பனைமர ஓலை – 3


ஏட்டோலை

ஓலை என்பது தகவல் பரிமாற்றத்திற்கான முறையாக இருந்தது பனை மரத்திற்கு மேலும் கூடுதல் சிறப்பை அளித்திருக்கிறது. எண்ணிப்பார்க்கையில், பனைமரம் இந்திய கல்வி மரபிற்கு முகிய அடித்தளமாக இருந்திருக்கிறது. ஓலைச் சுவடிகளில் உள்ளவைகளில் எத்தனை சதம் படிக்கப்பட்டிருக்கும் என்பதும் கெள்விக்குறியே. கல்வியோடு பனியோலையை தொடர்பு படுத்த இயலுமா? அப்படியானால் எப்படி மற்றும் எப்போதிருந்து? போன்ற கேள்விகள் நமக்கு முன்னால் நிற்கின்றன.

சமீபத்தில் பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார்  தமிழக பனைத்தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டதாக பத்திரிகைச் செய்திகள் வெளியாயின. அதே நேரம், மும்பை ரசாயனி பகுதியில் பீகாரிலிருந்து பனைத் தொழிலாளிகள் வருடம் தோரும் வருவதை அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே பீகாருக்கும் பனைக்கும் உள்ள தொடர்பை எண்ணிப்பார்க்கையில் வேறொரு கோணம்  திறந்து கொண்டது.

இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் ஓலைகளில் எழுதப்பட்ட புத்தகங்களை ஆய்ந்து ஆராய்ந்தவர் லக்னோவைச் சார்ந்த பத்மஷ்ரி டாக்டர் அகர்வால் அவர்கள். தொல்லியல் துறையின் மிக முகியமான ஆளுமையான அகர்வால் நமக்கு ஓலைகள் குறித்த அரிய கருத்துக்களைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் அவைகளை பேணவும் முயற்சி எடுத்தவர். ஓலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆசியாவின் வேறு பல பகுட்திகளிலும் கிடைத்ததை அவர் பதிவு செய்கிறார். ஓலைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்பது அவரது எண்ணம்.

மூன்றுவகையான பனை வகைகளில் இருந்து ஓலைகள் பெறப்பட்டு முற்காலங்களில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. குடப்பனை ஓலை அளவில் பெரியதும் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதாகவும் அகர்வால் குறிப்பிடுகிறார். குடப்பனை போன்ற மற்றொரு பனை வகை இன்று பங்களதேஷில் ஒன்று மட்டுமே உள்ளது. இவைகளோடு நமது பனை ஓலைகள் சார்ந்த புத்தகங்களும் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன.

பனை ஓலையின் பயன்பாடு எப்போதிலிருந்து துவங்குகிறது என்பதை அறியமுடியவில்லை எனக் கூறும் அகர்வால் பல்வேறு காலகட்டங்களில் பனை ஓலைகள் கிடைப்பதைக் குறித்தும் ஆச்சரியமான பல தகவல்களைக் கூறுகின்றார். குறிப்பாக ஏழாம் நுற்றாண்டு முதல் பனை ஓலைகளில் ஏழுதுகின்ற சிலைகள் காணப்படுகின்றதை அவர் அதற்கு சான்றாக சுட்டிக்காட்டுகிறார்.

புவனேஷ்வரில் உள்ல பரசுராமெஸ்வர ஆலயத்தில் இவ்விதம் காணப்படும் சிலையை சுட்டிக்காட்டுகின்றதைப் பார்க்கும்போது, கண்டிப்பாக தமிழக ஆலயங்களிலும் பனை ஓலை சார்ந்த சிலைகள் இருக்கும் என்பது உறுதி. அவைகளைப் பட்டியலிடுவதற்கு தன்னார்வலர்களின் உதவி அவசியமாகிறது. இன்று இத்துணை நுணுக்கமாக நாம் ஆய்வுகளை முன்னெடுக்காவிட்டால், ஓலைகளின் முக்கியத்துவம் குறித்து நமது எதிற்கால சந்ததிகளிடம் கூற நம்மிடம் எதுவும் இருக்காது.

சுமார் இரண்டாம் நுற்றாண்டைச் சார்ந்த ஓலை துணுக்குகள் மத்திய ஆசியாவிலிருந்து பெறப்பட்டதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தனி நபர் சேகரிப்பில் உள்ள நான்காம் நுற்றான்டு சுவடியும், ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்படும் ஆறாம் நூற்றாண்டு சுவடிகளையும் ஓலைகளின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.

இறையியல் கல்வி படிக்கையில் எங்களது  கிரேக்க ஆசிரியர் டேவிட் ஜாய் சவக்கடல் தோல்சுருள்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.  அதை குரித்து நான் ஒரு சிறு கட்டுரையும் எழுதினேன்.  1946- 56 முடிய சவக்கடல் பகுதிகளில் கானப்பட்ட கும்ரான் குகைகளில் பல தோல் சுருள்கள் கிடைக்கப்பெற்றன. அவைகள் புதிய ஏற்பாட்டு வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை கொண்டு வந்து சேர்த்தது. அது போல நமக்கு ஏதாவது ஓலைகள் அதிசயமாக கிடைக்காதா என்று கூட எண்ணியிருக்கிறேன். எப்படியிருந்தாலும் ஓலைகள் குறித்து நாம் பேசுகையில் அனேக காரியங்கள் குறித்த புரிதல்கள் நமக்கு சரியாக இல்லை என்பதே உண்மை.

சாயமேற்றிய ஓலைகளுடன் சாயமேற்றா இயற்கை ஓலைத் துண்டுகளையும் கலந்து செய்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை.

சாயமேற்றிய ஓலைகளுடன் சாயமேற்றா இயற்கை ஓலைத் துண்டுகளையும் கலந்து செய்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை.

முதலாவதாக ஓலைகளில் எழுதப்பட்ட புத்தகங்களின் வாழ்நாள் சுமார் 400 வருடங்கள் இருக்கும் என ஓரளவு யூகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலையின் காலத்தை நிர்ணயிக்கும் முறை இன்றுவரை சரியாக வளர்தெடுக்கப்படவில்லை. இவ்விதமாக இந்திய பண்பாட்டை அல்லது ஆசிய பண்பாட்டின் தனித்துவமான ஆய்வுகளில் சவால் விடும் பல்வேறு தளங்களை பனை மரமும் ஓலையும் கொண்டுள்ளது.

ஓலைகள் குறித்து ஆய்வு செய்த ரிச்சர்ட் சாலமன் என்பவர் குறிப்பிடும் கருத்து இன்னும் முக்கியமானது. அசோகரின் காலத்திற்கு முன்பே பனை ஓலைகளின் பயன்பாடு இருந்திருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்றும்,  ஒருவேளை அது மிக பரவலான ஒன்றாக இல்லாமல் இருந்தாலும் அரசு சார்ந்த ஆவணங்களுக்கும், கணக்கு வழக்குகளை எழுதி வைப்பதர்கும் பயன்பட்டிருக்கும் என யூகிக்கிறார். நமது மண்ணின் தட்பவெட்ப சூழலில் அத்துணை நெடுங்காலம் பனை ஓலைகள் காப்பாற்றபட இயலாது என்பதை ஒத்துக்கொள்ளும் அவர். அவைகள் இன்று சான்றாக நமக்கு இல்லை என்பதால் அவைகள் இல்லாமலாகிவிடுவதில்லை என்பதையும் அவர் தவறாது குறிப்பிடுகிறார்.

இவைகளே நிதிஷ் குமார் தமிழக பனைத் தொழிலாளிகளை பீகாருக்கு அழைத்த போது எனது எண்ணத்தை கிளர்ந்தெழச் செய்தது. ஆம் பீகாரில் தானே நளந்தா பல்கலைக் கழகம் செயல்பட்டது. அப்படியென்றால் அப்பல்கலைக்கழகத்தில் பயில வந்த மாணவர்களுக்குத் தேவையான நூல்கள் என்பது பனை ஓலையால் செய்யப்படிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதை நாம் புரிந்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. இன்று பீகாரில் காணப்படும் பனை மரங்கள் அவைகளையே சாட்சியாக கூறி நிற்கின்றன.

இன்றும் ஓலைகளுடன் நாம் செல்லும்போது பொது மக்களிடம் ஓலை என்பது கல்விக்கு அடையாளமாகவும், சமய நூலுக்கு இணையாகவும், காலாச்சாரத்தின் எச்சமாகவும், அன்றாட வாழ்வின் ஒரு துளியாகவும் மிக மதிப்புடன் போற்றப்படுவதற்கு காரணம், ஓலைகள் பல நூறாண்டுகளாக நமது மண்ணை ஒரு ஆன்மீக தலமாக, ஆறிவு செயல்பாட்டின் மைய விசையாக இருந்து செயலாற்றியிருப்பதனால் தான்.

ஓலைச் சுவடிகள் என்று மாத்திரம் அல்ல ஓலை என்றாலே ஒரு புனித பொருள், மங்கல பொருள் எனும் எண்ணம் நம்மில் படிந்து கிடக்கிறது. அவற்றை தூசி தட்டி, புத்தொளி ஊட்டி ஒரு புது ஓலை சமூகத்தை கட்டமைக்க நம்மை காலம் அழைக்கிறது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: