என்னைப்பற்றி
இறைப்பணியில் மூன்றவது தலைமுறையாக பணியாற்ற நான் அழைக்கப்பட்டவன். தற்பொழுது மும்பை பட்டணத்தில் மெத்தடிஸ்ட் திருச்சபையில் சேர்ந்த்து, இளம் போதகராக அபிஷேகத்திற்காக காத்திருக்கிறேன். மாணவர் கிறிஸ்தவ இயக்கம் மூலமாக பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் சேரும் அரிய வாய்ப்பு என் வாழ்வை திசைப்படுத்தியது. இவ்விதமாகவே என்னால் மேதா பாட்கருடன் சேர்ந்த்து நர்மதை இயக்கத்தில் கலந்து போரடும் வாய்ப்பு அமைந்தது, மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தோடு சேர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொண்டாற்ற முடிந்தது, மும்பை வாழ் தெருவோரக் குழந்தைகழுக்காக என் நேரத்தை பகிர முடிந்தது, தற்பொழுதும் போதகராக நான் நேசிக்கும் என் பிறந்த மண்ணாம் குமரியை விட்டு மும்பை பட்டணத்தில் வந்து பணியாற்ற முடிகிறது.
பனை மரம் எனது தீராத தேடலின் கரு. அது என்னை அழைத்துசென்ற இடங்களில் மட்டுமே என்னல் வேரூன்ற முடிகிறது. வரும் காலங்களில் பனையோடுகூடிய என் நெடும் பயணம் என்னை எங்கு இட்டுச்செல்லும் என்பதை அறியவே ஆவலாய் உள்ளேன்.
பனைஓலையில் நான் படைக்கும் ஒவியங்கள், இதுவரை நான் காப்புரிமை பெறாத எனது சொந்த கண்டுபிடிப்புகள்.
போதகப்பணியிலும், அனுதின வாழ்விலும் நான் சந்திக்கும் அனுபவங்கள் என் ஆன்மீகவாழ்விற்கு ஆற்றிய எதிர்வினையே இவ்வலைப்பதிவு. என்னை எழுதுவதற்கு தூண்டிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
காட்சன் சாமுவேல்
5:37 பிப இல் நவம்பர் 12, 2009
வாழ்த்துக்கள்..!
10:29 முப இல் நவம்பர் 13, 2009
நன்றி!
5:33 முப இல் மார்ச் 10, 2011
மிகுந்த சந்தோஷம் காட்சன். 16 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களை இந்த வலைப்பூவில் புதிய முகத்துடனும் பரிணாமத்துடனும் காண்பது பெரும் உவகை அளிக்கின்றது.
தொடரட்டும் உமது பணி / எழுத்து பயணம்.
11:19 முப இல் ஜூலை 18, 2016
உங்கள் பணிதொடர வாழ்த்துகள்
3:35 பிப இல் ஜூலை 18, 2016
We would like to work with you and share our knowledge on Panai maram. Thanks for talking to me today. We start our Nedum panai payanam this day onward.
with best wishes
P. RAVICHANDRAN
PLANT SCIENCE
M.S. UNIVERSITY
TIRUNELVELI
7:43 பிப இல் மார்ச் 9, 2019
[…] கவிதைக்கான கருத்துக்கள் : காட்சன் சாமுவேல் https://pastorgodson.wordpress.com/about/ […]