Archive for மார்ச், 2019

The Lent of the Palmyra Palm

மார்ச் 27, 2019

                                                                                                                    Translated by Rhoda Alex

https://www.thehindu.com/news/national/kerala/csi-for-a-green-lent-this- 

year/article26400775.ecehttps://www.csisynod.com/news_view.php?Id=5880  

The invitation of  the Moderator Thomas K.Oomen to  the Christian community of the Church of South India – ‘A Lenten call for a disposable plastic-free world’  is a remarkable and  progressive step by the Church. There is no doubt that this season of Lent is going to be a benchmark in penance observance methods – making  way for a huge environmental repentance, a change in the mode of our action and social involvement.  Since we are also near the celebration of Palm Sunday that coincides as a springtime festival – I would like to record the following and point the connection between Palm Sunday and Lent.

L1

Quoting the moderator – “As Christians, we need to consider the plastic catastrophe as a result of our ecological sin. It is a sin – a sin of irresponsibility, a sin of insensitivity, a sin of insensibility, and a sin of incorrigibility”. He requests each believer to make at least “10 green confessions” of sin against the environment. Is the church ready to accept the thoughts shared by the Moderator at this juncture remains a golden question. The church has  long since ignored the  blessing of enjoying the resources given by God and instead taken to enjoying life as it pleases themselves.  It is accepted now that this is  an easier way to live – in such times –  repentance every Sunday should not become a ritual but one that transcends into life beyond the premises of the church and is reflected in reality.  Talking only about ‘plastic’ and not talking about a lifestyle that shuns plastic is like an arrow that has missed its mark. As a Palmyra Palm activist, it is necessary for me to explain the  obstacles that arise in these cases and the work that is at hand.

DSC00301

Of all the seasons of the Church the Lenten Season is the one that is most affiliated  to the environment. These days coincide with the budding of new shoots and  are most suitable for us to take efforts that relate to the environment, to identify those people who are working in environmental projects and bring them to the forefront –  and in doing so we should also re-inspect our spiritual health.

L2

The Lent season begins with Ash Wednesday.  Traditionally – the holy ash is got from burning palm leaf crucifixes that were made the previous year.  Ash has a deep significance in the Bible. It is a symbol of not only that which is leftover but also of humility. It reminds us that those who are wearing ash are facing severely distressing situations in their life.  At the same time it condemns those who wear ash only superficially.  So, who are the real wearers of ash in today’s world? Many rural women still are coated with the ash of their stoves.  Is it not appropriate for us to remember those who still stand in front of giant stoves for three hours to process the palm jaggery syrup (akkani).  Will not it be meaningful if Ash Wednesday begins with a concern towards  these lives that are  consumed by ashes.

DSC00200

The culmination of the Lent Season begins with Palm Sunday.  It is also adopted by the church in a grand manner. The members of the church also show the world that they are in accordance with nature through their use of palm leaves during the Palm Sunday Procession. But, not even once in my life I have seen the church think about the Palm Tree Climbers who make the palm leaves available to the congregation to use during the procession. If we continue in this manner we would only pursue forgiveness for sins without the assurance year after year.

L3

A Palmyra tree climber lives every moment of his life in-tune with nature.  They consider the palm tree as their child, partner, mother and live in unison with it.  Their lives and actions are determined with a 50-50 working relationship with nature.   Their understanding is that they are part of nature. They encourage those who seek to live along with nature. They are wonderful environmentalists. They harbour within themselves the ability to prevent global warming. They are the best protectors of nature.  We have not thought about them at all. Though we have plenty to learn from them, they stand as those who were ‘ignored’ and ‘silenced’ in front of the church.

DSC09964

When the plastic ban was effected, people all over Tamilnadu came together beyond religion to promote palm leaf products.  Even a few churches came forward to do whatever work they could do. But that is not enough. The church has not done any research on around the Palmyra palm. It is an urgent need that the Church repents for its negligence of highlighting the many skilled workers and artisans sustained by the palm tree.  Only if it puts forward a society that leans on the palm can it meaningfully take up an alternate lifestyle without  plastic.

It is not only tradition, but in the history of the civilisation of mankind there is a un-severed link between the Palmyra palm tree and this earth.  Without self aggrandizing, without proclaiming itself as a boon in nature,  without any ego, without any sign or symbol, the palm tree continues to make the earth productive. If we as the church fail to understand this tree or the people who are sustained by it, we would only continue to commit a plastic-filled sinful life.  There would be no redemption from this insensitive life.

DSC00193

Our early churches were thatched structures of palm leaves and coconut leaves.  They are remembered still when churches celebrate their centenaries. However it is the bitter truth that they are not remembered in a way that the Israelites of the Bible commemorated the tent festival.  Today the practice of building churches with tall spires has permeated popular culture to such an extent that there are no more thatched structures at all.  Our churches are so concretised that a carpenters son would feel uneasy to enter them. If that is the case, then what is that the church offers a poor Palmyra tree climber?

DSC00128

Jesus’ journey to Jerusalem began in Bethany. Bethany means the ‘house of dates’.  Bethphage is adjacent to it. It means the ‘house of figs’. Both these villages were in the Mount of Olives – and so named because of the abundance of Olive trees.  Jesus chose a donkey usually kept for transporting the natural produce of these regions as his chosen vehicle of peace to make his journey. If Jesus had not made this  connect to the people of the land and its natural resources and conducted his journey, the church may not have marked it with great adoration till date.  So, while we are preparing ourselves to resist ‘plastic’ are we not indebted to analyse and uphold that which we need to adhere to.

DSC00279

The Palmyra tree climbers just do not just cut any ordinary palm leaves for the Palm Sunday celebrations – they choose the tender shoots.  These young leaves are a sign that the tree is taking steps  to grow and flourish. If these young shoots are plucked, the growth does take a setback. This is not only a disadvantage for the tree but also those Palmyra tree climbers whose livelihoods depend on the tree.  But  it is these young leaves that were chosen by the people of Bethany as offerings to be taken in front of Jesus’ procession. The cries of the people around, ‘Our lives are lost’, ‘our future is null’  resonate with the cry of ‘Hosannas’  as well as the rustling of the Palmyra shoots.

DSC00451

On the other hand, we can understand the essence of submission and offering from the point of view of the palmyra shoots:- my offering to God to the one who owns me needs to be prime, perfect, pure, akin to life, greater than life and aptly suitable.  Let us take a moment as to the character of the persons that makes such an offering. Does it not portray him as a worthy follower of God. He offers something that is beyond him.   And so,  there is no fear in submitting himself too. But such a persona has been still shoved and pushed out of Jerusalem – isnt this picture devastating for us.

DSC00479

Only after the palmyra leaves are mature, will the palmyra tree climbers venture to use the leaves for their needs. This knowledge has been handed down and practiced for thousands of years.  If only the Church did not stop using the palmyra leaves only to commemorate its holy days but continued to obtain leaves from the tree climbers – we would have been in this situation of seeking forgiveness from the environment.  Rather, the Palmyra tree climbers would have given us the assurance of forgiveness. Now, we have far removed them from our midst.

DSC00224

What can we do henceforth?  The pastors of the church should draft a policy.  They should invite the remaining Palmyra workers to church.  We need to co-relate them to the act of ‘washing the feet’ on Maundy Thursday and broaden our understanding of the incident.  Their feet that are full of scars,  cracked with hardened soles are powerful and capable of showing us in truth whom we are called to serve.  It will be apt to highlight these heroes who continue to labour so that we may live well.  Maybe this will help us to see and understand that  such lives and sacrifices  are superior to the Lenten penances .

During the Holy week,  the incident where Jesus comes in search of fruits is an important part chosen for meditation.  We learn from the incident that even the Fig tree has a season for fruiting. But the Palmyra Palm is one that bears ‘fruit’ always and we have failed to establish this. The tree is a continuous  source of produce -it gives Palmyra Juice or Padaneer for six months, Palmyra seeds or  Nongu for six months, Palmyra fruits for six months,  fleshy stems or Panangkizhangu for six months.  The leaves are good heat dissipaters are used in myraid ways by palm-leaf artisans to make ornamental and utility objects – although not used in the church anymore. How can the church shun the sin of plastic consumption if it even fails to honour palm-leaf artisans even while honouring other artisans.

DSC00197

Palmyra based foods are produced by the poor.  These are mostly also considered as the food of the poor.  In particular, the palm fruit is wasted greatly. Most palmyra trees are not considered as a ‘food source’.  Therefore they are wasted irresponsibly. If Jesus stands beneath a Palmyra Palm today with hunger, He would shed tears for the wasted palm fruits.  He would have said , “Oh Church, if you, even you, had only known on this day what would bring you peace–but now it is hidden from your eyes”.

DSC00122

It is unlikely that the Moderator knows about the Palmyra Palm.  But many in the Church of South India have lived lives that have been in relationship with these palms.  However since they have dismissed the relationship with the Palmyra as sin and consider themselves  superior as baptised and redeemed by plastic  –  they are still unable to repent the ‘sin of plastic’.  The Bible places a scene before us very clearly in the book of Revelation :- “ After this I looked, and behold, a great multitude that no one could number, from every nation, from all tribes and peoples and languages, standing before the throne and before the Lamb, clothed in white robes, with palm branches in their hands..” (Revelation 7:9).

DSC00441

This verse shows us the importance of holding aloft the palmyra leaves in our lives. To use these leaves meaningfully can be a true Lenten penance.  Otherwise all our sacrifices would just be deemed superficial not only by our Father in heaven buts also by the Palymra climbers atop the trees.

DSC00473

Rev. Godson Samuel

Midalakkaadu, Kanyakumari District

9080250653

malargodson@gmail.com

நானும் பனையும் சிட்டுக்குருவியும்

மார்ச் 22, 2019

 

உலக சிட்டுக்குருவிகள் தினம்   வருடம் தோறும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அடைக்கலான் குருவிகள் மற்றும் நகரத்தில் வாழும் பிற பறவைகளைக் குறித்த விழிப்புணர்வு மேலும் அவைகளின் எண்ணிக்கை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த விளிப்புணர்வு ஏற்படுத்த, மொகம்மது திலாவர் என்கிற சூழியலாளரால் ஏற்படுத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு உலகம் முழுவதும் பரவலாக சூழியலாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மிகச் சாதாரண அலுவலக உரையாடலில் இவ்வித ஒரு தினம் பிறந்திருந்தாலும், நம்மைச் சூழ இருக்கும் சூழியலை நாம் எவ்விதம் பொருட்படுத்தத் தவறுகிறோம் என்பதனை சுட்டிக்காட்டும் பொருட்டு 2010ஆம் ஆண்டு உலக சிட்டுக்குருவிகள் தினம் துவங்கப்பட்டது.

IBF

இவ்வருடம் புதுவையில் நடைபெற்ற உலக சிட்டுக்குருவிகள் தின நிகழ்வினை “உள்நாட்டு பல்லுயிர் அமைப்பு” ஒழுங்குசெய்திருந்தனர். சிறப்பு அழைப்பாழராக பல்வேறு சூழியலாளர்களுடன் என்னையும் அதன் நிறுவனர் ராம் அவர்கள் அழைத்திருந்தார்கள்.  வயதில் சிறியவன் என்றாலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை தான் ராம். சூழியல் சார்ந்த ஆழ்ந்த புரிதலும் செயல் ஊக்கமும் கொண்ட ராம், உடன் இணைந்தே இயங்கும் கிஷோர் ஆகிய இருவருக்கும்  நிகராக சூழியல் முன்னெடுப்புகள் செய்யும்  வேறே இளைஞர்களைக் நான் கண்டதில்லை. நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றதால் நான் கலந்துகொள்ளுவதா வேண்டாமா என்ற எண்ணமே முதலில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் முடிவெடுத்துவிட்டேன்…ஆராதனையை தவிர்த்தாலும் பரவாயில்லை, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுவது மிக முக்கியமானது என நான் உணர்ந்ததால், நிகழ்வில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன்.

IBF 5

கலந்துகொள்ள முடிவு செய்தபின், நான் யோசிக்க ஆரம்பித்தேன். சிட்டுக்குருவிகள் சார்ந்து நான் என்ன உரை அமைக்க வேண்டும்? அவைகளை நான் இதுவரை பனை சார்ந்து பெரிய அளவில் பதிவு செய்ததில்லையே? என எண்ணி அவைகள் சார்ந்து எனது இளவயது எண்ணங்களை ஒருமுகப்படுத்தினேன். நாங்கள் சிறுவயதில் இருந்த வீடுகளோ அல்லது பழங்கால ஆலயங்களோ அனைத்துமே, சிட்டுக்குருவிகள் வந்து தங்கும் வசதியுள்ள பனை கழிகோல்களாலான அமைப்புகள் தான். இவ்வித வீடுகளில் சுவற்றிற்கும் ஓடுகள் இணையும் இடத்திற்கும் நடுவில் இவைகள் வந்து கூடு கட்டிக்கொள்ளும். மனிதன் வாழும் இடங்களில் வெகு விருப்புடன் வாழும் இவைகளின் உளவியல் மிக முக்கியமானது. சிட்டுக்குருவிகளை அறிந்து பாதுகாப்பது மனிதனின் வாழ்கை நோக்கையும் நாம் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என்றே கருதுகிறேன். மேலும் சிட்டுக்குருவிகளை அடைக்கலான் குருவிகள் என்றே நமது முன்னோர் அழைத்திருக்கிறார்கள். அது மனிதனை அடைக்கலம் தேடி வருவதாலும், மனிதன் அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய கடமை உள்ளவன் என்பதாலும் சிட்டுக்குருவிகளுக்கு “அடைக்கலான் குருவி” என்ற பொருள் பொதிந்த காரணப் பெயரினைச் சூட்டியிருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு செல்லுவதற்கு சற்று முன்பே எனக்கு அந்த யோசனை வந்தது. சிட்டுக்குருவிகள் வந்து அமர ஏற்ற ஒரு பனையோலைக்கூட்டினைச் செய்தால் எப்படி இருக்கும்? உடனடியாக நான் கண்ணனை அழைத்தேன். மூன்று முக்கு பெட்டியினைச் செய்யும் மொட்டவிளையைச் சார்ந்த செல்லையா அவர்களின் மகன் தான் கண்ணன். நான் அவர்களை அழைத்தபோது மதியம் ஒரு மணி இருக்கும். மாலை நான்கரை மணிக்குள் எனக்கு ஒரு கூடு கிடைக்குமா என்றேன். நான் இப்போது வீடு நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் ஆனால் நான்கு மணிக்குள் கிடைப்பது சந்தேகமே என்றார். நான் எனது எதிர்பார்ப்புகளைக் கூறிவிட்டு, எனது பயணத்திற்கான ஒழுங்குகளில் மூழ்கிவிட்டேன்.

நான் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது… கூடு செய்யும் கடுமையான வேலையில் செல்லையா அவர்களது மனைவி மற்றுமொரு மகன் ஈடுபட்டிருந்தார்கள். மதிய ஓய்வைத் தவிர்த்து, அவர்கள் எனக்காக இயங்கிக்கொண்டிருந்தார்கள். எனது எண்ணத்தை வடிவமாக்குவதில் உள்ள சிக்கல்களை எனக்கு எடுத்துக்கூறி புரியவைத்தார்கள். ஆனால் அந்த சவால் அவர்களுக்குப் பிடித்திருந்தது. நான் அங்கேயே ஆறரை மணி வரை இருந்து அவர்கள் முடித்துக்கொடுத்த அந்த அழகிய பனையோலைக் கூட்டினை எடுத்துக்கொண்டுதான் பாண்டிச்சேரி சென்றேன். எனக்கு சிட்டுக்குருவிக்கூடு எப்படி அமைக்கவேண்டும் என அப்போது தெரியாது.

IBF 6

சிட்டுக்குருவி கூடு அசையாத இடத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும், அது வந்து தனது கூட்டினை எட்டிப்பார்க்க அதன் நுழை வாயிலின் அருகில் ஒரு கம்பு அசையாத உறுதியுடன் இருக்கவேண்டும். எலி, அணில் மற்றும் பூனை போன்ற எதிரிகள் வந்து ஆபத்து ஏற்படுத்தாத வகையில் இருக்கவேண்டும் என்பது போன்ற பல தகவல்களை பாண்டிச்சேரி சென்றபின்பே நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் பனையோலையில் செய்யப்பட்ட மிக அழகிய ஒரு கூடாகவே திரு. செல்லையா அவர்கள் அமைத்துத் தந்தது இருந்தது. தேவையான இணைப்புகளை பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரச்சனை என்னவென்றால், இன்றைய நமது வாழ்கை முறை, அடைக்கலான் குருவிகளுக்கு அடைக்கலம் நல்காத ஒரு நிலையில் இருக்கிறது. நமது வீடுகளில் குருவிகள் வந்து தங்கும் இடங்கள் கிடையாது, அப்படியே நாம் நமது பழைமையான ஆலயங்களையும் இடித்து மாபெரும் கோபுரங்கள் அமைக்கிறவர்களாக மாறிவிட்டோம். திருச்சபை தன்னை இயற்கையின் அங்கமாக மாற்றிக்கொள்ளும் வடிவமைப்புகள் ஏற்படுவது சிறப்பானது என்றே கருதுகிறேன். ஒருவகையில் அவ்வித எண்ணங்கள் நமது இயற்கைச் சார்ந்த எண்ணங்களை பெருமளவில் மாற்றும், நமது சூழியலை மிகச்சிறப்பாக முன்னெடுக்கும்.

IBF4

சிறு தானியங்கள் மற்றும் சிறு பூச்சிகளை விரும்பி உண்ணும் அனைத்தையுமே எபிரேய மொழியில் “ட்ஸிப்போர்” என திருமறையில் பதிவுசெய்கின்றனர். அதே போல கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு பகுதிகளிலும்  இதனை “ஸ்தோதிரியான்” என பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமறையில் இவைகள் குறிப்பிடப்படுவதற்கான காரணம் இக்குருவிகள் ஆன்மீகத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதற்கான அடிப்படை எனக் கொள்ளலாம்.

வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! (மத்தேயு 6: 26 திருவிவிலியம்) மனிதர்கள் தங்கள் வாழ்வைக்குறித்து கவலைக்கொள்ளும்பொழுது, இயேசு நம்பிக்கையின் அடையாளமாக இவ்வார்த்தைகளை முன்மொழிகிறார். மனிதன் என்னதான் விதைத்து அறுத்து களஞ்சியத்தில் சேர்த்து வைத்தாலும், அது பறவைகளின் அனுதின வாழ்வோடு பொருத்திப்பார்க்கையில், பறவைகள் சிறப்பானவைகளாக காணப்படுகின்றன. மனிதன் தனக்கு கடவுள் அருளியிருக்கும் சிறப்புகளை பறவைகளின் அளவு கூட உணர்ந்துகொள்ளவில்லை என்பது இயேசுவின் மலைப்பிரசங்க வரிகளிலிருந்து நமக்கு கிடைக்கின்றது.

IBF3

சிட்டுக்குருவிகள் சார்ந்த பதிவுகள், ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள், அவர்கள் புரிதல்கள், அவர்களின் விவசாயம் போன்றவற்றை நமக்கு புரியும்படியாக எடுத்துச் சொல்லுகின்றது. குறிப்பாக சிட்டுக்குருவிகள் சார்ந்த பதிவுகள், பறவைச் சார்ந்த நமது முன்னோர்கள் கொண்டிருந்த புரிதல்களை நமக்கு எடுத்துக்கூறுகிறது. அவைகள் சார்ந்திருந்த நிலப்பரப்பு, வாழிடம், உணவுபழக்கவழக்கங்கள், மனிதர் முன்னெடுக்கும் விவசாய முயற்சிகளில் அவைகள் தன்னார்வத்துடன் கலந்துகொள்ளும் தன்மை போன்றவற்றை நாம் ஆழ்ந்து நோக்குவதற்கு இவைகள் பேருதவியாக இருக்கின்றன.

தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார். மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்; உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும் இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்;  தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார். (லேவியர் 14: 4 – 7)

தொழுநோயால் தீட்டாகிப்போன மனிதரின் தீட்டு நீங்க செய்யும் இந்த பகுதி, மிக ஆழமாக நோக்கப்படவேண்டியது. சிட்டுக்குருவிகள் என்ன பாவம் செய்தன என எண்ணியிருப்போருக்கு இவ்வித சடங்குகள் அக்கால சூழலை பிரதிபலிப்பதாகவும், அக்காலச் சூழலை மனதில் கொண்டு கட்டமைக்கப்பட்டதாக உணர்ந்துகொள்ளத்தக்க பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. சிட்டுக்குருவிகளின் பெருக்கம், ஏற்படுத்திய ஒரு விவசாய காலகட்டத்தில், அவைகளை பயமுறுத்தும்படியாக ஒன்றை கொன்று மற்றொன்றை விடுவிக்கும் இந்த மரபு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பெருகுகின்ற அனைத்தையுமே ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர மனித மனம் ஏற்படுத்திய வழிமுறைகளே இவைகள். அவைகள் என்றைக்குமான நீடிய கட்டளைகள் அல்ல.

IBF2

கடவுள் இவ்வித பலிகளை விரும்புகிறவர் அல்ல என்பதனை “கடவுளே! எனது மீட்பின் கடவுளே!  இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;  அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;  அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. “(திருப்பாடல்கள் 51: 14 – 17, திருவிவிலியம்) என திருப்பாடல் ஆசிரியர் தெளிவுறக் காண்பிக்கிறார்.

“பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்”, என அனைத்தையும் அறிந்த சாலமோன் ஞானி தனது நீதிமொழிகளில் எழுதி வைத்திருக்கிறார். இவ்வித எண்ணங்கள் மனிதன் மேம்படவேண்டி எப்படி இறைமக்கள் செயல் பட்டனர் என்பதை நமக்கு உணர்த்தும்.

சிட்டுக்குருவிகள் மனிதன் உண்ட சிறு தானியங்களை உண்டு, வயலில் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழுகின்ற பறவைக்கூட்டமாக இருந்திருக்கின்றன. இப்பறவைகள் தங்கள் சிறிய வாயால் எவற்றை கவ்வி சாப்பிடுகின்றன என்கிற நுண்மையை கண்டடைந்ததே மனித வாழ்வில் மிகப்பெரிய உணவு சார்ந்த  திருப்புமுனையாக இருந்திருக்கின்றன. பறவைகளை கூண்டில் அடைக்காதபடி அவைகள் தங்களைச் சூழ இருக்கும்படியான ஒரு அமைப்பை ஆதி மனம் விரும்பியிருக்கிறது எனும் எண்ணமே பெரும் கிளர்ச்சியினைத் தருகின்றது. ஆகவே ஆதி காலத்தில் மனிதனுக்கும் சிட்டுக்குருவிகளுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவும், அந்தரங்கமானதாகவும் இருந்திருக்கிறது.

காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.  மத்தேயு 10 திருவிவிலியம் (மத்தேயு 10: 29 – 31)

காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.  மத்தேயு 10 திருவிவிலியம் (மத்தேயு 10: 29 – 31) இயேசுவின் இந்த கூற்று மிக அழுத்தமானது. பலிகளுக்காக சுற்றிலுமிருந்து எருசலேம் தேவாலயம் கொண்டுவரப்பட்ட சிட்டுக்குருவிகள் ஏழைகள் பலிசெலுத்தும் ஒன்றாக இருந்தது. அன்றைய காசுகளிலேயே மிகவும் குறைந்த ஒரு காசிற்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டன எனப் பார்க்கையில், அவைகள் பொருளியல் ரீதியாக கூட மிகவும் குறைந்த மதிப்பையே பெற்றிருந்தன எனப் பார்க்கிறோம். மனிதர்கள் முன்னிலையில் மதிப்பிழந்திருந்த இந்த குருவியினை கடவுள் மிக அருமையாக பாதுகாக்கிறார் என்ற உண்மையினை இந்த வசனம் வெளிப்படுத்துகின்றது.

இச்சூழலை மனதிற்கொண்டு திருச்சபையும் ஒரு முன்னெடுப்பினை நிகழ்த்துவது அவசியமாகின்றது. அந்த முன்னெடுப்பு ஒரு பரந்து விரிந்த பார்வை நோக்கி நம்மை வழிநடத்தும். குறிப்பாக நமது உணவுகள் பகிர்ந்து உண்ணப்படவேண்டியவைகள் என்பதும், அப்பகிர்தலானது நமது உணவு உற்பத்தியில்  நமக்கு உதவி செய்த சிட்டுக்குருவிகளையும் உள்ளடக்கியதாக இருப்பது சரியானதாக இருக்கும். அவ்விதமாகவே நாம் நம்மை முழுமையாக இறையடியவராக முன்னிறுத்த இயலும்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆரண்யாவைச் சார்ந்த சரவணன் கூறிய கூற்று, எனக்கு பெரிய திறப்பைக் கொடுத்தது. முற்காலங்களில் நமது பெரும்பாலான உணவு சார்ந்த பழக்கவழக்கங்கள் வீட்டிற்கு வெளியே நடைபெற்றன. மாவரைக்கும் போதும், திருகையில் இட்டு அரைக்கும்போதும், உரலில் இட்டு இடிக்கின்ற துணுக்கைகள் சிதறும்போதும், உண்ட பாத்திரங்களை வெளியே கழுவும்போதும், உணவுகள் வெயிலில் பதப்படத்தும்போதும், அறுவடையின்போதும், கிடைக்கின்ற உணவுகளைத் தேடி பல்லாயிரக்கணக்கான ஜீவன்கள் நம்மைச் சூழ இருந்தன. ஆனால் இன்று, நாம் “தொல்லை” தரும் உயிரினங்களை கட்டுப்படுத்தும் நிறுவனங்களை சார்ந்து வாழுகிறோம். சிறு உயிரினங்கள் கூட நம்மைச் சார்ந்து வாழ்ந்துவிடக்கூடாது என்பது எவ்வைகையில் தன்னிறைவாக கொள்ளப்படும்? அது கஞ்சத்தனத்தின் உச்சமில்லையா?

IBF1

காகங்களைக் கொண்டு ஆண்டவர் தீர்க்கர் எலியாவைக் காப்பாற்றுகிறார். நமக்கு அது மாபெரும் விந்தையான செய்தி! ஆனால் நாம் நம்மைச் சார்ந்து இருக்கும் உயிரினங்களுக்கு செய்வது என்ன? ஏன் நமது ஆன்மீகம் “ஆன்ம பாரம்” கொண்டு படுக்கையில் கிடக்கின்றது? காரணம், தனி மனிதனை இப்பிரபஞ்சத்திலிருந்து அப்புறப்படுத்தி அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சேர்க்கும் மிக இழிந்த நிலைக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டதால்தான்.

இயேசு ஒருமுறை தம்மிடம் ஓய்வுநாள் குறித்து கேள்வி எழுப்பியபோது இவ்விதமாக பதிலிறுத்தார்

“உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? (மத்தேயு 12: 11 திருவிவிலியம்)

“உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.(லூக்கா 14: 5 திருவிவிலியம் )

“வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ? (லூக்கா 13: 15 திருவிவிலியம் ) ஆகிய வசனங்கள் ஓய்வுநாளின் முழுமையை பறைசாற்றுகின்றது.

நமது ஓய்வுநாள்களின் வழிபாடு மேலோட்டமாகவே இருக்கிறது. பரவச நிலையும் அல்ல, பாரம்பரிய முறையும் அல்ல, ஒரு தொழுகை நம்மை படைத்து காத்து வழிநடத்தும் இறைவனோடு இயங்கச் செய்யவில்லையென்று சொன்னால், நாம் விரிவடையாமல் சுருங்கிப்போய்விடுவோம். இயேசு கற்பித்த பறவைகளின் உவமையோ, விதைக்கிறவன் உவமையோ, திராட்சைத் தோட்டத்தின் புரிதலோ நமக்கு இராது.

சிட்டுக்குருவிகள் இயேசுவின் வாழ்வோடு ஒன்றியவை. நமது ஆன்மீகத்தின் வெளிப்படையான சிறகடிப்பு அவை. அவைகளின் குரல்களே நமது இசைவழிபாடு. அவைகளுடன் நாம் பகிர்தலே நமது ஐக்கிய விருந்து. அவைகளுடன் இணைந்து வாழ்தலே இறைவனுக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த வழிபாடு.  அவைகளின் இறப்பு நமது ஆன்மீக வாழ்வின் தோல்வி.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

malargodson@gmail.com

பனை தவக்காலம்

மார்ச் 7, 2019

https://www.thehindu.com/news/national/kerala/csi-for-a-green-lent-this-year/article26400775.ece

https://www.csisynod.com/news_view.php?Id=5880

L1

தென் இந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தாமாஸ் கெ. உம்மன் நெகிழி இல்லா பசுமையான தவக்காலத்தை கைக்கொள்ள திருச்சபையினருக்கு அழைப்பு விடுத்திருப்பது திருச்சபையில் ஏற்பட்டிருக்கும் மிகவும் சிறப்பான ஒரு முன்நகர்வு. இந்த தவக்காலம் ஒரு மாபெரும் சூழியல் மனம்திரும்புதலையும், செயலளவிலான ஒரு மாற்றத்தையும், சமூக பங்களிப்பினையும், முன்னுதாரண நோன்பையும் வலியுறுத்தும் என்பதில் ஐயமில்லை. இவ்விதமான ஒரு சூழலில் நாம் தவக்காலத்தை நெருங்கும்போது வசந்த கால பண்டிகையான குருத்தோலை பெருநாள் வெகு அருகில் இருப்பதால் இரண்டினையும் தொடர்புபடுத்தலாமே என்கிற எண்ணத்திலேயே இவைகளை பதிவு செய்கிறேன்.

L2

“நெகிழி சார்ந்து ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடருக்கு கிறிஸ்தவர்களாகிய நம்முடைய சூழியல் பாவங்களே முக்கியம். அது பொறுப்பின்மையால் ஏற்படுகின்ற பாவம், மதியின்மையால் ஏற்படுகின்ற பாவம், உதறித்தள்ளாத பாவமும் கூட” என அவர் கூறுகிறார். பற்றாளர்களை  அழைத்து குறைந்த பட்சம் 10 “பசுமை பாவ அறிக்கைகளை” யாவது கூற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

இப்போது,  பிரதம பேராயரின் கூற்றினை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு சூழலில் திருச்சபை இருகிறதா என்பது ஒரு பொற் கேள்வி. திருச்சபை கடவுளின் கொடைகளை அனுபவிக்கும் பேற்றினை விட்டு விட்டு தங்கள் எண்ணம் போல் வாழ்வதில் இன்பம் கண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்வது தான் எளிதாக இருக்கிறது எனும் உணர்வு  ஊடுருவிப்பாய்ந்திருக்கும் சூழலில், வழக்கமான ஞாயிறு வழிபாட்டின்போது பாவமன்னிப்பு கோரும் வழமைபோல் ஒன்றாகிவிடக்கூடாது என்றும், வழிபாட்டிடங்களை கடந்து வாழ்வில் பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருப்பது அவசியம். நெகிழிக்கு மாற்றாக அமையும் வாழ்வுமுறை குறித்து பேசாமல், நெகிழியினை மட்டும் குறித்து பேசுவது, குறிதப்பிய அம்பாகவே இருக்கும். இச்சூழலில் எழுகின்ற இடர்கள், மற்றும் நாம் செய்யவேண்டிய பணிகள் என்ன என்பதை பனை போராளி என்ற முறையில் நான் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

DSC00122

திருச்சபையின் எச்சூழலை விடவும் தவக்காலம் என்பது சூழியலோடு ஒன்றிணைந்தது காணப்படுகின்ற ஒன்று. இலையுதிர்ந்து புது தளிர்கள் வரும் காலத்தை சுட்டும் இந்த நாட்கள், உண்மையிலேயே நமது சூழியலை அவதானிக்கவும், சூழியல் சார்ந்த முன்னெடுப்புகளை முனைந்து எடுக்கவும்,  சூழியல் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மக்களை இனங்கண்டுகொள்ளவும், அவர்களை முன்னிறுத்தவும், அதன் வழி நின்று நமது ஆன்மீக செயல்பாடுகளை மீள் பரிசீலனைச் செய்யவும் மிகச் சிறந்த நாட்களாக நமக்கு அருளப்பட்டிருக்கிறது.

DSC00197

தவக்காலம் சாம்பல் புதனிலிருந்து துவங்குகிறது. மரபாக  பனை ஓலைகளிலிருந்து செய்த சிலுவைகளை எரித்து  திருச்சாம்பலை பெறுவது வழக்கம்.  சாம்பல், திருமறையில் மிக ஆழ்ந்த பொருளமைந்த ஒன்றாக முன்னிறுத்தப்படுகின்றது. எஞ்சியது என்பது மட்டுமல்ல எளிமையினையும் முன்னிறுத்துவதாக அது காணப்படுகின்றது. சாம்பல் பூசிக்கொள்ளுபவர் மிக மிக கடினமான ஒரு வாழ்கைச் சூழலை கடந்துகொண்டிருக்கிறார் என அது அறிவுறுத்துகின்றது. அதே நேரம் சாம்பல் பூசி தங்களை உலக மகா நடிகர்கள் எனக் கூறுபவர்களையும் திருமறை கண்டிக்கிறது. இப்படியிருக்க, இன்று சாம்பல் பூசிக்கொள்பவர்கள் யார்? கிராமப்புற பெண்களில் அனேகர் இன்றும் சாம்பலுடனே தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். இன்றும் அடுப்படியில் நின்று மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக சாம்பல் தங்கள் மேல் பறந்து விழ, வேகாத வெம்மையில் உழன்றுகொண்டிருக்கும், அக்கானி காய்ச்சும் பெண்கள் இந்த தவக்காலத்தில் நினைக்கப்பட்டிருக்க வேண்டுமில்லையா? சாம்பலில் உழன்றுகொண்டிருக்கும் இவ்வித மக்களின் வாழ்வு சார்ந்து நமது திருச்சபையின் தவக்காலம் துவங்குவதே பொருள் நிறைந்த சாம்பல் புதனாக இருக்கும். சாம்பலில் உழல்வோர் வாழ்வில் நாமும் பங்கெடுத்துக்கொள்ளுவது, அதன் மூலம் நமது நமது பற்றுறுதியினை முன்னெடுத்துத்துச் செல்லுவது மிக முக்கிய தேவையாக இருக்கிறது .

C6

தவக்காலத்தின் உக்கிரமான தருணங்கள் குருத்தோலை ஞாயிறு முதல் துவங்குகின்றது. ஆம் குருத்தோலை ஞாயிறு நம்மால் வெகு விமரிசையாக முன்னெடுக்கப்படும் ஒரு சிறந்த நாள் தான். திருச்சபை மக்கள் தாங்கள் இயற்கையோடு இயைந்தவர்கள் என பறைசாற்றும் விதமாக பவனி செல்லுகின்ற அந்த நாள் நான் பெரிதும் விரும்புகின்ற திருச்சபையின் பண்டிகை. ஆனால் எனது வாழ்வில் ஒருமுறைக்கூட, திருச்சபை தங்களுக்காக ஓலைகளை பெற்றுக்கொடுத்த பனையேறிகளை கருத்தில் கொண்டது கிடையாது. தனது ஒட்டுமொத்த தென்னிந்திய திருச்சபை வரலாற்றில் பனையேறிகளுக்கான பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்ட ஒரு தருணம் கூட கிடையாது. இப்படி இருந்தால் நாம் பாவங்களைத் தான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்குமே அன்றி ஒருபோதும் பாவமன்னிப்பின் உறுதியினைப் பெற்றுக்கொள்ள இயலாது.

L3

பனையேறிகள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இயற்கையோடு வாழ்பவர்கள். பனை எனும் மரத்தினை தங்கள் குழந்தையாக, துணையாக, தாயாக, உறவாக நினைத்து கட்டி அணைத்து வாழ்பவர்கள். தன்னில் சரிபாதியாக இயற்கையை உணர்ந்து செயலாற்றுபவர்கள். தானும் இயற்கையின் அங்கம் எனும் புரிதலைக் கொண்டுள்ளவர்கள். இயற்கையோடு வாழ விரும்பும் மக்களை ஊக்குவிப்பவர்கள். மிகச் சிறந்த சூழியலாலர்கள். இந்த புவி வெப்பமயமாகாமல் தடுக்கும் பேராற்றல் கொண்டவர்கள். இவர்கள் தான் மிகச் சிறந்த இயற்கை பாதுகாவலர்கள். நாம் அவர்களை எண்ணாமற் போனோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள அனேகம் இருந்தும் அவர்கள் அசட்டைப்பண்ணப்பட்டவர்களாக இன்றைய திருச்சபையின் முன்னால் பேச்சிழந்து நிற்கின்றார்கள்.

DSC09964

தமிழகம் முழுவதும் நெகிழி எதிர்ப்பு குறித்து பேசப்பட்டபோது, பனை சார்ந்த பொருட்களை முன்னெடுக்க சமயங்களைக் கடந்து அனேகர் முன்வந்தனர். சில திருச்சபைகளும் கூட, தங்களால் இயன்ற பணிகளைச் செய்தனர். ஆனால் அது போதுமா என்றால் இல்லை. திருச்சபை தன்னளவில் பனை சார்ந்து எவ்வித களப்பணியும் ஆற்றவில்லை. தன்னிடம் பனை சார்ந்து இயங்கும் பேராற்றல் மிக்க மக்கள் அனேகம் இருந்தாலும், அவர்களை முன்னிறுத்த தவறிய ஒரு பெரும்பிழையுணர்தலே இன்றைய அவசிய தேவை. பனை சார்ந்த சமூகத்தினை திருச்சபை முன்னிறுத்தினாலே, நகிழிக்கு மாற்றான ஒரு வாழ்வியலை நாம் பொருளுள்ளதாக முன்னெடுக்க இயலும்.

DSC00193

பாரம்பரியமாக மட்டுமல்ல, மனித நாகரீகத்தில் இன்றும் அறுபடாத ஒரு தொடர்பு பனை மரங்களுக்கும் இந்த பூமிக்கும் இருக்கிறது. தன்னை பிரதானப்படுத்திக்கொள்ளாமல், இயற்கையின் வரமாக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளாமல், தன்னைக் குறித்து மேன்மைப்பாராட்டும் ஒன்றாக அல்லாமல், எந்த சுவடும் இன்றி, இந்த பூமியை வளப்படுத்திவரும் ஒரு மரத்தினை, அது சார்ந்து வாழும் மனிதர்ளைக் குறித்த புரிதல் திருச்சபையில் இல்லையென்று சொன்னால், நெகிழி சார்ந்த பாவத்தை நாம் தொடர்ந்துகொண்டுதானிருப்போம்.  அதிலிருந்து நமக்கு மீட்பு இருக்காது.

DSC00224

நமது ஆரம்ப கால திருச்சபைகள் பனை ஓலைகள் மற்றும் தென்னை ஓலைகளாலேயே வேயப்பட்டிருந்தன. இன்றும் நூறாண்டுகள் கடந்த திருச்சபைகள் அவற்றை நினைவுகூறுவது உண்டு. ஆனால் அந்த நினைவுகூறல், எப்படி இஸ்ரவேலர்களுக்கு கூடாரப்பண்டிகை என்பது முக்கியமோ அது போல நினைவுகூறப்படுவதில்லை என்பது தான் கசப்பான உண்மை. இன்று ஓலையில் வேயப்பட்ட திருச்சபைகளே இல்லாத அளவிற்கு கோபுரங்களைக் கட்டும் கலாச்சாரம் உள்நுழைந்திருக்கிறது. தச்சன் மகன் உள்நுழைய கூசுமளவிற்கு காங்கிரீட் பரப்பிவிட்டிருக்கிறோம். அப்படியென்றால் எழைப் பனையேறிகளுக்கு இன்று திருச்சபை வைத்திருப்பது என்ன?

DSC00451

இயேசுவின் எருசலேம் பயணம், பெத்தானியாவிலிருந்து துவங்கியது. பெத்தானியா என்றால் பேரீச்சைகளின் வீடு என்று பொருள். அதை ஒட்டியே பெத்பகே. அத்திக்காய்களின் வீடு என்று பொருள். இவ்விரு கிராமமும் இருக்கும் இடம் ஒலிவ மலை. ஒலிவ மரங்களின் திரட்சியால் அவ்விடத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது. இவ்வித இயற்கைப் பொருட்களை விளைவிக்கும் கிராம மக்கள் அனைவரும் தங்கள் பொருட்களை ஏற்றிச் செல்ல வைக்கப்பட்டிருந்த கழுதைகளுள் ஒன்றையே இயேசு தனது சமாதான வாகனமாக தெரிந்துகொண்டார். இயற்கைச் சார்ந்து வாழுகின்ற மக்களை ஒன்றிணைக்காமல் அவர்கள் வாழ்வோடு ஒன்றாமல் அவரது எருசலேம் பயணம் நிகழ்த்திருந்தால் திருச்சபை கூட அதனை இத்துணை உக்கிரமாக இதுநாள் வரைக்கும் நினைவு கொண்டிருக்காது. நாம் இன்று நெகிழியினை எதிர்த்து நிற்க ஆயத்தமாகின்ற சூழலில் எவருடன் இணைதல் ஏற்புடையது என்பதனையும் சீர்தூக்கிப் பார்க்க கடன் பட்டவர்கள் இல்லையா?

DSC00480

குருத்தோலைப் பண்டிக்கைக்கு என  பனையேறிகள் பனை மரத்திலிருந்து  நமக்கு எடுத்துக் கொடுக்கும் ஓலைகள் “ஏதோ ஓலைகள்” அல்ல, அவைகள் குருத்தோலைகள். ஒரு மரம் தன்னை வளர்ச்சி நோக்கி முன்னெடுக்கும் அடையாளத்தின் ஒரு கீற்று. அந்தக் ஓலை அகற்றப்பட்டால் அதன் வளர்ச்சி தொய்வுறும். அதன் தொய்வு, அது சார்ந்து வாழும் மனிதர்களுக்கு பேரிழப்பு. ஆனால் ,இவைகளே பெத்தானியாவில் இருந்து புறப்பட்டவர்கள் இயேசுவுக்கு முன் எடுத்து சென்ற உன்னதமான அற்பணிப்புள்ள காணிக்கைகள். எங்கள் வாழ்வு பாழ்பட்டு கிடக்கிறது, எங்கள் எதிர்காலம் அற்றுப்போய்விட்டது என்ற கதறலே, ஓசன்னா என்ற ஒலியுடன் ஓலைகளின் சலசலப்பு ஓலிகளும் இணைந்தே அன்று பதிவுசெய்யப்பட்டன.

DSC00295

ஆனால் மற்றுமொரு பக்கமும் உண்டு… என்னை ஆளும் தெய்வத்திற்கு நான் படைக்கும் காணிக்கை என்பது எத்துணை முதன்மையானது, அப்பழுக்கற்றது, வெண்மையானது, என் உயிருக்கு நிகரானது, இணையானது, இறைக்கு படைக்கத்தகுந்த உச்சிதமானது, உன்னதமானது என பொருள் கொள்ளும் வகையிலும் இவைகளை நாம் காண முடியும். இப்படியான ஒன்றைப் படைக்கும் மக்களின் உள்ளங்கள் எப்படி இருக்கும் என ஒரு கணம் சித்தித்துப் பார்ப்போம். தன்னை நிகரற்ற இறைப்பற்றாளன் என ஒருவன் நிகழ்த்திக்காட்டும் இடம் இது. தனக்கு நிகரான ஒன்றை காணிக்கையாக படைக்கிறவன் அவன். அவனுக்கு தன்னையே படைப்பதில் அச்சம் ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவன் இன்று எருசலேமுக்கு வெளியே புறம்பே தள்ளப்பட்டு இருக்கும் காட்சி நம்மை பதற வைக்கின்றது.

DSC00128

ஓலைகள் பசுமை நிறம் அடைந்த பின்பே பனையேறிகள் அவற்றை பயன்பாட்டிற்கென எடுத்துக் கொள்வார்கள். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த அறிவு கைமாற்றப்பட்டு வந்திருக்கிறது. திருச்சபை தனது புனித நாளை நினைவுகூறுவதோடு மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து பனையேறிகளிடமிருந்து ஓலைகளைப் பெற்றுக்கொண்டிருக்குமானால், இன்று திருச்சபை தனது பாவ அறிக்கையினை கூறுமிடத்து பனையேறிகள் வந்து பாவ மன்னிப்பின் உறுதியினை நமக்கு கூறியிருப்பார்கள். இன்று, எட்டாத தூரத்தில் நாம் அவனை விலக்கி வைத்துவிட்டோம்.

DSC00279

இனிமேல் நாம் செய்யக்கூடுவது என்ன? திருச்சபையின் ஆயர்கள் ஒரு முன்வரைவினை செய்துகொள்ள வேண்டும். எஞ்சியிருக்கும் பனைத்தொழிலாளர்களை திருச்சபைக்கு அழைக்கவேண்டும்.  பெரிய வியாழன் அன்று  பாதத்தை கழுவும் தருணத்துடன் பனையேறிகளை இணைத்துப்பார்ப்பது பெருமளவில் நமது புரிதலினை விரிவு படுத்தும்.  தழும்புகள் நிறைந்த கால்கள், வெடிப்புகள் நிறைந்த பாதங்கள், காய்த்துப்போயிருக்கும்  உள்ளங்கால்கள், உண்மையிலேயே நாம் யாருக்கு பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் எனும் உண்மையினை எடுத்துக்கூறும் வல்லமை மிக்கவை.  நமது சுக வாழ்வு சுகித்திருக்க, தனது பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் கர்மவீரர்களை நாம் முன்னிறுத்தும் ஒரு நிகழ்வாகவே இது இருக்கும். தன்னை வருத்தி செய்யும் இவ்வித தவங்களே தவக்காலத்தின் நோன்புகளிலும் உயர்ந்தது என்பதனை நாம் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு தருணம் இது.

DSC00200

இயேசு கனிகளைத் தேடிவந்த நிகழ்வு புனித வாரத்தில் நாம் தியானிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதி. அத்திப்பழத்திற்கும் ஒரு காலம் உண்டு என இதன் வாயிலாக அறிகிறோம். ஆனால், பனை மரம் எல்லாக் காலங்களிலும் “கனி” கொடுக்கும் ஒரு மரம் என்பதனை நாம் முன்னிறுத்தத் தவறிவிட்டோம். ஆறு மாதங்கள் தொடர்ந்து பதனீரும், ஆறு மாதங்கள் நூங்கும், ஆறு மாதங்கள் பனம்பழமும், ஆறு மாதங்கள் பனக்கிழங்கும் என தொடர்ந்து “கனிகளை” கொடுத்துக்கொண்டே இருக்கும் மரம். தனது ஓலைகளால் வெம்மையினை நீக்கும் ஒன்றாகவும், ஓலைக்கலைஞர்களால் பல்வேறு பாத்திரங்களாகவும் வடிவெடுக்கும் இவைகள் இன்று திருச்சபையின் பயன்பாட்டிற்கு கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. குயவனை முன்னிறுத்தும் திருச்சபை, ஓலைக்கலைஞர்களை முன்னிறுத்தவில்லையென்று சொன்னால் நெகிழி பாவத்தை தொலைப்பது எப்படி?

DSC00441

பனை சார்ந்த உணவுகள் ஏழைகளால் தயாரிக்கப்படுபவை.  பனை உணவுகளும் ஏழைகளின் உணவுகளாகவே கருதப்படுகின்றன. குறிப்பாக பனம்பழங்கள் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றன. பெரும்பாலான பனை மரங்கள் உணவு உற்பத்திக்கான ஒன்றாக பயன்படுத்தப்படவில்லை. ஆகவே அவைகள் பொறுப்பில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. இயேசு இன்று ஒரு பனை மரத்தின் அடியில்  பசியோடு வந்திருந்தால் அவைகளின் அடியில் வீணடிக்கப்பட்டிருக்கும் பனம்பழங்களைக் கண்டு கண்ணீர் சிந்தியிருப்பார். “திருச்சபையே, உனக்கு கிடைத்திருக்கும் இந்த நாளிலாகிலும் நீ உன் சமாதானத்துக்கேற்றவைகளை அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும் இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கின்றன” என்று கூறியிருப்பார்

DSC00479

பிரதம பேராயர் பனைமரம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தென்னிந்திய திருச்சபையில் அனேகர் பனையோடுள்ள உறவில் வாழ்ந்தவர்கள் தான். பனைமரங்களோடுள்ள உறவே பாவம் என கருதி நெகிழியால் திருமுழுக்கு அடைந்து மீட்கப்பட்டுவிட்டோம் எனும் மமதையில் இருப்பதால், நெகிழி பாவம் குறித்த உணர்வில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் திருமறை மிகத்தெளிவாக ஒரு திருக்காட்சியினை முன்வைக்கின்றது.

DSC00473

“இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்”.(வெளி 9: 7)

DSC00301

இக்கூற்று நமது வாழ்வில், குருத்தோலைகளை பிடித்துக்கொள்ளுவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இணைந்தே நாம் இருப்பதற்கு இயற்கையின் அத்தாட்சியாக அவைகளே இன்று நம்மிடம் இருக்கின்றன. இவைகளைப் பொருளுள்ளதாக பயன்படுத்துவதே தவக்கால நோன்பாக இருக்கக்கூடும். இல்லையேல் நமது நோன்புகள் வெளிவேடக்காரரை ஒத்திருக்கும் என்பதனை பரமண்டலங்களில் இருக்கும் பரம்பிதா மட்டுமல்ல பனை மரத்தின் மேலிருக்கும் பனையேறிகளும் அறிவார்கள்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மத்தூர், கிருஷ்ணகிரி

9080250653

malargodson@gmail.com


%d bloggers like this: