பனைமரச்சாலை  – பின்னிணைப்பு


எனது பணி நேரத்தில், அகமதாபாத்

எனது பணி நேரத்தில், அகமதாபாத்

பனைமரச்சாலை முடிந்தபின்னும் அதன் அதிர்வலைகள் பிரம்மாண்டமாக இருந்தது. ஒன்று வெளியிலிருந்து வந்த தொடர் ஊக்கம், மற்றோன்று எனக்குள் ஏற்பட்ட கொந்தளிப்பான மனநிலை. நான் மும்பை வந்த உடனேயே என் டி ற்றி வி, (NDTV) தந்தி தொலைக்காட்சி உட்பட அனேக  ஊடகங்கள் பனைமர வேட்கைப் பயணம் குறித்த  செய்திகளை வெலியிட்ட வண்ணம் இருந்தன. அனேக பத்திரிகை மற்றும் தொலைகாட்சியினர் என்னை அழைத்தபோது நான் மும்பை வந்துவிட்டிருந்ததால் மேற்கொண்டு என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் நண்பர்கள், திருச்சபையின் பெரும்பான்மையானோர் உறவினர்கள் என அனேகர் வாழ்துதலை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

http://www.ndtv.com/video/news/news/motorcycle-diaries-a-priest-s-road-trip-for-palm-trees-419467

http://www.dtnext.in/News/City/2016/06/04001945/Pastor-on-a-mission-to-save-palm-trees.vpf

ஆனால் என் மனது முழுக்க இவைகளை நான் ஆவணப்படுத்தவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டு இருந்தது. முதலில் வெறும் 18 நாட்களில், இரவு வேளைகளில் அமர்ந்து நாட்குறிப்பு போல எழுதலாம் என்று தான் நினைத்தேன். எனது பயணத்தில் அப்படியான வாய்ப்பு நிகழவில்லை. ஒவ்வொரு நாழும் இரவுகள் நீண்டு சென்றன. எங்கே தாங்குவேன் எனும் உறுதி கடைசி கணம் வரை என்னிடம் இருக்கவில்லை.ஆகவே அது நடைபெறவில்லை.

ஆகவே உச்சி உடைத்து பெரும் விசையுடன் எழும் குருத்தோலை போல் எண்ணங்கள் வரிசையாக நின்றாலும் என்னால் அவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஊறி சுரந்து நிற்கும் பனம் பாளையை சீவி எடுக்கும் பக்குவத்துடன் 90 அத்தியாயங்களை எழுதினேன். இந்த நாட்கள் எனது வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் செலவிட்ட அற்புத தருணம்.

இம்முறை நான் பெற்ற வாசகர்கள் அனேகம். அதற்கு அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். அவர் தனது வலைத்தளத்தில் எனக்கு அளித்த ஊக்கமிகு வார்த்தைகள் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவரது வாசகர்களின் மின்னல் வேக வாசிப்பும், எதிர்வினையும் செயல்பாடு சார்ந்த ஊக்கமும் குறிப்பிடத்தகுந்தது. அகிலன் ஒரு சிறந்த விமர்சகராக என்னோடு பயணித்தார். பேராசிரியை லோகமாதேவி தொடர்ந்து தனது பதிவுகளை எழுதினார், திருச்சி டெய்சி அவர்கள் கிறிஸ்தவ பின்னணிய பார்வையை பதித்தது யாவும் என்னை சீர்தூக்கிப்பர்க்க உதவியது. குமரியைச் சார்ந்த சாகுல் ஹமீது அவரை எழுத்தின் வழியாக தான் அறிமுகம் செய்துகொண்டேன். சரவணன், இளங்கோ மற்றும் எனது தம்பியாக மாறிவிட்ட கதிர் முருகேசன் அனைவரும் ஜெயமோகன் அவர்களின் தொடர் வாசகர்கள். தொலைத் தொடர்பு கொண்டு ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்ளுகிறேன்.

பேராசிரியை லோகமாதேவி பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாக இருக்கிறார். அவர்களது மாணவர்களுக்கு பனை ஓலையில் சிறப்பு பயிற்சிகள் வழங்க அழைத்தார்கள். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் பதிவிட்டு 10 நட்களுக்குள் இது நிகழ்ந்தது. அந்த மாணவர்கள் இன்று வரை தொடர்ந்து ஓலைகளில் கலை பயிற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.

சொல்வனம் நான் தொடர்ந்து வாசிக்கும் இணைய பத்திரிகை. ஆனால் அதிலே எனது பயணத்தைக் குறித்து டி.கே. அகிலன் எழுதிய கட்டுரை, இலக்கியத்தில் எனது பங்களிப்பு சிறு அளவில் நிகழ்ந்திருக்கிறது என உறுதிப்படுத்தியது.

http://solvanam.com/?p=46155

எனது இரயில் பயணங்களில் கூட ஓலைகள் என்னுடன் வந்தன. அனேகருக்கு ஓலை சிலுவைகளை செய்து கொடுத்தேன். மிக எளிமையாக நான் ஆரம்பித்த ஒன்று அனேகருடைய உதவியினால் இன்று பனையைப் போல் உயர்ந்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்பொழுது, எனது அடுத்த கட்ட பயணத்திற்கு  நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். 18 நாட்களுக்குள் தமிழகத்தைச் சுற்றி வர  எண்ணுகிறேன். தமிழகம் பனை மரங்களால் சூழப்பட்ட ஒரு சோலைவனம். ஒரு மாலையாக வேலியாக அது தமிழகத்தை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே இனிமேல் நான் முனெடுக்கும் பயணம், தமிழகத்தின் எல்லைகளெங்கும் நிற்கும் பனை மரங்களை ஆவணப்படுத்துவதாக இருக்கும்.

தமிழகத்தில் பனை தொழிலாளருக்காக பணியாற்றுகின்ற தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், அரசியல்வாதிகள், களப்பணியாளர்கள், பனை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அரசு சார்ந்த, அரசு சாரா இடங்கள், பனை சார் வாழ்வை முன்னெடுக்கும் மனிதர்கள், மற்றும் பெண்களின் பங்களிப்பு போன்றவற்றை ஆவணப்படுத்தும் விதமாக பயணம் அமைக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 100 இரு சக்கர வாகங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு கவன ஈர்ப்பை செய்யலாம் என்று யோசிக்கிறேன்.

மிக ஆரம்பகட்ட நிலையில் இருக்கும் இப்பயண திட்டத்தில், பள்ளிகூட மாணவர்களை சந்திக்கவும், கல்லூரி மணவர்களை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன். பனை ஓலை சார்ந்த ஓவிய கண்காட்சி, பனை ஓலை பொருட்கள் கண்காட்சி, பனை மரம் சார்ந்த புகைப்பட கண்காட்சி போன்றவைகளையும் இப்பயணத்தின் அங்கமாக மாற்றிக்கொள்ள திட்டமிடுகிறேன். பனை ஓலைகள் வைக்கப்பட்டிருக்கும் மடங்கள், ஓலை குல்லாய்கள் வைக்கப்பட்டிருகும் மசூதிகள், என்னை அழைக்க சித்தமாயுள்ள தேவாலயங்கள் அனைத்தையும் சென்று தரிசிக்க சித்தமாயுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒத்துழைப்பு நல்கும் நண்பர்கள் கிடைக்க வேண்டிக்கோள்ளுங்கள்.

என்னோடு புகைப்படம் எடுக்கவும், ஆவண படம் எடுக்கவும் நண்பர்கள் இசைந்துள்ளர்கள். குறைந்த பட்சம் 10 இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து என்னுடன் வருவது, பனை சார் வாழ்வைக் குறித்த மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். நண்பர்கள் துவக்கம் முதல் கடைசி வரை வர இயலாது என்றால், அவரவர் மாவட்டங்களைக் கடக்கும்போது, எங்களுடன் ஒரு நாள் இணைந்து கொள்வது பெரும் பயன்களை விளைவிக்கும்.

இப்போது பனை மரச்சாலையை பதிப்பிக்க பதிப்பகங்களை தேடுகின்றேன். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: