பனைமர ஓலை -2


போராட்ட ஓலை

பனை மரம் இன்றும் ஒரு அழியா இடத்தை மக்கள் உள்ளத்தில் பெற்றிருக்கிறதை நாம் காண முடியும். ஏனெனில், நமது அகத்தினுள் சென்று தங்கிவிட்ட ஒரு மரம் அது. காலம் காலமாக நாம் அதன் பயனை பல்வேறு வகைகளில் அனுபவித்து, இன்று நினவுகளின் அடியாளத்தில் உறங்கும் ஒரு வீரிய விதையாக இருக்கிறது. சற்றே ஏற்படும் சிந்தனை மாற்றம், பனை சார்ந்த எண்ண ஓட்டங்கள், அவ்விதையை முளைத்தெளச் செய்யும். தமிழகத்தின் எப்பகுதிக்குக் சென்றாலும், பனை மரத்தைக் குறித்து 10 சொற்றொடர்களையாவது கூறத்தெரியாத ஒரு முதியவரைக் காணமுடியாது. வேறு எந்த மரம் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தது என எண்ணிப்பார்த்தால், வேறு எந்த மரமும் இதற்கு இணையாக காணப்படாது என்பது உறுதி. இதுவே பனைமரம் நமது வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கும் ஒரு வாய்மொழி கூற்றின் மிக முக்கிய தடயம். இத்தடயத்தை தொடர்ந்து நாம் செல்வோமென்றால் கண்டிப்பாக நம்மால் இழந்தவைகளை சற்றேனும் மீட்டெடுக்க இயலும்.

ஏன் இப்படி என எண்ணிப்பார்த்தால், பல்வேறு வகைகளில்  பனைமரம் மக்களுடைய வாழ்வில் ஒன்றாக கலந்திருந்தது. சுவை கூட்டும் இனிப்பு, கருப்பட்டியிலிருந்தே பெறப்பட்டது. பல்வேறு கட்டிட பணிகளுக்கும் கருப்படியினை ஊறவைத்த தண்ணீரைச் சுண்ணாம்புடன் கலந்தே உறுதியான கட்டிடங்களை கட்டியிருக்கின்றனர். தூண்களாக, கழிகோல்களாக, உத்திரங்களாக எங்கும் கிடைக்கும் பனை மரமே உதவியிருக்கிறது. கள் இல்லாத விழாக்கள் இல்லை எனும் அளவிற்கு கள்ளும் கலாச்சாரத்துடன் ஊறியிருந்திருக்கிறது. இவ்வகையில் ஓலையும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறதை நாம் மறுப்பதற்கில்லை.

ஓலைகள் பொதுவாக கூரை வேய பயன்பட்டன. பல்வேறு அரண்மனைகள் கூட தொல்பழங்காலத்தில் ஓலைகளால்  வேயப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். மாத்திரம் அல்ல, இன்று நாம் காணும் வேலிகள் யாவும் பனை மட்டையும் ஓலையும் கலந்து செய்வது போல நெடுங்காலமாக இவைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. எண்ணிப்பார்க்கையில் ஓலையில் செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்களின் அளவை சொல்லி முடியாது. குறிப்பாக பெரும்பாலான உணவு பொருட்களை சேமிக்க எடுத்துச் செல்ல ஓலையில் செய்யப்பட்ட பெட்டிகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். கிணற்றிலிருந்து  தண்ணீர் இறைப்பதற்கு “தோண்டி” போன்ற பட்டையில் செய்யப்பட்ட வாளியும், “காக்கட்டை” போல, கழுத்தில் குறுக்கே செல்லும் பனை மட்டையில் இருபுறமும் தொங்கும், பெரிய அலவிலான நீர் இறைக்கும் வாளியும், பயன்படுத்தப்பட்டன. ஆகவே, வீடு என்றாலும், உணவு என்றாலும், தண்ணீர் என்ராலும் ஓலைகள் மற்றும் பனை அவற்றுடன் இணைந்தே நினைவுகூறப்பட்டன.

மேலும் சிறுவர்களது வாழ்வில் நுங்கு வண்டி, ஓலை காத்தாடி, சாட்டை பிள்ளை என கூறப்படும் சிறிய அசையும் பொம்மை, ஓலை பந்து போன்றவைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே பெரியவர்கள் ஆனாலும் பனை சாந்த எண்ணங்கள்  மக்கள் மனதிலிருந்து அகலாமல் நிலைத்திருக்கிறது.

பனைத் தொழிலாளர்கள் செய்யும் குடுவை ஒரு சிறந்த ஆவணம் என்பதாக நான் கருதுகிறேன். சுரைக் குடுவைகள் போன்ற நீர் ஒழுகா பாத்திரங்கள் இயற்கையில் கிடைக்காத இடங்களில் மிகவும் கருத்தூன்றி செய்யப்பட்ட வடிவமைப்பு அது. இன்று காணும் பல்வேறு குடங்களுக்கும் அதுவே முன்னோடி என சொல்லும்படியாக கலை நயம் மற்றும் அறிவியல் நோக்கில் அத்தனை சாத்தியங்களையும்  கண்டடைந்த ஒரு சிறந்த வடிவமைப்பு.

வாழ்வில் ஓளியேற்றும் பண்டிகைக்கு அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ போதகர். பனை ஓலையில் வர்ணங்கள் இட்டு செய்த சுவர் ஓவியம். அளவு: A4

வாழ்வில் ஓளியேற்றும் பண்டிகைக்கு அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ போதகர். பனை ஓலையில் வர்ணங்கள் இட்டு செய்த சுவர் ஓவியம். அளவு: A4

ஓலைகளில் செய்யப்படும் பொருட்கள் இவ்விதமாக தமிழக இல்லங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த ஒரு காலம் உண்டு. அக்காலத்தில் பனை மரங்களை பேணினார்கள். இன்றையதினத்தில் பனை மரம் பயன்பாடு அற்ற மரம் எனவும், அவைகளை பயன்படுத்துவோர்கள் இல்லை என்ற கருத்தும் இணையாக பரப்பாப்படுகிறது. அப்படி ஒரு நிலையை உறுதிபடுத்திவிட்டால், தண்ணீரை, மண்னை, கடலை எப்படி கார்பரேட்டுகள் தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டார்களோ அது போல பனை மரத்தையும் எடுத்துக்கொள்ளுவார்கள். அதற்கு முன்பே நாம் விழித்துக்கொள்ளுவது நல்லது.

பனை ஓலைகளை நான் ஒரு போராட்ட வடிவமாக காண்கிறேன். பனைமரத்தை காக்க ஓலைகளே இன்று நமக்கு இருக்கும் இறுதி துருப்புச் சீட்டு. இச்சீட்டினை எப்படி அனைவரும் ஒருங்கிணைந்து பயன்படுத்தலாம் எனும் எண்ணத்திலேயே எனது நாட்களையும் முயற்சிகளையும் செலவிடுகிறேன். அப்பணியில் இணைபவர்களை பனை மரம் காக்கும் மாபெரும் பணியில் இணைத்து முன்செல்ல விரும்புகிறேன்.

ஏன் பனை ஓலை ஒரு போராட்ட வடிவம்? வேறு வடிவங்களில் போராடலாமே என எண்ணுபவர்களுக்கு, காந்தியின் சக்கரா போல பனை ஓலைக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என நான் கருதுகிறேன். வாழ்வின் பல்வேறு தருணங்களில், நாம் ஓலைகளை பயன் பாட்டிற்கு மீட்டுக் கொண்டு வர முடியும். சற்றே செலவேறினாலும், அவைகளை நாம் இன்று பயன்படுத்தினாலே ஆரோக்கியமான உணவுகளுக்கு வருங்காலத்தில் நமது சந்ததிகள் பனை மரத்தைச் சார்ந்திருக்க இயலும். என்னைப் பொறுத்தவரையில் மென்மையானவைகள் வெல்லுவது, ஆயுதம் நிறைந்த இவ்வுலகில் அமைதி வழி எனவும் அகிம்சை வழி எனவும் பொருள்படுகிறது.

எவ்வித போராட்டம் என்றாலும், அதற்கென அற்பணித்து,  நம்மை தயாரித்து,  உட்செல்லுவது மிக முக்கியமான வழிமுறை. பனை ஓலைகளை நாம் கையாள்வது அதனைக் குறித்த அடிப்படைப் புரிதல் கொண்டிருப்பதும் ஓலைப் போராட்டத்திற்கு அவசியமாகிறது. இன்றைய தினத்தில் நாமிருக்கும் இடங்களிலிருந்தே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்க இயலும். மிக மெல்லிய அளவில் ஒரு சிறு அதிர்வை எழுப்ப இயலும். அவ்வதிர்வு நம்மை பனைமரம் செழித்து வளரும் ஒரு காலகட்டதை காணச்செய்யும் எனும் உறுதி எனக்குள் தோன்றுகின்றது.

ஒருவேளை இவைகள் இன்று நகைப்புக்குரியதாக காணப்பட்டாலும் திருவள்ளுவர்  என் அருகில் இருக்கிறார். அவர் தனது ஓலைக் கிறுக்கல்கள் மூலம் என்னை புன்னகைக்க வைக்கிறார்.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

 

பெரியோர் ஆசியுடன் பனைமர ஓலை போராட்ட களம் புகுவோம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

Advertisements

3 பதில்கள் to “பனைமர ஓலை -2”

 1. Logamadevi Annadurai Says:

  அன்பின் காட்சன்
  நாங்களும் இணந்தே இருக்கின்றோம் இந்த பனைச்சாலையிலும் பின் இந்த பனையோலையிலும் நிறைய பேருக்கு இந்த தகவல்கள் சென்றடைய வேண்டும் அதுதான் இப்போதைக்கான முதல் முயற்சி. இந்த லின்க் சென்று பாருங்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தில்ல் எத்தனை பேர் தனக்கு பனையின் தேவை உள்ளதென்று சொல்லி இருக்கின்றனர்|!!!
  http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabafba9bcd-ba4bb0

  நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் பனைஓலைபெட்டிகளையும் பிற பனைஓலைப்பொருட்களையுமே பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும்

 2. Jayant Judilson (@Judilson) Says:

  “காக்கட்டை” makes me sing..

  country roads, take me home..to the place I belong….

 3. Jayant Judilson (@Judilson) Says:

  I am unable to see the next part..It will be good to have a table of contents kind of space, so that I can directly take that route.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: