரவும் உங்களுக்கென்றே சிறப்பாக இறையினால் அருளப்பட்டதாகிறது. அற்புதமான நிகழ்வுகள் மற்றும்,நினைவுகள்
  இன்னும் இது போன்ற அற்புதங்கள் உங்களுக்கு என்றென்றுமாய் நிகழ்வதாக!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: